Saturday, 4 February 2012

‘சாதி மோதலை தூண்ட சதி’ : தினமலர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

வன்னியர் சமுதாயத்தைப் பற்றி இழிவாக செய்தி வெளியிட்டதற்காக "தினமலர்" ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ புகார் செய்துள்ளார்.

பேரவை தகவல் : மார்த்தாண்டம் பஸ்நிலைய பணி மார்ச் இறுதிக்குள் நிறைவடையும்

மார்த்தாண்டம் பஸ்நிலைய விரிவாக்கப்பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவடையும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே நேரத்தில் இரண்டு பல்கலை.யில் படிக்கலாம்


ஒரே நேரத்தில் 2 பல்கலைக் கழகங்களில் படிக்கும் திட் டத்தை அடுத்த கல்வியாண்டில் இருந்து அமல் படுத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

சைதையில் கூடங்குளம் போராட்டக் குழு மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்கியதைக் கண்டித்து, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திரு. J G பிரின்ஸ் - குளச்சல் MLA : மக்கள் பணியில்

திரு.  J G பிரின்ஸ் அவர்கள் 2011 - ல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11821 வாக்குகள் அதிகம் பெற்று குளச்சல் சட்டமன்ற உறுபினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஆக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை அவர் மக்கள் குறைகளை கேட்டறிந்து அவைகளுக்கு தீர்வு வழங்கிக்கிறார். சட்டமன்றத்திலும் மக்கள் குரலாக ஒலிக்கிறார். இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் தேர்வு செய்தமைக்கு நாம் மகிழ்வுற வேண்டும்.

ஜெனிலியா திருமணம் மும்பையில் நடந்தது : நடிகர், நடிகைகள் வாழ்த்து


நடிகை ஜெனிலியா, இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மராட்டிய முறைப்படி மும்பையில் நேற்று நடந்தது. ஏராளமான திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

நள்ளிரவு பார்ட்டியில் பிரியாமணியிடம் கலாட்டா


சிசிஎல் எனப்படும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் போட்டி இப்போது நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இப்போட்டி கொச்சியில் நடந்தது. இதில் இந்தி, தமிழ், மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். கிரிக்கெட் போட்டி முடிந்தபிறகு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பார்ட்டி நடந்தது. 

கல்விக் கட்டணம் பிரச்னை முற்றுகிறது : மாநில அளவில் போராட்டம்

தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய கடந்த திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அது, தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்தது. இறுதியாக, கடந்த ஆண்டு மே மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் உரிய கட்டணம் முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன. கட்டணக் குழு உத்தரவிட்ட கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டது.