Tuesday 22 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 8

மனைவியின் அன்பு
இரவில் மடித்துவைக்கப்பட்டிருந்த இருந்த போர்வை ...... 
காலையில் என் கழுத்துவரை போர்த்தப்பட்டிருந்ததில் 
புலனானது மனைவியின் அன்பு

#############################

பொய்க்கால் குதிரை
கால் மட்டுமே மெய்யான .விளையாட்டுக்கு அது ...
பெயர் ஏனோ, பொய்க்கால் குதிரை என்று

#############################

விடுதலை
என் மகள் தினமும் நச்சரிக்கிறாள்... அவள் சட்டைப்பையில், 
வரையப்பட்ட முயலை விடுவிக்கச்சொல்லி ..

#############################

பெண்
கோட்டை தாண்டிவிட்டாள்... 
விளையாட்டில் இருந்து நீக்கப்பட்டேன் .. 
பெண் விளையாட்டிலும் தாண்டக்கூடாது கோட்டை
படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...

அவளின் கிறுக்கல்கள் - 7

குழந்தையின் கிறுக்கல்கள்
குழந்தை இல்லாத குடும்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியது 
கிறுக்கல்கள்களை தொலைத்த வீட்டுச்சுவர்கள்

#############################

ஐயனார்
நிலம்வாங்க வசதி இல்லை.............
ஊரின் எல்லையில் பாவம் ஐயனார்

#############################

பாவனை ஜெயித்தது
வலிப்பதாய், பாவனை செய்த உன்னிடம் தோற்றுப்போனது ............
நிஜமாய் வலித்த வலி

#############################

என் கவிதைகள்
என் கவிதைகள் கழுதை போல................ 
தினமும் நிறைய காகிதம் சாப்பிடுகின்றன

படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...