Monday 21 May 2012

தூத்தூர் பகுதி மீனவர்கள் கோஷ்டி மோதல்

தேங்காப்பட்டணத்தில் மீனவர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேர் மீது குளச்சல் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தூத்தூர் பகுதியை சேர்ந்த ஆன்றனி ஆரோக்கியதாஸ்(30) என்பவர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதியில் தனக்கு சொந்தமான படகை கடலுக்குள் தள்ளி கொண்டு சென்றபோது அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு மீது மோதியுள்ளது. இதில் இனயத்தை சேர்ந்த சிபுநேஸ்(19), சிலுவை அடிமை(47) ஆகியோர் தங்கள் படகு மீது ஏன் மோதினாய் என கேட்டு தகாத வார்த்தை பேசி ஆன்றனி ஆரோக்கியதாசுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் செல்வம், சிபுநேஸ், சிலுவை அடிமை ஆகியோர் படுகாயங்களுடன் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆன்றனி ஆரோக்கியதாஸ் அளித்த புகாரின் பேரில் இனயத்தை சேர்ந்த சிபுநேஸ்(19), சிலுவை அடிமை(47) ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதனை போன்று சிபுநேஸ் அளித்த புகாரின் பேரில் சின்னத்துறையை சேர்ந்த ஆன்றனி ஆலோசியஸ்தாஸ், ராமன்துறை பிரான்சிஸ், புஷ்பராஜ், எட்வர்ட் கென்னடி ஆகியோர் மீதும் குளச்சல் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment