Friday, 16 December 2011

கருங்கலில் 23-ல் லிம்கா சாதனைக்காக 1500 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி

குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவையின் இணையதளம் தொடக்கவிழா நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ தலைமை வகித்தார். இணையத்தளத்தை அருட்தந்தை ஜார்ஜ்பொன்னையா, டாக்டர் சுமித்ரா, கான், ஸ்காட் கல்லூரி முதல்வர் ஜேசர் ஜெபநேசர் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பின்னர் பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ நிருபர்களிடம் கூறியதாவது:
குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி வருகிற 23ம் தேதி கருங்கலில் நடக்கிறது. இதில் 1500க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கலந்துகொள்கின்றனர். விசாகபட்டினத்தில் கடந்த 2009ம் ஆண்டு 1008 கிறிஸ்துமஸ் தாத்தா ஒன்று கூடியதே லிம்கா சாதனை யாக உள்ளது. லிம்கா சாதனைக்காக இந்த கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி நடத்துகிறோம். பேரணி கருங்கல் சிஎஸ்ஐ ஆலயம் அருகில் இருந்து தொடங்கி கருங்கல் பஸ் நிலையத்தில் முடிகிறது.
இந்த நிகழ்ச்சியில் குமரிமாவட்டத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் அனைத்து மத தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா குழு போட்டியும் நடத்தப் பட்டு பரிசு வழங்கப்படுகிறது. போட்டி ஏற்பாடுகளை ஐக் கிய இளைஞர் பேரவை தலைவர் காட்வின், பொரு ளாளர் ராபின், சட்ட ஆலோ சகர் ஜோசப்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கு புதிய "யு ட்யூப் ஸ்கூல்" : வீடியோ பார்த்து படிக்கலாம்

முற்றிலும் கல்வி தொடர்பான வீடியோக்களை மட்டுமே பார்க்கக்கூடிய "யு ட்யூப் ஸ்கூல்" என்ற புதிய இணைய தளத்தை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை உடனுக்குடன் வீடியோவாக யாரும் இடம்பெறச் செய்யக்கூடிய வகையில் யு ட்யூப் இணைய தளம் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிக வரவேற்பு பெற்ற வீடியோ இணைய தளமான அதில் எல்லா துறைகளை சேர்ந்த கோடிக்கணக்கான வீடியோக்களை பார்க்க முடியும். அதில் பள்ளி கல்வியும் அடங்கும்.
ஆனால், நம்நாட்டில் �ஸ்மார்ட் கிளாஸ்� என்ற பெயரில் இணைய தள வழி கல்வி அளிக்கும் பள்ளிகள் இருந்தாலும், யு ட்யூப் பார்க்க பள்ளி மாணவர்களுக்கு தடை உள்ளது. ஏனெனில், அதில் குழந்தைகளின் வயதுக்கு பொருந்தாத விஷயங்களும் இடம்பெறுகிறது. எனவே, நல்ல வீடியோக்க ளை குழந்தைகள் வீட்டு கம்ப்யூட்டரிலோ, ஐபேட் போன்ற கருவிகளிலோ தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதை தவிர்க்கும் வகையில், யு ட்யூப் ஸ்கூல் என்ற பெயரில் இணைய தளத்தை கூகுள் இப்போது தொடங்கியுள்ளது. அதில் பள்ளிக் கல்வி தவிர மற்ற வீடியோக்களை காண முடியாது. இதனால், உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள பள்ளி கல்வி தொடர்பான வீடியோக்களை காட்டி பள்ளிகளின் ஸ்மார்ட் கிளாசில் ஆசிரியர்கள் சொல்லித் தர முடியும். ஐபேட் போன்ற தனிப்பட்ட கருவிகளிலும் மாணவர்கள் பயன் பெற முடியும்.
இதேபோல, யு ட்யூப் எஜுகேஷன் என்ற இணைய தளத்தில் இருந்து வீடியோக்களை ஆசிரியர்கள் தேர்வு செய்து மாணவர்களுக்கு அளிக்க முடியும். அதில் உள்ள 4.5 லட்சம் கல்வி வீடியோக்கள் யு ட்யூப் ஸ்கூல் இணைய தளத்துக்கு மாற்றப்படுகின்றன.

மின் பற்றாக்குறைக்கு யார் காரணம்? : 3,225 மெகா வாட் உற்பத்திக்கான மின்சார திட்டப் பணிகள் தாமதம்

மின்வாரியத்தின் அலட்சிய போக்கால், கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006&07ம் ஆண்டில் மொத்த மின்தேவை 10,098 மெகா வாட். அப்போது, மொத்தம் 1 கோடியே 85 லட்சம் மின் நுகர்வோர்கள் இருந்தனர். அப்போதைய மின்பற்றாக்குறை 300 மெகா வாட் ஆக இருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் 2.23 கோடி மின் நுகர்வோர்கள் இருப்பதால், ஒரு நாளின் மின்சார தேவை 10,500 முதல் 12,000 மெகா வாட் ஆக அதிகரித்திருக்கிறது.
அனல், நீர், காற்று உள்ளிட்டவை மூலம் ஏறத்தாழ 10,122 மெகாவாட் மின் உற்பத்தியை மின்சார வாரியம் செய்கிறது. இதில், காற்றாலை மின் உற்பத்தி தற்போது மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. தற்போது 2,500 முதல் 3,000 மெகா வாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் யூனிட் ஒன்றுக்கு ரூ 7 முதல் ரூ 13 வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்சார பற்றாக்குறையை தீர்க்க உருவாக்கப்பட்ட மின்திட்டங்கள், திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்காமல், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் மொத்தம் 10,122 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 10,214 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே மின்வாரியம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளது, நுகர்வோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மீதமுள்ள மின்திட்டங்கள் திட்டமிட்டப்படி செயல்படுத்தாமல், பல மாதங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டு வருவதே, மின்பற்றாக்குறைக்கு காரணம். இதனால், வெளிசந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ 19 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கு மின்சாரம் வாங்க ரூ 23 ஆயிரத்து 360 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் ஒரு நாள் வருமானம் ரூ 60 கோடி. இதில் மின்சாரம் வாங்குவதற்கு மட்டுமே ரூ 50 கோடி வரை செலவிடப்படுகிறது. இப்படி மின்சாரம் வாங்கவே பல ஆயிரம் கோடி கணக்கில் செலவிடும்போது, வாரியம் நஷ்டம் ஏற்படாமல் எப்படி லாபத்தில் இயங்கும் என்பது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், ஆண்டுதோறும் மின் நுகர்வோர் எண்ணிக்கை 9 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது என்று தெரிந்திருந்தும், அதற்கான திட்டப்பணிகளை முடுக்கிவிடாமல் இருந்தது, மின்வாரியத்தின் அலட்சியமே காரணம். இறுதியாக, வாரியத்துக்கு பெரிய நஷ்டம் என்று கூறி மக்களின் தலையில் கட்டண உயர்வாக விழுகிறது.
இழுத்தடிப்புக்கு காரணம் என்ன?
கடந்த 2007ம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 3,225 மெகா வாட் மின்உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டமிட்டப்படி, இதில் பெரும்பாலான பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மின்நிலையங்களில் தற்போது 75 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தில், திட்டமிட்டப்படி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பணிகள் முடித்து, மே மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். தற்போது, தேதி மாற்றப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடசென்னையிலேயே மற்றொரு 600 மெகா வாட் கொண்ட உற்பத்தி நிலையத்தில், கடந்த ஆகஸ்டில் பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இதுவும், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையம், திட்டமிட்டப்படி கடந்த ஏப்ரலில் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலையில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இது, கடந்த செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. பின்னர், தற்போது 2வது முறையாக 2012 மார்ச் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், தூத்துக்குடியில் 500 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தில், வரும் ஜனவரியில் பணிகள் முடிக்கப்பட்டு, மார்ச்சில் உற்பத்தி தொடங்க வேண்டும். ஆனால், இதற்கான பணிகளும் தாமதமாகவே நடக்கிறது.
மேற்கண்ட திட்டப் பணிகளில் தற்போது 70 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மொத்த திட்டப்பணிகளும் முடிக்கும்போது, தமிழகத்துக்கு 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதற்கிடையே, அணு மின்நிலையத்தில் பணிகள் முடிக்கும் நிலையில், எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா.? அதன் மூலம் மின்சாரம் கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.    (Dinakaran)

அரிசி, பருப்பு, பூண்டு விலை குறைந்தது : விளைச்சல் அதிகரிப்பு எதிரொலி

விளைச்சல் அதிகரிப்பால் பருப்பு மற்றும் கொத்தமல்லி, பூண்டு, அரிசி விலை குறையத் தொடங்கியுள்ளது. பருப்பு கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது.
குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நல்ல விளைச்சல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2 கப்பல்களில் இறக்குமதி போன்ற காரணங்களால் பருப்பு விலை குறைய தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் 1 கிலோ துவரம் பருப்பு ரூ 70க்கு விற்கப்பட்டது ரூ 60க்கும், தான்சினியா துவரம் பருப்பு ரூ 55 லிருந்து ரூ 45 ஆகவும் குறைந்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது. மேலும், உளுந்தம் பருப்பு ரூ 70 லிருந்து ரூ 60க்கும், உளுந்தம்பருப்பு(பர்மா), ரூ 65 லிருந்து ரூ 55க்கும், பாசிப்பருப்பு ரூ 75 லிருந்து ரூ 65க்கும்; 2ம் ரகம் ரூ 60 லிருந்து ரூ 50க்கும், கடலைப்பருப்பு ரூ 60 லிருந்து ரூ 54க்கும்; 2ம்ரகம் ரூ 55லிருந்து ரூ50க்கும் விற்கப்படுகிறது. புது வரவு அதிகரிப்பு மற்றும் இறக்குமதியால் இந்த விலை வருங்காலங்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
அதே போல் கர்நாடகா, ஓசூர் போன்ற பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் புளி முதல் ரகம் கிலோ ரூ 130 லிருந்து ரூ 110; 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80க்கும், வத்தல் முதல் ரகம் ரூ 200 லிருந்து ரூ 160க்கும், 2ம் ரகம் ரூ 170லிருந்து ரூ 120க்கும், கொத்தமல்லி ரூ 70லிருந்து ரூ 60க்கும், மலைப்பூண்டு ரூ 130 லிருந்து ரூ 100க்கும், நாட்டுப்பூண்டு முதல் ரகம் ரூ 140லிருந்து ரூ 110க்கும், 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80 ஆகவும் விலை குறைந்துள்ளது.
ரூபாலி அரிசி கிலோ ரூ 20 லிருந்து ரூ19க்கும், அதிசய பொன்னி ரூ 24 லிருந்து ரூ 22க்கும், இட்லி அரிசி முதல் ரகம் ரூ 22லிருந்து ரூ 19க்கும்; 2ம் ரகம் ரூ 20லிருந்து ரூ 17க்கும், பாபட்லா புதுசு ரூ 26லிருந்து ரூ 24க்கும், பாபட்லா பழையது ரூ 30லிருந்து ரூ 28க்கும், வெள்ளை பொன்னி ரூ 38 லிருந்து ரூ 36க்கும், பொன்னி பச்சரிசி ரூ 22லிருந்து ரூ 20க்கும், புது பச்சரிசி ரூ 30லிருந்து ரூ 28க்கும், பாசுமதி அரிசி முதல் ரகம் ரூ 85 லிருந்து ரூ 80க்கும்; 2ம் ரகம் ரூ 65லிருந்து ரூ58க்கும், 3ம் ரகம் ரூ 50லிருந்து ரூ 43 ஆகவும் குறைந்துள்ளது.
ஆந்திராவில் இருந்து புது அரிசி வரத் தொடங்கியுள்ளதாலும், காஞ்சிபுரம், திண்டிவனம், ஆரணி, செங்கல்பட்டு, பொன்னேரி, ரெட்ஹில்ஸ் உள்பட பல பகுதிகளில் நல்ல விளைச்சல் காரணமாகவும் அரிசி விலை குறைந்துள்ளது. அடுத்தவாரம் இந்த விலை கிலோவுக்கு ரூ 3 வரை குறைய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.சொரூபன் தெரிவித்தார். சில்லரை கடைகளில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ 5 வரை அதிகமாக விற்கப்படுகிறது.

இந்த ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்புக்கும் செய்முறைத் தேர்வு : 10ம் வகுப்பு தேர்ச்சியை அதிகரிக்க அதிரடி முடிவு

அறிவியலுக்கு மதிப்பெண் தளர்வு
எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 25 மதிப்பெண் செய்முறைக்கும், 75 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்முறையில் 20 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வில் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல், கணக்கு பாடங்களில்தான் அதிக அளவில் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். இதனால், அந்த பாடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
மேலும், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், செய்முறை தேர்வில் 20 மதிப்பெண், எழுத்துத் தேர்வில் 15 மதிப்பெண் எடுத்து மொத்தம் 35 மதிப்பெண்கள் அறிவியல் பாடத்தில் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கவும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தனியாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. ஆனால், எழுத்துத் தேர்வில் 35 அல்லது அதற்கு மேலும் மதிப்பெண் எடுத்து, செய்முறையில் 20 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்தால் தோல்வி தான்.
இந்த புதிய திட்டத்தின்படி கிராமப்புற மாணவர்களும் அறிவியல் பாடத்தில், இந்த ஆண்டு அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையில், பத்தாம் வகுப்பில் கணக்கு, அறிவியல் பாடங்கள் சற்று கடினமாக உள்ளது. இதுதான், மாணவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகளை மார்ச்சில் நடத்த தேர்வுத் துறை உத்தேசித்துள்ளது.

களியக்காவிளை - நாகர்கோவில் புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கல்லுக்கட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக களியக்காவிளையில் இருந்து திட்டங்கனாவிளை, தாரப்பழஞ்சி, அதங்கோடு, காப்புக்காடு, நட்டாலம் வழியாக நாகர்கோவில் வரையும் அளவீடு செய்யப்பட்டு ள்ளது. நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் புதிதாக புறவழிச்சாலை அமையும் போது 500க்கும் மேற்பட்ட வீடுகள், வழிபாட்டு தலங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு என்.எச்.47ல் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு சொந்தக் காரர்கள் அரசிடம் இருந்து இழப்பீடு பெற பூத்துறையை அடுத்த கல்லுக்கெட்டியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்புத்துறை அலுவலகத்திற்கு தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை காண்பித்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நிலத்திற்கான ஆவணத்துடன் அலுவகத்திற்கு வந்தனர்.
அப்போது நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புறவழிச்சாலைக்கு எதிராக பேராட்டம் நடத்தி வரும் என்.எச். 47 பாதுகாப்பு நடவடிக்கை குழு தலைவர் ஜார்ஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுலீப், லெட்சுமி நாரா யணன், புறவழிச்சாலை நலச்சங்க தலைவர் ஜஸ்டஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கலைந்து சென்றதை அடுத்து நெல்லையில் இருந்து வந்த சிறப்பு தாசில்தார் மற்றும் அதி காரிகளிடம் இழப்பீட்டு நடவடிக்கைக்காக தங்கள் நில ஆவணங்களை காண்பித்தனர். (Dinakaran)

உயர் நீதிமன்றத்தில் கேரளா புதிய மனு : அறிக்கையில் குட்டிகரணம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மேற்கொண்டுள்ள பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் எந்த ஆபத்தும் ஏற்ப டாது என்றும் நில நடுக்கம் காரண மாக அணை உடைந்தால் கூட அதிலிருந்து வெளி யேறும் தண்ணீ ரை இடுக்கி, குள மாவு, செருதோணி ஆகிய அணை கள் தாங்கும் என்று கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், அரசு சார்பில் வேறொரு அறிக்கை விரைவில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும� இதற்காக 4 பேர் அடங்கிய அமைச்சரவை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கேரள அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அட்வகேட் ஜெனரலின் கருத்துக்கு நேர் எதிரான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
முல்லை பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் மக்களை பாதிக்கும். அணை யில் 136 அடி தண்ணீரை தேக்கி வைத்தால் கூட பாதுகாப்பு இல்லை. அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை தாங்கும் சக்தி இடுக்கி மற்றும் செறுதோணி அணைகளுக்கு கிடையாது. ஏனென்றால் இந்த இரு அணைகளுக்கும் மதகு இல்லை. குளமாவு அணை க்கு மட்டுமே மதகு உள்ளது. முல்லை பெரியாறு அணை யில் நடைபெற்ற பலப்படுத்தும் பணிகள் போதுமானதாக இல்லை. அணை மிகவும் பலவீனமாக இருப்பதால் கேரள அரசு புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

முதல்வர் பதவியை தராவிட்டால் : பாஜ தலைவரிடம் எடியூரப்பா மிரட்டல்

கர்நாடகாவில் விபரீதம் நடக்கும்
கர்நாடக பாஜ.வில் தனக்கு ஆதரவாக 72 எம்எல்ஏ.க்கள் இருப்பதால் மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இவர் மேலிட தலைவர்களை சந்தித்து முதல்வர் பதவி அல்லது மாநில பாஜ தலைவர் பதவி பெறுவதில் குறியாக இருக்கிறார். அதே நேரம், "எனக்கு பதவி ஆசையில்லை. கர்நாடகாவில் கட்சியை வழி நடத்துவது பற்றியும், மேலவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்க டெல்லி வந்தேன்" என்று எடியூரப்பா கூறினார். இந்த நிலையில், டெல்லியில் பாஜ தேசிய தலைவர் நிதின் கட்கரியை சந்தித்த எடியூரப்பா, முதல்வர் பதவி வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளார். "தமிழக முதல்வர் ஜெயலலிதா, எஸ்.எம் கிருஷ்ணா ஆகியோர் மோசடி வழக்கில் சிக்கியிருந்தும் பதவியில் நீடிக்கிறார்கள். எனவே, மீண்டும் எனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்." பதவி வழங்காத நிலையில் கட்சியில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன். இதனால் கர்நாடக பாஜ.வில் விபரீதங்கள் ஏற்படும்� என்று எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர் அத்வானியையும் எடியூரப்பா சந்தித்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, அத்வானியிடம் எடியூரப்பா தனது கோரிக்கை குறித்து விளக்கி கூறினார். இந்த சந்திப்பின்போது 10 எம்.பிக்கள் உடன் இருந்தனர். தனக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கட்கரியிடம் எடியூரப்பா கொடுத்துள்ளார். (Dinakaran)

பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ல் ஆரம்பம் : அட்டவணை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி முடிகிறது. தேர்வு கால அட்டவணையை அரசு பொது தேர்வுகள் துறை நேற்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பிளஸ்2 தேர்வை 7.50 லட்சம் மாணவ&மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். 2008ம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதே போல கூடுதலாக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஆகும். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு முக்கிய படமான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு இடையே விடுமுறை நாட்கள் உள்ளன.

கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை : சேலத்தில் பரபரப்பு

சேலம் அம்மாபேட்டையில் தனியார் கோயிலுக்குள் எஸ்.சி., மக்கள் நுழையக்கூடாது என திடீர் தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் சீதா ராமச்சந்திரமூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோயில் உள்ளது. 1986ம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டது. கிருஷ்ணா நகர், வித்யா நகர், பச்சப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் வழிபட்டு வந்த நிலையில், திடீரென்று நேற்று முதல் பச்சப்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்த நோட்டீஸ் கோயில் கதவுகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மறு தீர்மானம் நிறைவேற்றும் வரை கோயில் நடை சாத்தப்படுகிறது என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயில் நிர்வாகத்தின் திடீர் முடிவால், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கோயில் முன் திரண்டுவந்து தேவஸ்தான நிர்வாகிகளைக் கண்டித்து கோஷம் போட்டனர். தடை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பச்சப்பட்டியைச் சேர்ந்த சித்ரா, சீரங்காயி, சுகுணா, ஜானகிராமன் ஆகியோர் கூறியது: இத்தனை ஆண்டுகளாக அனைத்து மக்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக எங்களிடமும் நன்கொடை வசூலித்துள்ளனர். இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்பது ஜாதி மோதலை உருவாக்குவது போல உள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோயிலின் அர்ச்சகர் கண்ணன் கூறுகையில், “கோயில், நிர்வாகிகள் நேற்று இரவு 11 மணியளவில் கூடி, இந்த முடிவைஎடுத்துள்ளனர். இதுபற்றி, தேவஸ்தானத்தின் சிறப்பு ஆலோசகருக்கும் கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை,’’ என்றார்.
இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Thursday, 15 December 2011

விடாது கருப்பு : வடிவேலுவை துரத்துகிறது

வடிவேலு மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி பெண் மனு
மதுரை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் வேலுச்சாமி, நடிகர் ராஜ்கிரணிடம் முதலில் பணியாற்றினார். அப்போது நடிகர் வடிவேலுவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், வடிவேலுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. வடிவேலுவிடம் மேனேஜராக வேலைக்கு சேர்ந்த என் கணவர், 2009ல் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை செய்யாமல் அவரது உடலை அடக்கம் செய்து விட்டனர். இதில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். வடிவேலு மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். உள்துறை செயலர், டிஜிபிக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் பாண்டீஸ்வரி கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்து, உள்துறை செயலர், டிஜிபி 1 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் மணிகண்டன், அரசு சார்பில் வக்கீல் ராஜேஸ்வரன் ஆஜரானார்.  (tamil murasu)

Illegal alcohol kills 126 in West Bengal : Dead likely to increase


More than 100 people have been killed by contaminated homemade alcoholic spirits in the Indian state of West Bengal.
Most of the dead are poor manual labourers, rickshaw pullers and hawkers who drank the "country liquor" at a series of makeshift bars all supplied by the same illicit distillery in the town of Diamond Harbour.
Scores more are being treated in hospital and the death toll is expected to continue rising.
"I had purchased two half-litre pouches for 10 rupees while returning home last evening and drank the liquor before dinner. After midnight I felt a pain in my throat. Then I started vomiting," Julfikar Saddar, 35, told the Calcutta Telegraph newspaper from his hospital bed.
This kind of poisoning is frequent in India where local police and inspectors regularly take bribes to turn a blind eye to the production and sale of illicit alcohol, also known as desi daroo. Most cases go unreported.
In 2009, 130 people were killed by illegally produced alcohol in a similar incident in the western state of Gujarat.
Mamata Banerjee, the chief minister of West Bengal, told local media that "consumption of illicit liquor is a social disease" that "has to be eradicated".
Four people are under arrest and 10 illegal shops selling alcohol have been demolished in Diamond Harbour, officials have said.
Angry locals are reported to have destroyed the distillery blamed for the tragedy.
Local residents said one shop was opposite a police station but had been trading openly.
A litre of "chpeti", the local spirit, costs 10 rupees. A manual labourer in India usually earns around 150 rupees for a day's work. The drink is often sold door-to-door by salesmen on bicycles.
Alcoholism is a significant problem in both rural and urban areas.
The state of West Bengal is one of the poorest in India and suffers from some of the deepest corruption.
This week a fire in a hospital killed 90 people in the state capital of Kolkata. It is believed to have started in a carpark under an annex that was being used as a store in breach of local regulations.

உரிமையை விட்டுத்தர மாட்டோம் : முல்லை பெரியாறு அணை விவகாரம்

சட்டசபையில் ஜெ. கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை கூடியது. முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்காலத்தில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வேண்டும். அதற்காக அணையை பலப்படுத்துவதற்கு கேரளா தடையாக இருக்கக் கூடாது என்று தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழக தொழிலாளர்கள், அவர்களது வாகனங்கள் மீது தாக்குதல் நடந்தது. அதற்கு பதிலடியாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. இதற்கிடையே, கேரள சட்டசபையில் கடந்த 9&ம் தேதி முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் போராட்டம் வலுத்தது. தேனி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
கேரளாவை போல தமிழக அரசும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, முல்லை பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று, தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 15&ம் தேதி நடக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, தமிழக சட்டசபையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 10 மணியில் இருந்தே அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்த வண்ணம் இருந்தனர். முதல்வர் ஜெயலலிதா, 10.55க்கு சபைக்குள் வந்தார். அதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள், மு.க.ஸ்டாலின் தலைமையில் வந்தனர். முதல்வருக்கு ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு முதல்வரும் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தேமுதிக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்தனர். பின்னர் விஜயகாந்தும் அவைக்கு வந்தார்.
சரியாக 11 மணிக்கு அவை தொடங்கியது. சபாநாயகர் ஜெயக்குமார், திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 9 பேருக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் வாசித்தார். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் சொ.கருப்பசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் படித்தார். முதல்வர் உள்பட அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 15 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 11.20 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அவை முன்னவரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பேரவை விதி 35-ஐ தளர்த்தி, அரசு அலுவல்களை இன்று எடுத்துக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் நிலை குறித்த சிறப்பு தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். ‘முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் வகையில், நீர்ப்பாசன சட்டத்தில் கேரள அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு தடையாக இருக்கக் கூடாது’ என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து பேசினர். முடிவில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடவுள்களின் சொத்து கணக்கு : ஏழுமலையானுக்கு அடுத்து காளஹஸ்தி சிவன்தான் பணக்காரர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சில கோயில்களின் உண்மையான சொத்து கணக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. 
இது குறித்து நீதிமன்றத்திலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களை தவிர்த்து, மற்ற அனைத்து கோயில்களின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, வருமானத்தின் அடிப்படையில் கோயில்கள் வகைப்படுத்தப்பட்டன. ஆண்டுக்கு ரூ. 25 லட்சத்துக்கும் மேல் வருமானம் உளள 7 கோயில்கள் 6&எ எனவும், அதற்கு குறைவான வருமானம் உள்ள 33 கோயில்களை 6&பி எனவும், இதை விட குறைவான வருமானமுள்ள கோயில்களை 6&சி எனவும், 33 மடங்கள் 6&டி எனவும் வகை பிரிக்கப்பட்டுள்ளன. 3,073 கோயில்களில் 161 மட்டுமே இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மற்றவை தர்மகர்த்தாக்கள், பரம்பரை தர்ம கர்த்தாக்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த கோயில்களில் மொத்தம் 103.321 கிலோ தங்க நகைகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 26.50 கோடி. மேலும், 15,068 கிலோ 330 கிராம் வெள்ளி உள்ளது. இதன் மதிப்பு ரூ. 8.50 கோடி.
இதில், திருப்பதி ஏழுமலையானுக்கு அடுத்தபடியாக சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி சிவன் கோயிலுக்குதான் அதிக சொத்துகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்த கோயிலுக்கு 30 கிலோ தங்கமும், 13,809 கிலோ வெள்ளியும் உள்ளன.

தந்தை & மகன் கைது : 3 கோடி திருடி சொந்தமாக கல்வி அறக்கட்டளை

வேலை செய்த அறக்கட்டளையில்
திருப்பூர் மாவட் டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசா�ரதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத் தார். அதில், அய்யப்பன்தாங்கலில் கல்வி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தேன். இங்கு காந்தி என்ற முத்துகிருஷ்ணன்(55), அவரது மகன் விஜயகுமார் (33) ஆகியோர் வேலை செய்து வந்தனர். 
இந்நிலையில் அறக்கட்டளை வரவு& செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ 3,40,88,517 மோசடி செய்து திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து காந்தி, விஜயகுமாரிடம் விசாரித்தால் முறை யான பதில் அளிக்க வில்லை. மேற்கொண்டு விசாரித்ததில் என்னுடைய கல்வி அறக்கட்டளை பணத்தை மோசடி செய்து திருடி காந்தி தன்னுடைய பெயரில் பல்வேறு இடங்களில் கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி விட்டார். இதற்கு அவரது மகன் விஜயகுமார் உடந்தையாக உள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் ஸ்ரீதரன் தலைமையில் எஸ்ஐக்கள் காளிதாஸ், கோபாலகிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த காந்தி, விஜயகுமாரை நேற்று போலீசார் அய்யப்பன் தாங்கல் வழியாக வெளியூர் தப்ப முயன்றபோது கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் சைதாப்பேட்டை குற்றவியல் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பஞ்சாப் விநோதம் : மைனஸ் மதிப்பெண் பெற்ற மாணவர் வெற்றி

பஞ்சாப் நீதித்துறைக்கு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் மைனஸ் 10 மதிப்பெண்கள் பெற்ற பழங்குடியின மாணவர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநில நீதித்துறையில் காலியாக உள்ள துணை நீதித்துறை அதிகாரி பதவிக்காக, பஞ்சாப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது.
இந்த தேர்தல் முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள பிரதான தேர்வை எழுத, கட் & ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டவர், விளையாட்டு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என 13 பிரிவுகளின் கீழ் 979 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவுக்கான கட்&ஆஃப் மதிப்பெண், அதிகபட்சமாக 315 எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பழங்குடியினருக்கான பிரிவில் 6 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் மஞ்ஜிந்தர் கவுர் என்பவர் அதிகபட்சமாக 285 கட்&ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆனால், தஜிந்தர் சிங் என்ற மாணவர், முதல்நிலை தேர்தவில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி, மைனஸ் 10 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். இவர், 23 கேள்விகளுக்கு சரியான பதிலும், 102 கேள்விகளுக்கு தவறான பதிலும் எழுதியுள்ளார்.
இருப்பினும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராக மட்டுமின்றி, முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்ற சிறப்பு பிரிவின் கீழும் இவர் ஒருவர் மட்டுமே வருகிறார். எனவே, வேறுவழியின்றி பிரதான தேர்வுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது யாரும் கிடைக்கவில்லை.

"ரூ.200 கட்டினால் 50 ஆயிரம் கடன்" : பொதுமக்கள் சிறைவைத்த அறக்கட்டளை நிர்வாகிகள்

திருவனந்தபுரம் படூர்குழி பகுதியை மையமாக கொண்டு அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், தங்களிடம் ரூ.200 கட்டினால் 3 மாதத்தில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் 18 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த குழுவினர் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை அணுகியுள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன் மார்த்தாண்டம் அடுத்த மருதங்கோடு ஊராட்சியில் ஒரு மண்டபத்தை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இந்த குழுவை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் லோன் தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள மக்களை ஊராட்சி மன்ற மண்டபத்துக்கு வரவழைத்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் ரூ.200 முதல் 300 வரை வசூல் செய்துள்ளனர். இதற்கு ரசீதும் வழங்கியுள்ளனர். ஆனால் இந்த ரசீதில் உள்ள பதிவு எண்கள் பலவிதமாக இருந்தது. போன் எண்ணும் இல்லை.
இதுகுறித்து மக்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் 4 பேரையும் மண்டபத்திலேயே சிறைபிடித்தனர்.
தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் அவர்கள் வந்த காரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது தாங்கள் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாக கூறினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பொங்கலுக்கு தென்மாவட்டங்களுக்கு முன்பதிவு தொடங்கியது : 700 சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் 700 சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளன. தென் மாவட்டங்களுக்கு செல் லும் பஸ்களுக்கான முன் பதிவு தொடங்கிவிட்டது.
அடுத்த மாதம் 15ம் தேதி ஞாயிற்று கிழமை பொங்கல் திருநாள் தொடங்குகிறது. தொடர்ந்து 17ம் தேதி வரை விடுமுறை இருக்கிறது. இதனால் ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் ரயிலில் டிக்கெட் கிடைக்காததால் ஏராள மான மக்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களே நம்பி யுள்ளனர்.அரசு விரைவு போக்கு வரத்து கழகம் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, புதுச்சேரி உள் ளிட்ட பல்வேறு இடங்க ளு க்கு 50 ஏசி பஸ்கள் உட்பட மொத்தம் 956 பஸ்களை இயக்குகின்றன. இந்நிலையில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் தென்மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பஸ்களை இயக்கு கிறது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் 500 சிறப்பு பஸ்களையும் இயக் குகிறது. இதுதவிர கோவை, நெல்லை, கும்ப கோணம் போக்குவரத்து கழகங்கள் 100 சிறப்பு பஸ் களையும் இயக்கவுள்ளது.
இதுகுறித்து போக்கு வரத்து கழகங்களின் அதிகாரிகள் கூறியதாவது:
மக்களின் தேவைக்கு ஏற்ப பொங்கல் பண்டி கைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். ஒரு மாதத் திற்கு முன்பு நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நீண்ட தூர பயணம் செய்யும் பஸ் களில் முன்பதிவு செய்யப் படும். அந்த வகையில் தென்மாவட் டங்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. தீபாவளி ஒரு நாள் என்பதால் மக்கள் கூட்டம் ஒரே நாளில் குவிந்துவிடும். ஆனால் பொங்கல் 4 நாட்கள் என்பதால் மக்கள் கூட்டம் படிப்படியாக வரும். எனவே மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் வரிசையாக இயக்கப்படும்.
தென்மாவட்டங் களுக்கு செல்லும் பயணிகள் சென்னையில் கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றி யூர், தி.நகர், பிராட்வே, தாம் பரம் ஆகிய பஸ்நிலையங் களில் முன்பதிவு செய்ய லாம். இதுதவிர மாவட் டங்கள் தோறும் 35க்கும் மேற்பட்ட முன்பதிவு மைய ங்கள் உள்ளன. மேலும் விரைவு போக்குவரத்து கழகத்தின் இணையதளத் தில் உள்ள இ&டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய லாம். மற்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு முன்பதிவு தேவையில்லை. மக்கள் கூட்டம் அதிகமாக வரும்போது டோக்கன் கொடுக்கப்படும். டோக்கன் கட்டணம் ரூ.5, ஏசி பஸ் களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

School 'asks' 840 students to buy iPads

Podar International School, Santacruz wants to introduce apple iPad2 for students of Std VI to XII; some parents feel that the Rs 40,000 expense is unnecessary.


"We moved from blackboards to interactive boards and from there to laptops and now, it is the iPad2."  -” Vandana Lulla, Director, Podar International School.
The government may be patting itself on the back for creating the world's cheapest, Android-based tablet Aakash at not more than Rs 3,000, but the homegrown gizmo is clearly not the Apple of this posh city school's eye. 

The middle and high school education at Podar International School in Santacruz seems ready to integrate Steve Jobs' legacy in daily learning. In a recent circular dated December 9, the school management informed parents that it has decided to introduce iPad2 in classrooms from the next academic year. While some parents welcomed the move, others feel the fancy tablet is not feasible for children.

Some parents have their reservations about the concept. K Mahesh (name changed), a parent of a pupil at Podar school, said, "I was a student once and I know what education is. If you change the syllabus, that is digestible. But if you change the system with some weird logic, it is problematic. I want my kid to follow the existing method of education that millions in this country are following, and setting a benchmark for others. I am not against the use of iPad. But I do no find it feasible for my kid."

Lulla said, "After observing how gadget-savvy students have become and how they are familiar with iPads, I took the initiative to introduce the iPad2. It will help students to retain the content. They can download as many textbooks as they want. Further, a research by a laptop manufacturing company concluded that more use of technology has improved the performance of students in subjects like Biology, Chemistry, History, and Earth Science."

Expert says


Jayant Jain, president of Forum For Fairness in Education and All India Federation of Parent Teacher Association, said, "If the school is so keen to bring in technology, parents should be given a choice to buy any company's tablet. But nowhere did the circular mention this. Nor did it say that parents who do not wish to buy their child an iPad2 could learn from interactive boards. This implies that it is mandatory for all. Also, the parent will have to bear the cost if the child drops and damages the expensive gadget. They are in a learning process, so why can't they be given cheaper tablets which can be updated by the school." 

Numbers
On an average, there are 30 students in one class in Podar and each class has four divisions. As such, there are approximately 840 students in the school from grade VI to XII.

விரட்டப்பட்ட கேரள தமிழர்கள் எல்லையில் குவிவதால் பதற்றம் :

தேவாரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
கேரளா வில் தமிழர்களுக்கு சொந்தமான ஏலத்தோட்டங்களை வெட்டி அழிப்பதில் மலையாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மாநிலம், உடுப்பஞ்சோலை, பாறைத்தோடு, மணத்தோடு, சதுரங்கப்பாறை உள்ளிட்ட இடங்களில் அதிகமான ஏக்கர் பரப்பில் ஏலத்தோட்டங்கள் உள்ளன. இதனை கடந்த இரண்டு தினங்களாக மலையாளிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இரவுநேரங்களில் புகுந்துவிடும் கும்பல் இங்குள்ள ஏலச்செடிகளை பறித்து எறிகின்றனர்.
தேவாரம் சதுரங்கப்பாறை அருகே தமிழருக்கு சொந்தமான காற்றாலை மின்சாரம் நான்கை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு கடைகளில் பொருட்களை வழங்கக்கூடாது. பஸ்களில் ஏற்றக்கூடாது என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் கேரள டாக்டர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே தமிழர்களை ஓட, ஓட விரட்டிஅடித்து வருகின்றனர்.
மேலும் பெண்களை மனிதாபிமானமின்றி நடத்தி வருகின்றனர். கேரள மாநில போலீசாரும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் அக்கறை காட்ட மறுத்துள்ளனர். இதனால் இடுக்கி மாவட்டத்தில் இருந்து ஆயிரம் குடும்பங்கள் வரை சாரை, சாரையாக சாக்கலூத்து மெட்டு, போடி மெட்டு வழியாக நடைபயணமாக வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் தேவாரம், கோம்பை, போடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று போராட்டம் சற்று தணிந்திருந்த நிலையில், விரட்டி அடிக்கப்பட்ட தமிழர்கள் வந்து குவிவதால், தமிழக&கேரள எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை குமுளி எல்லைப்பகுதியில் குவிந்திருந்த போலீசார், தற்போது போடி, தேவாரம், கோம்பை பகுதிக்கு விரைந்துள்ளனர். பதற்றத்தை தணிக்கும் வகையில் திண்டுக்கல் டிஐஜி சஞ்சய்மாத்தூர் தலைமையில் 500 போலீசார் தேவாரம் பகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இதற்கிடையில் கோம்பையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேனி கலெக்டர் பேச்சு:
தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பை அளித்திட நடவடிக்கை எடுக்குமாறு தேனிமாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, இடுக்கி மாவட்ட கலெக்டருடன் பேசினார். இதுகுறித்து தேனி கலெக்டர் பழனிச்சாமி கூறுகையில், �இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தமாவட்டத்தில் எந்த நிலைமை என்பதை உடனடியாக இடுக்கி மாவட்ட கலெக்டருடன் பேசி உள்ளேன். அங்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டியுள்ளேன். இங்கு வருபவர்களை அழைத்துச்செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தமிழர்களின் சொத்துக்களை பாதுகாத்திட போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தி உள்ளேன். வீடுகள் இல்லாதவர்களை தங்க வைத்திட தேவாரம் பகுதியில் சம்பந்தப்பட்ட தாசில்தார்களை அழைத்து தேவையான வசதிகள் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்� என்றார்.
குழந்தையுடன் வந்த பெண்:
சதுரங்கப்பாறை மலைப்பாதை வழியே தமிழகத்தை சேர்ந்த பெண், 3 மாத கைக்குழந்தையுடன் கேரளாவில் இருந்து தேவாரம் வந்தார். அங்கு தமிழர் குடும்பங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தமிழர்கள் தாக்கப்படுவதாகவும், தமிழகத்தில் தனக்கு வீடு கிடையாது. நான் எங்கு செல்வது என்று தெரியவில்லை என்று கூறி கதறி அழுதார்.

Wednesday, 14 December 2011

62 year Old lady breaks traffic rules 1500 times [62 வயது பாட்டிக்கு 62 லட்சம் அபராதம்]

An elderly British woman, living in Italy, has been finally slapped with motoring fines totalling over $118,000 (6 lacs) after being tracked for many days by Italian police investigators.
The 62-year-old woman, who has not been identified, was traced after her Mercedes Benz car was photographed breaking city speed limits and entering traffic restricted areas 1,500 times in a matter of weeks, the Daily Mail reported.
Initially, Italian police in Florence were hampered in their attempts to trace her, as her car carried a British number plate and they were not allowed access to vehicle registration systems in other countries.
The woman, who lives in Florence, the capital city of Tuscan region, was eventually nabbed after police spotted the Mercedes parked in a street in the city and waited for her to return to it.
Just as she arrived, policemen handed over the details of the staggering amount of unpaid fines.

[காரில் ஓவர் ஸ்பீடு : இத்தாலியின் டஸ்கன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்று அதிவேகமாக செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். நோ பார்க்கிங் பகுதிகளில் அந்த கார் நிறுத்தப்படுகிறது. போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் செல்கிறது என்றும் தெரியவந்தது. இங்கிலாந்து பதிவெண் கொண்டிருந்ததால் அதன் சொந்தக்காரர் யார் என்று போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கார் கடந்த சில நாட்களுக்குள் 1,500 முறை ஓவர் ஸ்பீடில் போனது தெரியவந்தது. 
இந்நிலையில், பிளாரன்ஸ் பகுதியில் ஒரு கடை வாசலில் அந்த கார் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்றனர். காரை நிறுத்திவிட்டு ஷாப்பிங் சென்றிருந்த 62 வயது மூதாட்டியை கையும் களவுமாக பிடித்தனர். போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக அவருக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.]

அப்பப்பா!!! ஒரு பால் உறவு : கோட்டாறு பகுதியில் : கணவன்களை உதறிவிட்டு ‘இணைந்து’ வாழ்ந்த பெண்கள்

நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் வசிக்கும் இரு பெண்கள் இடையே லெஸ்பியன் உறவு இருந்து வந்தது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு மேலாக யாருக்கும் தெரியாமல் பழக்கத்தை நீட்டித்து வந்தனர். அரசல், புரசலாக இருந்த இந்த விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. குடும்ப நலன் கருதி இருவரையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்தனர்.
ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதற்கிடையே இரண்டு பேரில் ஒரு பெண்ணின் கணவர் அவரை பிரிந்து சென்றார். மற்றொரு பெண்ணின் கணவன் தனது மனைவியை தகாத பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் இரு பெண்களையும் அழைத்து பேசி அறிவுரைகள் வழங்கினர். ஆனால் இந்த பழக்கத்தில் இருந்து அவர்களால் மீளமுடியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டில் இருந்து இருவரும் மாயமானார்கள். பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிவந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
உறவினர்கள் சென்று இரு பெண்களையும் மீட்டனர். நேற்றிரவு அவர்களை கோட்டாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசார் பல்வேறு அறிவுரைகளை கூறினர். இருப்பினும் இரு பெண்களையும் பிரிக்க முடியவில்லை.
எங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்வோம் என இருவரும் கண்ணீர் விட்டனர். தொடர்ந்து ஊர் பிரமுகர்களை அழைத்து பேசிய போலீசார் இரு பெண்களையும் தனித்தனியாக பிரித்து அனுப்பிவைத்தனர்.

எஜமானுக்காக உயிரை கொடுத்த நாய் [ Dog Sacrifices Life for Master]


தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி (40), இரண்டு நாய்க் குட்டி வளர்த்தார். வழக்கம்போல, நேற்றும் அவருக்கு அருகிலேயே நாய்க் குட்டிகள் படுத்து தூங்கின. நள்ளிரவு நேரத்தில் அசந்து தூங்கியபோது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. எஜமானரின் அருகில் பாம்பு செல்வதை பார்த்து குரைத்த ‘மகாலட்சுமி’ என்ற நாய்க் குட்டி, பாம்புடன் போராடி அதன் தலையை கடித்து குதறி கொன்றது. பாம்பு கொத்தி விஷம் ஏறியதில் நாய்க் குட்டியும் பரிதாபமாக இறந்தது. பாம்பை கவ்விய நிலையில் உயிர் விட்ட நாய்க் குட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பழனி.          (Tamil Murasu)

10 ஆயிரம் பெண்கள் மறியல் : 10&வது நாளாக இன்றும் படையெடுப்பு லாரி, வேன்களில் அணிவகுப்பு

கேரள அரசை கண்டித்து 10&வது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்லை நோக்கி திரண்டனர். எல்லையில் 10 ஆயிரம் பெண்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் குமுளி, கம்பம்மெட்டு உள்ளிட்ட கேரள & தமிழக எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள எல்லைக்குள் நுழைந்து விடாமல் இருக்க போலீசார் கடந்த இரு நாட்களாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து வருகின்றனர்.
தேனி நகர் பகுதியிலும் நேற்று போராட்டம் வெடித்தது. கேரள பிரமுகருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் சூறையாடப்பட்டது. 10-வது நாளாக இன்றும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. மதுரையில் இருந்து தேனிக்கு ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தேனியில் இருந்து கம்பம், கூடலூர் பகுதிக்கு பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 20-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கம்பத்தில் உழவர்சந்தை அடைக்கப்பட்டு, வியாபாரிகள் பேரணியாக சென் றனர்.
உத்தமபாளையம் அருகே கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், சின்னஓபுலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இன்று காலை கேரள மாநிலம் குமுளி நோக்கி புறப்பட்டனர். 500&க்கும் அதிகமான பைக்குகள், மினிலாரிகளில் அணிவகுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பத்தில் அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூரில் 10 ஆயிரம் பெண்கள் இன்று காலை திரண்டு ஊர்வலமாக வந்தனர். லோயர்கேம்ப் செல்ல முயன்ற அவர் களை போலீசார் தடுத்தனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார், பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
இதற்கிடையே தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. மயிலாடும்பாறை அருகே உள்ள தழையூத்து கிராமத்தில் கேரள பிரமுகருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இன்று காலை எஸ்டேட்டுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். அங்கு பதற்றம் இன்னும் தணியவில்லை.
வெற்றி நம் பக்கம்தான்’ வீதி வீதியாக தண்டோரா
பெரியாறு அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்ககோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து போராட்டங்களின் தீவிரத்தை குறைக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பற்றி தண்டோரா மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. கலெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில், தேனி மாவட்டம் முழுவதும் இன்று காலை தண்டோரா செய்யப்பட்டது.
‘அணை விவகாரத்தில் கேரள அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து வருகின்றன. வெற்றி நம் பக்கம்தான். இதனால் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். 999 ஆண்டு உரிமை நிச்சயமாக மீட்டெடுக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது.
பதற்றம் அதிகமாக உள்ள தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் பகுதிகளிலும் போலீசார் மைக்கில் இதை அறிவித்தபடி சென்றனர்.
சாப்பாட்டுக்கு தவிக்கும் போலீசார்
கடந்த ஒரு வாரமாக கூடலு£ர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் தொடர் கடையடைப்பு, போக்குவரத்து முடக்கம் காரணமாக அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மறியல், உருவ பொம்மை எரிப்பு, ஊர்வலம் என்று பல பிரச்னைகளை அவர்கள் சமாளிக்க வேண்டி உள்ளது. இதற்கிடையே, சரியான சாப்பாடு கிடைக்காமல் போலீசார் சோர்ந்து போகின்றனர். பலர் பழம், பிரட் என கிடைத்ததை உண்டு பசியாறி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு : சுற்றுலா பயணிகள் குறைந்ததால் வெறிச்சோடும் தேக்கடி, மூணாறு

முல்லைப் பெரியாறு பிரச்னையால் பதற்றம் நிலவுவதால், கேரளாவின் புகழ் பெற்ற தேக்கடி, மூணாறில் சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவுகிறது. கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக கம்பம், கூடலூர், குமுளி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், இந்த வழியாக கேரளாவுக்குள் கடந்த 2 வாரங்களாக எந்த போக்குவரத்தும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து குமுளி சோதனைச் சாவடி வழியாக சரக்குகள் எதுவும் செல்லாததால், கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.
சுற்றுலா செல்பவர்கள், சபரிமலை செல்பவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால், கேரளாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கேரளாவின் முக்கிய வருமானங்களில் சுற்றுலா வருமானம் குறிப்பிடத்தக்கது. இடுக்கி மாவட்டத்தில்தான் சர்வதேச சுற்றுலாத் தலங்களான தேக்கடி, மூணாறு ஆகியவை அமைந்துள்ளன. இந்த இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த இடங்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில்தான் அதிகளவில் பயணிகள் வருவார்கள்.
வனத்துறையின் அதிகாரபூர்வ கணக்கின்படி கடந்த 2010, நவம்பரில் 62,148 உள்ளூர் பயணிகளும், 4,600 வெளிநாட்டினரும் தேக்கடி வந்துள்ளனர். இதே ஆண்டு, டிசம்பரில் 70,468 உள்ளூர் பயணிகளும், 4238 வெளிநாட்டினரும் வந்துள்ளனர். இந்த ஆண்டு கடந்த நவம்பரில் 52,298 உள்ளூர் பயணிகளும், 3,736 வெளிநாட்டினரும் வந்துள்ளனர்.
உச்சக்கட்ட சீசன் நேரமான இந்த டிசம்பர் மாதத்தில் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக தேக்கடி, மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. ஓட்டல்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மூணாறில் உள்ள பல ஸ்டார் ஓட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெரும்பாலான அறைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தேக்கடி, மூணாறில் சுற்றுலா பயணிகள் குறைந்து வருவதால் கேரள சுற்றுலாத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
படகு சவாரிக்கு ஆளில்லை
தேக்கடியில் படகில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால், சில தினங்களாக பயணிகள் இன்றி படகு குழாம் வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன் தேக்கடியில் நடந்த படகு விபத்தில் 45 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால், ஓராண்டுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலுமாக குறைந்து இருந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் சகஜநிலை திரும்பி, பயணிகள் வருகை அதிகமானது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது, முல்லைப் பெரியாறு விவகாரத்தால் தேக்கடியில் சுற்றுலாவை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.