Wednesday, 25 April 2012

குருவாயூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு காதல் : பிடிபட்ட காதலர்கள் : இன்டர்நெட் தாக்கம்

இன்டர்நெட் சாட்டிங் மூலம் ஏற்பட்ட நட்பால், நாகர்கோவில் மாணவியின் வீட்டுக்கு, சென்னையில் இருந்து மாதம் ஒருமுறை நள்ளிரவில் வந்து சென்ற மாணவர் சிக்கினார். போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவரை எச்சரித்து அனுப்பினர்.
Nagercoil_loversநாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இன்டர்நெட் சாட்டிங்கில் ஆர்வம் கொண்டவர். அவருக்கு சென்னையில் உள்ள ஒரு இன்ஜினிரியங் மாணவரின் நட்பு கிடைத்தது.

விலை ரூ 300 இல் தானாகவே 108க்கும் உறவினர்களுக்கும் தகவல் தரும் கருவி

விபத்தில் சிக்கினால் 108 மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் கருவியை நாகர்கோவில் தோவாளை லயோலா கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த தோவாளை லாயோலா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த மாணவர்கள் ஐசன் ஐசக், விவோ, மன்பிரீத், மார்ட்டீன். இவர்கள் 4 பேரும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலா ரூ 1 கோடி நஷ்டஈடு : கொல்லப்பட்ட மீனவர்களுக்கு இத்தாலி கப்பல் நிறுவனம் வழங்கியது

கொல்லம் கடல் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு தலா ரூ 1  கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளதால், இத்தாலி கடற்படை வீரர்கள் விடுதலையாக உள்ளனர்.
கொல்லம் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குமரி மாவட்டம் நித்திரவிளையை சேர்ந்த அஜீஸ் பிங்கோ, குளச்சலை (தற்போது கொல்லத்தில் வசித்தவர்) சேர்ந்த ஜெலஸ்டின் ஆகியோர் பலியாகினர்.