Monday, 21 May 2012

அரசு பாலிடெக்னிக்குகளில் சேர இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

அரசு பாலிடெக்னிக்குகளில் முதலாம் ஆண்டு பட்டய சேர்க்கைக்கு இன்று (21ம் தேதி) முதல் விண்ணப்பம் விநியோகம் நடைபெறுகிறது.
அரசு பாலிடெக்னிக்களில் முதலாம் ஆண்டு முழுநேரம் மற்றும் பகுதிநேர பட்டய படிப்பில் சேர 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இன்று (21ம் தேதி) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 30 அரசு பாலிடெக்னிக் களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
இதில் 9 பாலிடெக்னிக்குகளில் பகுதி நேர பட்டய படிப்பும், 14 பாலிடெக்னிக்குகளில் சுழற்சிமுறையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. சிறப்பு ஒதுக்கீடு, மாற்று திறனாளிகளுக்கான மத்திய அரசு மனித வள மேம்பாட்டுத்துறையின் சிறப்பு ஒதுக்கீடு உண்டு. விண்ணப்ப கட்டணம் ரூ.150. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பொது பிரிவினர், பகுதிநேர படிப்புக்கு விண்ணப்பிப்போர் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரின் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். சிறப்பு ஒதுக்கீடுகளுக்கு "மைய பலவகை தொழில்நுட்ப கல்லூரி, தரமணி, சென்னை-113" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் ஜூன் 8ம் தேதி கடைசி நாள் ஆகும்.

No comments:

Post a Comment