Tuesday, 13 December 2011

பெண் மந்திரவாதியின் தலை துண்டிப்பு : சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் பில்லி சூனியம் வைத்து மந்திரம் செய்து வந்த பெண்ணின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில் இஸ்லாமிய கொள்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. நாட்டில் மந்திரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமினா பின்ட் அப்துல்ஹலிம் நாசர் என்ற பெண் பில்லி சூனியத்தை அகற்றுவதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து தகவல் பரவியதும், அமினாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜாவ்ப் நகரில் நேற்று அமினாவின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை சட்டவிரோதமாக செயல்பட்ட 73 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குமரி (மார்த்தாண்டம்) தொடர் சோகம் : ரூ 650 : பெண் தீக்குளித்து தற்கொலை - கணவரும் கருகினார்

எதுவும் அறியாத 2 குழந்தைகள் 
மார்த்தாண்டம் அருகே கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகினார்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி கடவிளை பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (35). லோடுமேன். இவரது மனைவி விஜயா (33). இவர்களுக்கு சுதீஸ் (9), ரதீஸ் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன் தினம் தனது சட்டை பையில் ரசல்ராஜ் ரூ.650 வைத்திருந்தார். அந்த பணத்தை கணவருக்கு தெரியாமல் விஜயா எடுத்து, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி இருக்கிறார். நேற்று மாலை இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. எனக்கு தெரியாமல் ஏன் பணம் எடுத்தாய்? என மனைவியிடம் ரசல்ராஜ் கேட்டார். அதற்கு அவர் நான் பணம் எடுத்து வீட்டுக்கு தேவையான பொருட்களை தான் வாங்கினேன் என கூறினார். கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றியதில் , மனைவியை ரசல்ராஜ் கடுமையாக திட்டி இருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று, வாசல் அருகில் ரசல்ராஜ் நின்று கொண்டிருந்தார். வீட்டுக்குள் இருந்த விஜயா தனது கணவர் திட்டியதால் மன வேதனையில், மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். 
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ரசல்ராஜ் ஓடி வந்து காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இருவரும் தீயில் கருகி அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, இருவரையும் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை விஜயா இறந்தார். ரசல்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். (Tamil Murasu)
என்னதான் சொல்ல???? அனுதாபம் தெரிவிப்பதா??? கோபத்தை கொட்டி தீர்ப்பதா???
ஏன் இந்த பெண் தான் பெற்ற குழந்தைகள் வாழ்க்கையை கூட எண்ணி பார்க்க வில்லை???
ஒரு நொடி பொழுதின்... சஞ்சலம்... ஆத்திரம்.... குடும்பத்தை குதறி விட்டது.

42 பேரின் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு : டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரொலி :

ஓய்வு பெற்ற அதிகாரிகள் கலக்கம் : முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு அரசு துறை பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்மூலம் நடத்தப்படும் கால்நடை இன்ஸ்பெக்டர், பல் மருத்துவர் மற்றும் குரூப் 1 உள்ளிட்ட பல தேர்வுகளில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, டிஎன்பிசி முன்னாள் சேர்மன் செல்லமுத்து மற்றும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மற்றும் 14 பேரின் வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது பல லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 8 பேர் வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். ஒரே நேரத்தில் பல இடங்களில் ரெய்டு நடந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் எஸ்பியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் மணி. இவர், டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்தார். சென்னை வேளச்சேரி சீதாபதி நகரில் உள்ள இவரது வீட்டில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை போட்டனர். அப்போது பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள முருகானந்தம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றியவர்.
சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றுபவர் செந்தில்குமார். காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் உள்ள இவரது வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி விஜயராகவன் தலைமையில் இன்று காலை சோதனை நடத்தினர். ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக இருப்பவர் சங்கரன். வானவில் நகரில் உள்ள இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
பிரபல தொழில் அதிபர்கள், புரோக்கர்களின் வீடுகள் என சென்னையில் 14 இடங்களில் ரெய்டு நடத்தினர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் போலீஸ் உட்கோட்ட டிஎஸ்பி அன்பு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையிலான குழுவினர் இன்று காலை சோதனை தொடங்கினர். டிஎஸ்பி அன்பு விடுமுறையில் இருப்பதால் ஆம்பூர் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டையில் டிஎஸ்பி ஒருவரின் வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
முன்னாள் எம்எல்ஏவீட்டிலும் சோதனை :
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாதையன். அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார். இவரது வீடு, ஈரோடு மூலப்பாளையம் விவேகானந்தர் தெருவில் உள்ளது. இங்கு ஈரோடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி முருகேசன் தலைமையில் போலீசார் இன்று காலை 7 மணிக்கு சோதனை நடத்தினர். மாதையனுக்கும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சென்னையில் மட்டும் 14 இடங்களில் இன்று ரெய்டு நடந்தது. தவிர மதுரையில் 7, சேலம் 5, சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 2, தேனி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்தில் ரெய்டு நடந்தது.

புதிய அணையை எதிர்த்து கேரளாவில் தமிழர்கள் போராட்டம்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. கேரளாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தேனி மாவட்ட மக்கள் கொந்தளிந்து எழுந்துள்ளனர். அங்கு, 9வது நாளாக இன்றும் போராட்டம் நடக்கிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறில் ஏலத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழர்கள் இன்று கேரள அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 1500 பேர் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஆட்டோக்கள் எதுவும் இன்று இயக்கப்படவில்லை.
கேரளாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுவால் ஒருவரின் உயிரை பறித்து விட்டு வாழ்வை தொலைத்து நிற்கும் குமரி இஞ்சினிரியிங் வாலிபர்கள்

"ஆபாசமாக திட்டியதால் கொன்றோம்."
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் புலிக்கோடு பகுதியை சேர்ந்த பிரபு (24), ரத்தீஸ் (24) என்பது தெரிந்தது. தூங்கிக் கொண்டு இருந்தபோது அந்த வாலிபரின் காலை மிதித்ததால் ஏற்பட்ட தகராறில், மணலை வாயில் திணித்து கொன்று விட்டதாக போலீசில் 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட பிரபு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், "நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். "தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், எனது சான்றிதழ்கள் கிழிக்கப்பட்டு விட்டது. தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் மேஸ்திரியாக வேலை செய்கிறேன். ரத்தீஸ் கொத்தனாராக வேலை செய்கிறார்.
எங்களுடன் 7 பேர் அதே பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) அன்று வேலை எதுவும் இல்லை. அதனால், ராயப்பேட்டையில் உள்ள கான்ட்ராக்டர் சேகர் என்பவரை சந்திப்பதற்காக சென்றோம். அவர் கூலிப்பணம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினோம்.
மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு மெரினா கடற்கரைக்கு சென்றோம். அங்கு மது அருந்து விட்டு குளித்தோம். மீண்டும் இரவிலும் மதுபாட்டில்கள் வாங்கி வந்து, கலங்கரை விளக்கம் அருகில் மது அருந்தினோம்.
போதையேறிய பிறகு கடற்கரை மணலில் தூங்குவதற்காக நடந்து சென்றோம். அப்போது, வழியில் வாலிபர் ஒருவர் படுத்து இருந்தார்.
போதையில் தள்ளியாடியபடி சென்றபோது, அந்த வாலிபரை மிதித்து விட்டோம். தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், எங்களை பார்த்து ஆபாச வார்த்தைகளில் திட்டினார்.
இதனால், எங்களுக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அந்த வாலிபரை அடித்து உதைத்தோம். அதனால் "காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள்” என கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு யாரும் வந்து விடக்கூடாது என பயந்து, அந்த வாலிபரின் கைகளை ரத்தீஸ் பிடித்துக்கொள்ள, அவரது வாயில் மணலை திணித்தேன்.
இதனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டார். அதிர்ச்சியடைந்த நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல், அதே பகுதியில் மணலை தோண்டி புதைத்தோம். இடுப்பு வரை புதைத்து விட்ட பிறகு, போலீசார் வந்து எங்களை பிடித்து விட்டார்கள்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

வேலை நேரம் அதிகரிப்பு??? : ஜனவரி 2ம் தேதி முதல் அமலாகிறது அரசு பள்ளிகளில்

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை வரும் ஜனவரி 2ம் தேதி முதல் அரை மணி நேரம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தியது. இதை அதிமுக அரசு, இக்கல்வித்திட்டத்தை ஆரம்பத்திலேயே முடக்க முயன்றது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து இந்த கல்வித்திட்டத்தை அதிமுக அரசு ஏற்றுக்கொண்டது. இதனால், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகே பள்ளிகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. இது தவிர, உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தியதால் பள்ளிகளில் பாடங்களை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் ஜனவரி 2 முதல் ஏப்ரல் 30 வரை அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தையும் அரை மணி நேரம் அதிகரித்து, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலை 9.30 மணிக்கு முதல் பாடவேளை தொடங்குகிறது. மதியம் 12.40 முதல் 2 மணி வரை உணவு இடைவேளை விடப்படுகிறது. பிறகு மாலை 4.10 மணி வரை வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. காலை 11 மணி முதல் 11.10 வரையிலும், மாலையில் 3.20 முதல் 3.30 வரையிலும் குழந்தைகளுக்கு இடைவேளை விடப்படுகிறது. புதிய உத்தரவுப்படி, இனி அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மாலை 4.40 மணி வரை செயல்படும். இந்த உத்தரவுக்கு ஆசிரியர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது.
இதுகுறித்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பள்ளிகளின் வேலை நாள் குறைந்ததால் ஏற்கனவே பணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாதத்தில் 2 சனிக்கிழமைகள் பணி நாட்களாக மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளி வேலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து விடுவர். அரை மணி நேரம் கூடுதலாக வகுப்புகளை செயல்படுத்துவதை காட்டிலும், மதிய உணவு இடைவேளை நேரத்தைக் குறைத்தாலே போதும்’’ என்றனர்.

Rs.43 Lakhs Phone Bill in just 20 Days : Man arrested for Fraud

In Mumbai a VSNL customer has been arrested in supporting the fake address while enrolling for a wireless connection where he wants to make International calls,As VSNL was shocked with one telephone bill.As in the Last week, VSNL officials were in search for one of their customer who made the bill for about 43 lakhs in the span of 20 days whp had recently signed up for a wireless connection. 
Further, in order to evade bill payment, the accused registered himself with a fake address to throw the police off his trail. However, he was arrested on Saturday for cheating and forgery. 
According to the police, the accused, identified as Rishikesh Shukla (30), took a VSNL wireless connection on September 14. He requested for STD and ISD services from the service provider. But VSNL officials got suspicious when they discovered that he made virtually nonstop international calls, running up a bill of Rs 42,52,480 in less than three weeks. He made all the calls between November 3 and 23. On Friday, the officials decided to visit him at his residence only to realise that the address was fake. They registered an FIR against him with the Badlapur police.
After investigations, the Badlapur police succeeded in arresting Shukla, a resident of Kolsewadi, from Kalyan on Saturday. 
"I have arrested Shukla under Section 420 (cheating and dishonesty), 468 (forgery for purpose of cheating of documents), 469 (forgery for purpose of harming reputation) and 471 (using as genuine a forged document or electronic record) of the Indian Penal Code (IPC). I have also demanded the details of the calls which Shukla had made," said Vijay Kumar Bagal, senior inspector, Badlapur police station. The purpose for which he made the calls will become known after officials get the call details, cops said. 
An officer said, As cops got surprised how the accused got a wireless conncetion without a proper authentication from VSNL employees.In case if any one wants a connection, The VSNL officials should demand proper identity proof. It is surprising how they gave the connection to Shukla without asking for any valid proof,"

மாதந்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக, முதல்வர் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், விடுதியில் தங்காமல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25 வீதம் 10 மாதங்களுக்கும்;
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.40 வீதம் 10 மாதங்களுக்கும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இதேபோன்று, விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் 10 மாதங்களுக்கும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதம் ரூ.250 வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

முல்லைப் பெரியாறு : ஆக்ரமித்து கட்டிடங்கள் : அரசு உடந்தையாக உள்ளது : பொறியாளர்களுக்கு பாதுகாப்பு : ஐகோர்ட் உத்தரவு

தமிழக பொறியாளர்களுக்கு பாதுகாப்பு 
பெரியாறு அணை பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் தலைமை பொறியாளருமான விஜயகுமார், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் கேரள போலீசாரை நீக்கிவிட்டு, மத்திய போலீசாரை நியமிக்க வேண்டும், போதுமான அளவு தீயணைப்பு வீரர்களை நியமிக்க வேண்டும், நவீன தீயணைப்பு கருவிகளை நிறுவ வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை ஏற்கனவே அணையை ஆய்வு செய்த குழு, மத்திய அரசுக்கு அனுப்பியது. அதை மத்திய, மாநில அரசுகள் இதுவரை அமல்படுத்தவில்லை. அணைப்பகுதியை கேரளாவை சேர்ந்தவர்கள் ஆக்ரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதற்கு கேரள அரசு உடந்தையாக உள்ளது. அந்த ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும், அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அணை பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினருக்கும், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசு, தமிழகம், கேரள அரசின் தலைமை செயலாளர்களுக்கும், தேனி கலெக்டர், எஸ்.பி.க்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடையடைப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த மார்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் தினமும் 1500 டன் காய்கறிகள் கொண்டு வரப்படும். இதன்மூலம் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
இவற்றில் 80 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. பொள்ளாட்சி, பாலக்காடு வழியாகவும், கம்பம், போடி மெட்டு, குமுளி வழியாகவும், நாகர்கோவில், நெல்லை வழியாகவும் கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் அனுப்பப்படுவது வழக்கம். மீதி 20 சதவீத காய்கறிகளே தமிழகத்தில் விற்கப்படும்.
கேரளாவுக்கு அனுப்ப வேண்டிய சுமார் 1000 டன் காய்கறிகள் தடைபட்டுள்ளது.