Saturday 17 December 2011

இந்தியர் தொடுத்த வழக்கில் லண்டன் ஐகோர்ட் தீர்ப்பு : இங்கிலாந்தில் குடியேற இங்கிலீஷ் பேச வேண்டும்

இங்கிலீஷ் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர். அவர்கள் குடியுரிமை பெற இங்கிலீஷ் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புது சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த ரஷீதா சாப்தி (54), லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், ‘‘என் கணவர் வாலி சாப்தி (57) இந்தியாவில் இருக்கிறார். எங்களுக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இங்கிலாந்தில் குடியேறினேன். இங்கு குடியுரிமையும் பெற்றுள்ளேன். ஆனால், என் கணவருக்கு இங்கிலீஷ் பேச தெரியாததால் இங்கிலாந்தில் குடியேற முடியவில்லை. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குடியேற்ற சட்டம் சட்டவிரோதமானது. இது இன, மொழி பாகுபாடானது. அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீட்சன், ‘‘இங்கிலீஷ் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம், தம்பதியின் குடும்ப வாழ்க்கையில் தலையிடவில்லை. அதேபோல் இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருமணம் செய்து கொள்வதையோ, திருமணத்துக்காக அவர்கள் வெளிநாடு செல்வதையோ இந்த சட்டம் தடுக்கவில்லை. இங்கிலாந்தில் குடியேறுபவர்களுக்கு இங்கிலீஷ் பேச தெரிந்திருந்தால், சமுதாயத்தில் ஒன்றி பழக முடியும் மக்களுடன் எளிதாக ஒன்றிணைய முடியும் என்பதுதான் நோக்கம்’’ என்று தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் தயார் : மின்உற்பத்தி தொடங்க கூடங்குளத்தில் தீவிரம்

ரஷ்யாவில் மன்மோகன் சிங் அறிவிப்பு எதிரொலி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஓரிரு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததை அடுத்து, மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதையொட்டி கூடங்குளம் பகுதி முழுவதும் போலீஸ் படை குவிக்கப்படுகிறது. மத்திய படையையும் வரவழைக்க ஏற்பாடு நடக்கிறது.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் முதல் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணுமின் நிலையத்தை எதிர்த்து 3 மாதங்களுக்கு மேலாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சங்களை போக்க போராட்ட குழுவினருடன் மத்திய குழுவினர் நெல்லையில் 3 கட்ட பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. போராட்ட குழுவினர் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கின்றனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, மின் உற்பத்தியை திட்டமிட்டபடி தொடங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யாவில் இதற்கான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன்படி, மின் உற்பத்தி தொடங்குவதற்கு தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. போராட்டக்காரர்களை சமாளிக்க, இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அணு உலையை குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுத்ததாக போராட்ட குழு தலைவர் உதயகுமார் மீது பயங்கரவாத தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கிரிமினல் சட்ட திருத்தப் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், உதயகுமாரின் அமைப்பு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டம் குறித்து மாநில அரசின் நிலை இன்னும் தெளிவாக்கப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், “பணிகள் தொடங்கும் என்று பிரதமர் கூறியிருக்கிறார் என்றால் அனைவரிடமும் ஆலோசித்த பின்தான் அப்படி சொல்லியிருக்க முடியும். அனைவரிடமும் பேசியிருந்தால் அந்த கருத்து வரவேற்கத்தக்கது” என்றார்.
கூடுதல் அணு உலைகளுக்காக ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளதை கண்டித்து கூடங்குளத்தில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை போராட்ட குழுவினர் நேற்று தொடங்கினர். வீடுகளிலும், படகுகளிலும் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், ரஷ்ய அதிபர் மெத்வதேவுடன் கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பது பற்றி பிரதமர் மன்மோகன் பேசவில்லை. இதுகுறித்து இருநாட்டுக்கு இடையில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
ஆனால், 2 வாரங்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று பிரதமர் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க இன்று மதியம் போராட்டக் குழுவினர் கூடங்குளத்தில் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.

நிஜம் என்ன??? : Facebook காதல் : தரையில் உருண்டு, புரண்டு கதறினார் : "பென்டிரைவ் மர்மம்" : பண ஆசையில் அவதூறு

காதல் வழக்கில் கைது : கோர்ட் வளாகத்தில் புரண்டு மருத்துவ மாணவி கதறல்
காதல் வழக்கில் கைது செய்யப் பட்ட மருத்துவ மாணவி திருச்சி கோர்ட் வளாகத்தில் நேற்று தரையில் புரண்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருச்சியில் கரூர் பை பாஸ் சாலையை சேர்ந்தவர் முருகன் (30). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், சில நாட்களுக்கு முன் கோட்டை போலீசில் அளித்த புகாரில், கரூரை சேர்ந்த இளம்பெண் அனுஷா என்ற அபிநயா தன்னை, முன்னாள் அமைச்சரின் மகள் எனக்கூறி கொண்டு பணம் பறிக்கும் நோக்கத்தில் திருமணம் செய்து கொள் ளும்படி மிரட்டுகிறார். பல பணக்கார இளைஞர் களிடம் இணையதளம் மூலம் பழகி, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. எனவே பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டுதல், ஏமாற்றி பணம் பறித்தல் ஆகிய வழக்குகளின் கீழ் அனு ஷாவை(23) கைது செய்தனர். நேற்று மதியம் அனுஷாவை திருச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் அனுஷா திடீரென தரையில் உருண்டு, புரண்டு கதறினார்.
இதைக்கண்ட 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அவரிடம் விசாரித்தனர். அனுஷா கூறியது:
கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் 2வது மனைவியின் மகள் நான். பிளஸ் 2 வரை கரூரில் படித்தேன். தற்போது சென்னையில் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறேன். 2 ஆண்டுகள் முழுமையாக முடித்து 3வது ஆண்டு இடையில் நின்றுள்ளேன். அடுத்த ஆண்டில் கல்வியை தொடர திட்டமிட் டிருந்தேன். இதற்கிடையே திருச்சியைச் சேர்ந்த முருகனுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. முருகன் திருச்சியில் உள்ள பெரிய கட்டுமான நிறு வனத்தினரின் குடும்பத்தை சேர்ந்தவர்.
இருவரும் காதலித் தோம். பேஸ்புக் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டோம். பல இடங் களுக்கு சென்றுள் ளோம். அதில் நான் கர்ப்பமடைந்த போது, முருகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தார். நான் அவரது வீட்டிற்கும் சென்றுள்ளேன். இந்நிலை யில் அவர் என்னை திருமணம் செய்யாமல் தவிர்ப்பதற்காக என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
என்னிடம் உண்மையை கூறாமல், திருமணம் பற்றி பேசலாம் எனக்கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சென் னையிலிருந்து வரவழைத் தார். நானும் அதை நம்பி வந்தேன். இங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து, கல்லணை அருகேயுள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, பிரச்னை செய்யாமல் ஓடிவிடு எனக்கூறி அடித்து மிரட்டினர். அதற்கு நான் ஒத்துக் கொள்ளாததால் போலீசில் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். எனது தாய் ஏற்கனவே இறந்து விட்டார். முருகனும், நானும் காதலித்தபோது எடுத்த போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் பதிவுகள், அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ் அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. யாராவது என்னை காப்பாற்றுங்கள் என அவர் கதறினார்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணை ஜே.எம்.1 கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று நீதிபதி இளங் கோவன் முன் ஆஜர்படுத் தினர். அவரது உத்தர வின்பேரில் அனுஷாவை 15 நாள் காவலில் திருச்சி மக ளிர் சிறையில் அடைத்தனர்.
"பென்டிரைவ் மர்மம்"
அனுஷா கூறும்போது, முருகனை காதலித்தபோது இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் விபரம் உள்ளிட்ட ஆதாரங்களை தனது பென்டிரைவில் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன் அவரிடமிருந்த வெள்ளை நிற பென்டிரைவினை போலீசார் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு, �அப்படி ஒரு பென்டிரைவே அந்த பெண்ணிடம் இல்லை� எனக் கூறினர்.
பண ஆசையில் அவதூறு
அனுஷா மீது புகார் அளித்த முருகன் கூறுகையில், எதேச்சையாக ஏற்பட்ட பழக்கத்திற்குபின் எனது இணையதளம் மூலம் என் குடும்ப வசதியை பற்றி அறிந்து கொண்டு அந்த பெண், பணம் பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டார். தற்போது இவ்வாறு அவதூறு பரப்புகிறார். என்மீது தவறு இருந்திருந்தால் நானே செட்டில்மெண்ட் செய்திருப்பேன். போலீசில் புகார் செய்திருக்கவிட மாட்டேன் என்றார்.    (Dinakaran)

குளச்சல் : தீயணைப்பு துறையினர் இறங்க மறுத்தனர் : டிரைவர் வாலிபர் சடலத்தை மீட்டார்

குளச்சல் அருகே துர்நாற்றம் வீசிய பாழடைந்த கிணற்றில் மாயமான வாலிபர் சடலம்
குளச்சல் அருகே 4 நாட்களாக துர்நாற்றம் வீசிய பாழடைந்த கிணற்றில் இருந்து மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்க முன்வராத நிலையில் கார் டிரைவர் துணிச்சலுடன் இறங்கி வாலிபர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். 
குளச்சல் அருகே உதியாவிளை சானல்கரையை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் ராஜேஷ்(26). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் ராஜே ஷின் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து 13ம் தேதி முதல் துர்நாற்றம் வீசியது. இதனால் மாயமான ராஜேஷ் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ஊர் மக்கள் மின்விளக்கை கிணற்றில் இறக்கி பார்த்தனர். அந்த கிணறு 250 அடி ஆழம் கொண்டது என்பதால், சரியாக தெரிய வில்லை.
இது பற்றி குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடம் வந்து, பைனாக்குலர் மூலம் கிணற்றில் பார்த்தார். அப்போது அங்கு மனித உடல் எதுவும் கிணற்றில் இருப்பதாக தெரியவில்லை என்று அவர் கூறினார். ஆனால் தொடர்ந்து கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது.
எனவே கிணற்றுக்குள் இறங்கி சடலம் ஏதேனும் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குளச்சல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திலும் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். போலீசாரும் தீயைணைப்பு துறையினரிடம், கிணற்றில் சடலம் இருக்கிறதா? என்பதை உறுதிசெய்ய வலியுறுத்தினர். ஆனால் தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றில் இறங்க முன்வரவில்லை. இதனால் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்தினருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.
இதுபற்றி கல்லுக்கூட்டம் பேரூராட்சி கவுன்சிலர் சம்பத்சந்திரா, கல்குளம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கலெக்டர் மற்றும் எஸ்.பி நடவடிக்கையின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடம் வந்தனர். ஆனால் அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முன்வரவில்லை. இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் கிணறு தோண்டும் தொழிலாளர்களை தேடி அலைந்தனர். அவர்களும் கிணற்றில் இறங்க முன்வரவில்லை.
இதனால் போலீசாரும் பொதுமக்களும் செய்வதறியாது தவித்தனர். இந்நிலையில் உடையார் விளையை சேர்ந்த கார் டிரைவர் ஆல்பர்ட்(43) என்பவர் கிணற்றுக்குள் இறங்க முன்வந்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விஷவாயு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஒரு மண்ணெண்ணெய் விளக்கை வாளியில் கட்டி கிணற்றில் இறக்கினர். அப்போது விஷவாயு இருப்பது தெரியவந்தது. அதனை தண்ணீர் பீச்சி அடித்து அவர்கள் வெளியேற்றினர்.
இதனைத்தொடர்ந்து ஆல்பர்ட்டை கயிறு கட்டி கிணற்றில் இறக்கினர். அப்போது மனித உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. அதனை சாக்கில் கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். அது மாயமான ராஜேஷின் உடல் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மாயமான வாலிபர் 6 நாட்களுக்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
குளச்சல் அருகே உதியாவிளையில் பாழடைந்த கிணற்றில் சடலத்தை மீட்க தீயணைப்பு துறையினர் இறங்க மறுத்ததையடுத்து துணிச்சலுடன் கிணற்றில் இறங்கிய டிரைவர் ஆல்பர்ட்.
டிரைவருக்கு பாராட்டு
பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த 4 நாட்களாக தொடர்ந்து துர்நாற்றம் வீசி வந்தது. கிணற்றில் இறங்க தீயணைப்பு படையினர் உட்பட யாருமே முன்வர வில்லை. ஆனால் டிரைவர் ஆல்பர்ட் துணிச்சலுடன் கிணற்றில் இறங்கி உடலை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தார். அவரது துணிச்சலை பொதுமக்கள் பாராட்டினர்.