Thursday, 17 May 2012

சுப்ரீம் கோர்ட் : கார்களில் கருப்பு பிலிம் ஒட்ட கூடாது. : போலீசாருக்கு பாக்கெட் நிறையும்.

traffic-police-fining-driversகார்களில் முன்புறம், பின்புற கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க கருப்பு பிலிம் ஒட்டப்படுகிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு காருக்குள் ஆட்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதுகூட தெரியாத அளவுக்கு பெரும்பாலானவற்றில் கருப்பு நிறத்தில் இந்த பிலிம்கள் ஒட்டப்படுகின்றன. இதை சமூகவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் டிரைவர்களுக்கு முன்பின் வரும் வாகனங்கள் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டு விபத்துக்கள் நேரிடுகிறது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘இந்தியா முழுவதிலும் மே மாதத்திலிருந்து கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்ட கூடாது. அதை நீக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

கேரளா : 21 வயது ஆனவர்களுக்கு மட்டுமே மது

கேரளாவில் இனிமேல் 21 வயது ஆனவர்கள் மட்டுமே ஒயின் ஷாப்புகளில் மது வாங்க முடியும். இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கேரளாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. இங்கு ரேஷன் கடைகளில் இருக்கும் கியூவை விட ஒயின் ஷாப்புகளின் முன் நிற்கும் கியூதான் அதிகமாக இருக்கும். கேரளாவில் மது வகைகளை விற்பனை செய்ய கேரள மதுபான விற்பனைக் கழகம் சார்பில் மூலைமுடுக்குகளில் கூட சில்லரை விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.