Friday 2 December 2011

இளம்பெண்ணுக்கு விபரீத நோய் : வாய்விட்டு சிரித்தால் உயிர் போகும்


Laughing could kill Her


A young teacher with a rare neurological disorder has been warned she could die if she laughs too hard, because it could push her brain out of her skull.



Carolyn Gibbons, 23, suffers from a condition called Chiari malformation, which means the lower part of her brain is too big. This can block the flow of fluid to her head through her spinal canal.

She endures blurred vision, slurred speech and crippling migraines and any sudden movements feel like her head 'is about to pop'.

Jerking movements, such as during a fit of giggles, could cause her brain to herniate into the top of the spinal column - raising the risk of sudden death.

Miss Gibbons had no idea she had the condition until she passed out and was sick after returning home from the secondary school where she worked at the end of March last year.

இங்கிலாந்தின் ஹேம்ப்ஷயர் கவுன்டி ஹைத் என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் கரோலின் கிப்பன்ஸ். 23 வயதாகும் இவருக்கு ஒரு விபரீத பாதிப்பு. என்ன பாதிப்பு தெரியுமா? சிரித்தால் உயிர் போய்விடும்.

இங்கிலாந்தின் ஹைத் நகரில் தாய் கேதரின், 2 வயது தம்பி ஜேக்கப்புடன் வசித்து வரும் கரோலின் கிப்பன்சின் உடல்நலம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திடீரென பாதிக்கப்பட்டது. பார்வை மங்கியது. பேச்சு குழறியது. அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தது. உட்கார்ந்தால் உடனே எழுந்திருக்க முடியாது. இவ்வளவு ஏன்.. சிரிக்கக்கூட முடியாது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், மிக மிக அரிதான ‘சியாரி மால்பார்மேஷன்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். பின் மண்டையில் மூளையின் அளவு பெரிதாக உள்ளதால் மண்டையில் போதிய இடமில்லை. இதனால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளைக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல், நரம்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவே இத்தனை கோளாறுகளுக்கும் காரணம் என்றனர். உயிருக்கு ஆபத்து இருப்பதால் கடந்த ஜூலையில் ஆபரேஷனும் செய்யப்பட்டது. முதுகெலும்பின் ஒரு பகுதியையும் பின்புறம் மண்டை ஓட்டின் ஒரு பகுதியையும் வெட்டி அகற்றினர்.
கரோலின் படிப்படியாக குணமாகி வருகிறார். தற்போதும் சில பாதிப்புகள் இருக்கின்றன. அதாவது, வெகு நேரம் தூக்கமே வராது. ஒருமுறை சுமார் 60 மணி நேரம், அதாவது இரண்டரை நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்ததாக கரோலின் கூறுகிறார். இப்போதுகூட, வாய் விட்டு சிரிக்க கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள் டாக்டர்கள்.
“சிரிக்க முடியவில்லை என்பதே பெரும் சோகமாக இருந்தது. அந்த நிலையில் இருந்து மெல்ல விடுபட்டு வருகிறேன். முழுமையாக பாதிப்பில் இருந்து விடுபடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளுக்கு நன்றி” என்றார். கரோலின் கிப்பன்ஸ்

கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனி : நாளை 10 நாள் திருவிழா

சவேரியார் ஆலய 9ம் நாள் திருவிழாவையொட்டி இன்று மாலை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இன்று இரவும் தேரோட்டம் நடக்கிறது. 10 நாள் திருவிழா நாளை நிறைவடைகிறது.
பிரசித்தி பெற்ற நாகர்கோவில் கோட்டாறு கேட்டவரும் தரும் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த நவ.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத் திருவிழாவில் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 8ம் நாள் திருவிழாவான நேற்று (1&ந்தேதி) இரவு தேர் பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர் பவனி தெற்கு தெரு, கம்போளம், ரயில்வே ரோடு, கோட்டாறு மெயின் ரோடு, வடக்கு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை அடைந்தது. தேரோட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, உப்பு, மிளகு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். தரையில் விழுந்து வணங்கி நேர்ச்சை கடன் நிறைவேற்றினர்.
இன்று (டிச.2) 9ம் நாள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசீர், கூட்டு திருப்பலி ஆகியவை நடக்கின்றன. இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொள்கிறார். மேலும் இதில் குமரி மாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இன்று மாலை முதல் விடிய விடிய ஆலயத்துக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
நாளை (டிச.3) 10ம் நாள் திருவிழா நடக்கிறது. காலை 6 மணிக்கு தூய சவேரியார் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை வகிக்கிறார். பின்னர் காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நாளை (3 - ம் தேதி) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.
குமரி மாவட்ட எஸ்.பி. லெட்சுமி, உத்தரவின் பேரில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படை, பள்ளி மாணவர்களும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணியில் ஈடுபடுகிறார்கள். திருவிழாவையொட்டி கோட்டாறு போலீஸ் நிலைய ரோட்டில் இருந்து சவேரியார் ஆலய ரோடு வரை சாலையின் இரு பக்கமும் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் : தாறுமாறாக ஓடிய கல்லூரி பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி : 37 மாணவ, மாணவிகள் காயம்

இன்று காலை கோர விபத்து : அச்சு முறிந்து பஸ் கவிழ்ந்தது
(2.11.11) நாகர்கோவிலில் இன்று காலை தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து, பஸ்சில் இருந்த 37 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். முன்னதாக பஸ் மோதியதில் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த மற்றொரு கல்லூரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை சுசீந்திரம், தெங்கம்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. நாகர்கோவில் நாக்கால்மடம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது மோதியது. இதில் அவர் தூக்கிய எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக் மீது மோதிய பின்னரும் நிற்காமல் சென்ற பஸ் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. பஸ்சின் பின்பக்க டயர்கள் இரண்டும் பட்டையோடு கழன்று ஓடியது. பைக்கும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகளும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் வடசேரி மற்றும் ஆரல்வாய்மொழியில் இருந்து போலீசார் விரைந்தனர். இறந்து போனவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 37 மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அவர்களை கலெக்டர் மதுமதி சந்தித்து விபத்து பற்றி கேட்டறிந்தார். விபத்தில் பலியானவர் பெயர் முத்து, நெல்லை மாவட்டம் வடுகூர்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் குமரி மாவட்டத்தில் உள்ள மற்றொரு தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், போக்குவரத்து பிரிவு மேலாளராக உள்ளார். இதற்கிடையே விபத்தில் சிக்கிய பஸ் டிரைவர் கார்த்திகேயன் ஆரல்வாய்மொழி போலீசில் சரண் அடைந்தார். மாணவர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் அவர்களின் பெற்றோர் பதறியடித்தபடி ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பஸ் கவிழ்ந்ததில் டீசல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்து டீசலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் கல்லுரி மாணவ, மாணவிகள் கொண்டு வந்த டிபன் பாக்ஸ்கள், புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. அந்த பகுதி முழுவதுமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த விபத்தால் நாகர்கோவில் & ஆரல்வாய்மொழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.     (Tamil Murasu)

விஜய் & அஜீத்தை இணைத்து படம் : செல்வராகவன் பேட்டி

விஜய், அஜீத்தை இணைத்து படம் இயக்க கதை தயாராக உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.
இதுபற்றி செல்வராகவன் கூறியதாவது:
‘மயக்கம் என்ன’ படம் பார்த்து பலர் பாராட்டினார்கள். என்னைப் பொருத்தவரை வழக்கமான மசாலா படங்கள் எடுப்பதைவிட வித்தியாசமான கதை களங்களுடன் படம் இயக்கவே விரும்புகிறேன்.
யுவன் சங்கர் ராஜாவுடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை. விரைவில் அவருடன் இணைந்து படம் தருவேன். விஜய், அஜீத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்கிறார்கள். இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எப்போது அது நிறைவேறும் என்று தெரியவில்லை. எனது அடுத்த படம் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’. இதுதவிர திகில் படத்துக்காக 2 ஸ்கிரிப்ட் உள்ளது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளேன்.
இவ்வாறு செல்வராகவன் கூறினார்.  (tamil murasu) தமிழ்திரை 

In Austria : World's First Sex School

London, Dec 1 (IANS) While many people may think it's an activity which should be best learned behind closed doors, an enterprising Swedish schoolmistress thinks otherwise.
Ylva-Maria Thompson has opened the world's first international sex school for teaching the art of being better lovers, the Daily Mail reported.
The Austrian International Sex School in Vienna offers 'hands on' lessons in seduction for 1,400 pounds a term. The 'headmistress' says anyone over the age of 16 can enrol at 'the world's first college of applied sexuality'.
Students of the course are expected to stay in a co-ed dormitory block where they're expected to practice their 'homework'. By the end of their course, they are awarded a qualification.
The school head said: 'Our core education is not theoretical, but very practical. The emphasis is on how to be a better lover.
'Sexual positions, caressing techniques, anatomical features. And we teach people hands on.'
School's spokesperson Melodi Kirsch exuded confidence that the school would be a great success.
The school, however, has already turned controversial in Austria with it raunchy advertisments showing a couple making love having already invited ban by Austrian TV.

கோவையில் இருந்து 60 பேர் பைக்கில் கூடங்குளம் பயணம்

அணு உலை எதிர்ப்பு பேரணி
அணு உலைக்கு எதிர்ப்பு தெரி வித்து கோவையில் இருந்து 60 பேர் பைக்கில் பேரணி யாக கூடங்குளம் புறப்பட்டு சென்றனர்.
கோவையில் பல்வேறு அமைப்புகள் ஒன்றுசேர்ந்து அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற புதிய இயக்கம் துவக்கியுள்ளனர். இந்த இயக்கம் சார்பில், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக நூறு நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதர வாக பைக் பேரணி கோவை யிலிருந்து நேற்று துவங்கியது.
ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 60 பேர் பைக்குடன் திரண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சுசி.கலையரசன் பேரணியை துவக்கிவைத்தார். பேரணியில் பொன்சந்திரன் (பி.யு.சி.எல்), வக்கீல் முருகேசன், ஆறுச்சாமி, கருப்ப சாமி, தனலட்சுமி, உபேந்திரன், கதிரவன் உள்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை பைக் பேரணி கூடங்குளத்தை அடைகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். நாளை மீண்டும் கோவை திரும்புகின்றனர். இதுபற்றி ஒருங்கிணைப் பாளர் கு.ராம கிருஷ்ணன் கூறுகையில், கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு அறவே லாயக்கற்ற பகுதி. எனவே அங்கு அணுஉலை திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றார். முன்னதாக பைக் பேரணி காந்திபுரத்தில் இருந்து புறப்பட தயாரான போது போலீசார் தடுத்து விட்டனர். இதனால், கோபம் அடைந்த பேரணியில் பங்கேற்க வந்த சிலர் நடுரோட்டில் படுத்து, உருண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பைக் பேரணி பொள்ளாச்சி ரோடு எல் அண்ட் டி பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்டது.

                                                                                                                                                        நன்றி : தினகரன் Dec 2