Sunday, 29 April 2012

380 கோல் மீன் : ஒரு நாள் தொழில் 1 கோடி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். இவர் தனது சகோதரர் ஹரூன் பாயுடன் சேர்ந்து கடந்த வாரம் கட்ச் பகுதியில் ஜக்கு எனுமிடத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கடல் தங்கம் என்று அழைக்கப்படும் 380 கோல் மீன் கிடைத்தது. இந்த கோல் பிஷ் ஒன்று 50 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ 450 முதல் 600 வரை விற்கப்படுகிறது.
ghol_fishஒலி எழுப்பும் தன்மை கொண்டு கோல் மீனுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. கோல் மீன் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோல் மீனின் துடுப்பு பகுதி மருத்துவ துறையில் தையல் போடும் நூலிழை தயாரிக்க பயன்படுகிறது. இது மதுபானம் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் - பட்டை சோறு

நம் தலைமுறையில் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் பட்டை சோறு உண்பது எவர்சில்வர் பாத்திரம்கள் அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது.

தோட்ட வேலை செய்வோருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும். பாத்திரம்கள் அதிக எண்ணிகையில் இருக்காது அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி குழி ஏற்படுத்தி தும்பு பகுதி அதே ஓலையால் கட்டப்படும் இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள் சுற்றுலா செல்வோரும் கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும் இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்.

இலவச கட்டாய கல்வி உரிமை : ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்கவும், புகார் தெரிவிக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மையம் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
schoolas_in_tamil_naduநாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாய கல்வி வழங்குவதற்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற அரசின் முடிவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே முழுமையாக செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மாநில அளவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு உத்தரவையும் கடந்த நவம்பர் மாதமே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு பணி தேர்வுகளுக்கு இணையதளத்தில்பதிவு செய்வது எப்படி?

அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்து கொள்வது எப்படி என்பது குறித்த முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 10,718 இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி தண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் பணி இடங்கள், குரூப் 8-ல் காலியாக உள்ள 75 இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலை பணியாளர் என 10,793 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது.

குறும்பனையில் படமாக்கப்பட்ட செம்பட்டையில் கார்த்திகாவின் அக்கா

Sempattai_Kurumpanaiஜி.எஸ்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம், "செம்பட்டை". இதில் "கோ" கார்த்திகாவின் சித்தி மகள் கவுரி நம்பியார் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோ எம்.பாலா. பாசில் மற்றும் சித்திக்கின் உதவியாளர் ஐ.கணேஷ் இயக்குகிறார். மீனவர்களின் சகோதர பாசத்துடன் காதலை சொல்லும் படம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தம்பியால் ஏற்படும் பிரச்னைகளை அண்ணன் எவ்வாறு தீர்க்கிறார் என்பது திரைக்கதை.