இந்த புகைபடத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா??? தெரியவில்லையா, இவர் வேறு யாரும் அல்ல. மலையாள சினிமா துரையின் முன்னணி நடிகர் திலிப். ஆம் அவரே தான். "மாயமோகினி" என்னும் மலையாள படத்திற்காக அவர் நடித்த வேஷம் தான் நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம்.
Monday, 16 April 2012
ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் : மாமனார், மாமியார் தர உத்தரவு
விதவை மருமகளுக்கு மாமனாரும், மாமியாரும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் புதுமையான தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இளம் விதவை ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,‘‘கடந்த 2008ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்துமே மாமியார் கொடுமை ஆரம்பித்துவிட்டது. வேறு ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி என்னை கொடுமைபடுத்த ஆரம்பித்தார். என் கணவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே எங்களுக்கு மகன் பிறந்தான். ஆனாலும், மாமியார் கொடுமை குறையவில்லை. இந்த நிலையில், என் கணவர் திடீரென இறந்துவிட்டார்.
அட அப்படி போடு!!! புதுவை முன்னாள் அமைச்சர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை
புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் மீதான 10ம் வகுப்பு தேர்வு குறித்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. 29-09-2011 ல் நடந்த அறிவியல் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக தேர்வு அறை கண்காணிப்பாளர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த்
கருங்கல் அருகே வாலிபரை தாக்கிய போலீசார்
கருங்கல் அருகே வாகன சோதனையின்போது வாலிபர் முகத்தில் டார்ச் லைட்டால் போலீசார் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கல் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கென்ஸ்(38). இவர் அந்த பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகி றார். நேற்று முன்தினம் இரவு மில்லில் பணிகளை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
Subscribe to:
Posts (Atom)