Monday, 21 May 2012

பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் : கடலூர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. இந்த பகுதியில் நெல் சாகுபடி இல்லாத காலங்களில் வருமானத்திற்கு ஏதுவாக கத்தரி, வெண்டை, மிளகாய் என பல்வேறு வாணிப பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தற்போது, மருத்துவ குணம் நிறைந்த பாகற்காய் சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். சமப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைகளை விதைப்பர். குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும் மேல் பகுதியில் வலை போன்ற அமைப்பை ஏற்படுத்துவர். இதில் கொடியை ஏற்றி படர செய்வர். 150 நாட்கள் வரை பயன்தர கூடிய பயிராகும். 45 நாட்களில் கொடிகளில் இருந்து காய்களை அறுவடை செய்யலாம்.

அரசு பாலிடெக்னிக்குகளில் சேர இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

அரசு பாலிடெக்னிக்குகளில் முதலாம் ஆண்டு பட்டய சேர்க்கைக்கு இன்று (21ம் தேதி) முதல் விண்ணப்பம் விநியோகம் நடைபெறுகிறது.
அரசு பாலிடெக்னிக்களில் முதலாம் ஆண்டு முழுநேரம் மற்றும் பகுதிநேர பட்டய படிப்பில் சேர 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இன்று (21ம் தேதி) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 30 அரசு பாலிடெக்னிக் களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

தூத்தூர் பகுதி மீனவர்கள் கோஷ்டி மோதல்

தேங்காப்பட்டணத்தில் மீனவர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேர் மீது குளச்சல் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தூத்தூர் பகுதியை சேர்ந்த ஆன்றனி ஆரோக்கியதாஸ்(30) என்பவர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதியில் தனக்கு சொந்தமான படகை கடலுக்குள் தள்ளி கொண்டு சென்றபோது அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு மீது மோதியுள்ளது. இதில் இனயத்தை சேர்ந்த சிபுநேஸ்(19), சிலுவை அடிமை(47) ஆகியோர் தங்கள் படகு மீது ஏன் மோதினாய் என கேட்டு தகாத வார்த்தை பேசி ஆன்றனி ஆரோக்கியதாசுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் செல்வம், சிபுநேஸ், சிலுவை அடிமை ஆகியோர் படுகாயங்களுடன் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடபடுகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 30ம் தேதி வினியோகிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
+2-result-sms-on-mobileதேர்வு முடிவுகளை உங்கள் மொபைலில் மதிப்பெண்களுடன் SMS பெற உங்கள்...


பதிவு எண் :
பெயர் : 
மொபைல் நம்பர் :

பதிவு செய்யவும்
 click here : Get your +2 result SMS to your mobile with marks


பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிந்தன. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5557 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ மாணவிகள் எழுதினர்.