Tuesday 6 December 2011

Youngest Couple Married : Engaged Young Couple


Youngest Couple of the World
Every little girl dreams about her wedding day, complete with visions of a big beautiful white dress and, of course, the perfect man. But 9-year-old Jayla Cooper didn't have a lifetime to wait for Mr. Right.
 

The Southlake, TX, girl had been battling leukemia for two years, a battle that would end in just a matter of weeks. But what Jayla did have was a groom. He's her best friend, Jose Griggs, 7, a fellow patient at Children's Medical Center in Dallas.

Jayla and Jose tied the knot in February 2009 to fulfill her final wish: Getting married in a beautiful wedding, surrounded by family and friends. From the flowers to the banquet hall, donations poured in to give a North Texas bride the wedding of her dreams.

Jaila died on Wednesday, April 1, 2009.
============

Worlds Couple Engaged in Syria She's 3, He's 5
Hala and her fiance Khalid

Khalid's father Juma -- who lives in the city of Homs, some 100 miles north of Damascus -- told the paper that his son asked for his fellow kindergartner's hand in marriage "of his own free will," after a brief holiday romance. Both families are now reportedly preparing for the ceremony, which will take place in a decade, when Khalid is 15 and Hala 13. Such a ceremony would still be against Syrian law, which states the minimum age for marriage is 17 for women and 18 for men.

While child marriages aren't unknown in Syria's more remote rural regions -- ceremonies involving girls as young as 13 and boys age 15 have been known to take place in defiance of the law -- they're almost unheard of in its cities, where the average age of marriage for women is 25, according to rights organization Freedom House.

However, Juma has pledged that if the youngsters decide not to marry in a decade's time, he'll honor their request. "We know that Khalid or Hala might change their mind in the future," he said. "But what we do know at this stage is that they are very happy and talk to each other every day."

Exam for pilot licences goes online

In a bid to prevent pilots from getting licences through fraudulent means, Civil Aviation regulator DGCA on Dec 3rd started for the first time its online examinations for pilot licences.

The examinations for both Commercial Pilots Licence (CPL) and Airlines Transport Pilots Licence (ATPL) would be conducted till December 9, a Directorate General of Civil Aviation official said.
The examination are held at seven centres in six cities across the country including two online centres in Mumbai. 2,192 candidates are expected to appear for CPL test and another 1,339 for ATPL exam, the DGCA official said.
DGCA chief E K Bharat Bhushan had told PTI that introduction of the online test system was part of efforts to modernise the examination system for pilots. This time even the registration of candidates for the examinations had been conducted online, the official said.
The DGCA has been reviewing its procedures for conducting pilots' tests after a chance probe earlier this year had found that unscrupulous elements had managed to procure licences after bending rules.
The government had after the probe started plugging loopholes in the examination and licencing system for pilots.

யாரும் வன்முறையில் இறங்க வேண்டாம் : கேரள முதல்வர் உம்மன்சாண்டி வேண்டுகோள்

இடுக்கியில் போராட்டம்
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக & கேரள எல்லை யில் பதற்றம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் குமுளியில் தமிழக லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று அங்கு தமிழர்கள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களை துரத்தி துரத்தி ஒரு கும்பல் தாக்கியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் சுமூக தீர்வு காண, தமிழகம் மற்றும் கேரளா இடையே அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து இருமாநில நீர்வளத் துறை செயலாளர்களுக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை கேரளா வரவேற்கிறது. பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே கேரளா விரும்புகிறது. தமிழகத்துக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பதே கேரளாவின் நிலைப்பாடு. குமுளி மற்றும் கம்பம் மேடு பகுதியில் சில துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது. யாரும் சட்டத்தை கையிலெடுக்க அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.
முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் இன்று அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

NASA confirms another Earth (சுத்துகிறது இன்னொரு பூமி)

NASA has found a planet outside our solar system that looks to be an awful lot like Earth or maybe even better, given that its climate is roughly like a balmy day in Key West.
The planet, Kepler-22b, is the first confirmed planet within the "habitable zone," meaning that liquid water could exist on the surface and support life. It is almost 2.5 times the size of Earth and 600 light years away, so you may want to start saving your frequent flier miles now if you want your great-to-the-29th-power grandchildren to have a shot at vacationing there.
Scientists estimate the temperature on the surface of the planet to be about 72 degrees, according to the Associated Press. Kepler-22b circles a star very similar to our own sun, although it does it in a slightly shorter period, with one Kepler 22-b year lasting about 290 days.
Scientists say it's likely the planet has water and land, but can't yet rule out the possibility that it is an entirely gaseous planet, which would severely limit its potential as an intergalactic vacation destination.
NASA's Kepler mission is all about finding potentially habitable planets by identifying possible candidates in other solar systems that are both roughly Earth-sized and in the "habitable zone" of their solar systems. The mission's most recent data identifies 48 candidate planets, but Kepler 22-b is the first to be confirmed.
Tamil : [சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் உறுதிசெய்துள்ளது.
அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வேறு ஏதும் கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது. வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறைய பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.
அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கேமராக்கள் உறுதி செய்துள்ளன. சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உள்ளிட்ட அம்சங்களை பார்க்கும்போது, உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது. கெப்ளர் 22பி என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது.]

இடுக்கியில் 144 தடை : முற்றுகிறது முல்லை பெரியாறு பிரச்னை

ஐயப்ப பக்தர்கள் பீதி
(6.12.11) முல்லை பெரியாறு சர்ச்சையில் தமிழக & கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால், இடுக்கியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் கேரளா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேனியில் பீதியுடன் தங்கியுள்ளனர்.
பதில் தாக்குதலால் தமிழகத்திலும் பதற்றம் பரவுகிறது 
முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழக தென் மாவட்டங்களிலும், கேரளாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள இளைஞர் காங்கிரஸ், மாநில பாஜவினர் பெரியாறு அணையை இடிக்க முயன்றது தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகப்படுத்தி உள்ளது.
கேரளாவில் தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கியதாலும், டிரைவர்களை தாக்கியதாலும், கம்பம், கூடலூரில் நேற்று மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கூடலூரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையை 50க்கும் அதிகமான இடங்களில் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் உம்மன்சாண்டி உருவ பொம்மை எரிப்பு
நூற்றுக்கணக்கான பைக்குகளில் கம்பம் நகர் முழுவதும் இளைஞர்கள் வலம் வந்து கேரளாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கேரளா செல்ல முயன்ற பஸ்கள் மறிக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளிகளுக்கு நேற்று மதியம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பதற்றம் அதிகரித்ததை அடுத்து தமிழக & கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு பகுதிகளில் நேற்று கேரள போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால், தமிழகத்துக்கு உட்பட்ட கம்பம், கூடலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி கலெக்டர் பழனிச்சாமி, தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், திண்டுக்கல் எஸ்பி ஜெயச்சந்திரன், மதுரை சிறப்பு அதிரடிப் படை எஸ்பி ஈஸ்வரன், நெல்லை எஸ்பி விஜேந்திர பிதரி, விருதுநகர் எஸ்பி நஜ்மல் ஹோடா, ராமநாதபுரம் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் கம்பத்தில் முகாமிட்டுள்ளனர்
தமிழகத்தில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதால் நேற்று முதல் ஐயப்ப பக்தர்கள் யாரும் கேரளா செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை முதல் சபரிமலை செல்ல சாரை சாரையாக வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் மறித்து நிறுத்தி விட்டனர்.
உத்தமபாளையம் அருகே ஆலைமலையான்பட்டியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையை எரிப்பதற்காக ஊர்வலமாக எடுத்துவரும் மக்கள்.
தமிழக & கேரள எல்லையில் பதற்றம் நிலவுவதால் தேனி மாவட்டம் கம்பத்தில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதால் நேற்று முதல் ஐயப்ப பக்தர்கள் யாரும் கேரளா செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை முதல் சபரிமலை செல்ல சாரை சாரையாக வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் மறித்து நிறுத்தி விட்டனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 2 நாட்களாக கம்பம், கூடலூர் பகுதியில் தவித்து வருகின்றனர். இன்றும் அதே நிலை நீடித்தது. இதற்கிடையில் ஏற்கனவே சபரிமலை சென்ற ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்களும் திரும்பி வர முடியாமல் கேரளாவில் தவித்து வருகின்றனர்.
கேரளாவுக்கு செல்ல முடியாததால் பழநி கோயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது. பாளையம், தேவாரம், பெரியகுளம், சின்னமனூர், வீரபாண்டி என ஏராளமான ஊர்களில் உம்மன்சாண்டியின் உருவபொம்மையை இன்று மக்கள் தீயிட்டு கொளுத்தினர். தேனி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநில எல்லையில் வஜ்ரா, தீயணைப்பு வாகனங்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உத்தமபாளையம் டிஎஸ்பி ஸ்டாலின் தலைமையில் விடிய விடிய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கேரள நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல்
கேரளா சென்ற தமிழக தொழிலாளர்களின் ஜீப்களை நேற்று முன்தினம் சிறை பிடித்து ஒரு கும்பல் தாக்கியது. தகவல் பரவியதும் ஆத்திரம் அடைந்த மக்கள் கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் கேரள வாகனங்கள் அனைத்தையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவாரம், கம்பம் உள்ளிட்ட இடங்களில் கேரளாவை சேர்ந்த சிலர் நிதி நிறுவனங்கள், ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களை தாக்கிய பொதுமக்கள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சுக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட சில ஜீப்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன.   (Tamil Murasu)

தமிழகத்தில் மாவட்ட வாரியான மக்கள்தொகை : 15 -வது கணக்கெடுப்பு

2011 மார்ச் 31 -ம் தேதி வெளியிடப்பட்ட 15 -வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மக்கள்தொகை

சட்டவிரோதம் : ஊழியருக்கு கொடுத்த பணத்தை ஓய்வு பெற்ற பிறகு அரசு கேட்பது

பணியின் போது பெற்ற பணத்தை ஓய்வு பெற்ற பிறகு அரசு கேட்பது நியாயமற்றது , சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த கண்ணம்மாள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
நான் அரசு சுகாதார மையத்தில் மலேரியா ஓழிப்பு களப்பணியாளராக கடந்த 1969ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். எனது பணியை கடந்த 1978ம் ஆண்டு அரசு நிரந்தரப்படுத்தியது. இதனால் எனக்கு கடந்த 1969ம் ஆண்டில் இருந்து ஊதியம் கொடுக்கப்பட்டது.
கடந்த 32 ஆண்டுகளாக நான் அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய பிறகு கடந்த 2010ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெற்ற பிறகு அரசு எனக்கு ஒரு நோட்டீசு கொடுத்தது. அதில், கடந்த 1978ம் ஆண்டு தான் நான் பணியில் நிரந்தரப்படுத்தப்பட்டேன். ஆனால் கடந்த 1969ம் ஆண்டில் இருந்து பணி நிரந்ததரத்திற்கான ஊதிய பயனடைந்துள்ளது தவறானது, ஆகவே கடந்த 1969ம் ஆண்டில் இருந்து 1978ம் ஆண்டு வரை கூடுதலாக பெற்ற பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறியுள்ளது.
இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே 32 ஆண்டுக்கு பிறகு எனக்கு அரசு நோட்டீசு கொடுத்தது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து, மனுதாரர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசு நோட்டீசு கொடுத்தது சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் அரசுக்கு சேர வேண்டிய பணத்தை திரும்ப கேட்க கூடாது கூறியுள்ளது. எனவே 32 ஆண்டுகளுக்கு பிறகு மனுதாரரிடம் பணத்தை திரும்ப அரசு கேட்பது சட்டவிரோமானது.
ஆகவே அரசு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.

200 ஆண்டுகளுக்கு மேல் பயன்தரும் ‘ஜியோபேக்’ மூட்டைகள் உப்பு நீராலும் பாதிக்கப்படாது

தண்ணீரில் போட்டாலும் 200 ஆண்டுகளுக்கு மேல் பாதிப்பு ஏற்படாமல் மண் அரிப்பை தடுக்க உதவும் ‘ஜியோபேக்’ என்னும் பைபர் இழைகளால் ஆன பை, கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப் படுகிறது.
மழை மற்றும் வெள்ளம் ஏற்படும்போது வாய்க்கால், ஏரி மற்றும் நீர்நிலைகளின் கரைகள் எளிதில் உடையும். அப்போது பொதுப்பணி த்துறை சார்பில் மணல் நிரப்பப்பட்ட சாக்கு மூட்டைகள் கரை உடையும் இடத்தில் போடப்பட்டு உடைப்பு சரி செய்யப்படு வது வழக்கம். ஆனால், நீண்ட நாள் பயன்படும் வகையிலும், மண் அரிப்பை தடுக்கும் வகையிலும், ‘ஜியோபேக்’ வகை சாக்கு மூட்டைகளை பொதுப் பணித்துறையினர் தற்போது அறிமுகம் செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அளக்குடி என்ற இடத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி, கரையை பலப்படுத்தும் வகையில் கான்கிரீட் சிமென்ட் தூண் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. ஆற்றின் கரையை ஒட்டி, மண் அரிப்பை தடுக்கும் வகையில் ‘ஜியோபேக்’ என்ற வகை சாக்கு மூட்டைகளில் மணல் கொட்டி அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, கொள்ளிடம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மஜித் கூறுகையில், ஜியோபேக் என்பது கண்ணாடி நாரினால் (பைபர் கிளாஸ்) தயாரிக்கப்பட்ட பெரிய பை போன்றது.
இந்த பையில் மணலை நிரப்பி, தண்ணீரு க்குள் போட்டுவிட்டால் 200 ஆண்டுகள் ஆனாலும் பைக்கு பாதிப்பு ஏற்படாமல் அப்படியே இருக்கும். இதனால் மண் அரிப்பு நீண்ட காலத்திற்கு தடுக்கப் படும்.
இது உப்பு நீராலும் பாதிக்கப்படாது என்றார். (Dinakaran)

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால் எல்கேஜி மாணவன் மூச்சுத் திணறி சாவு :

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால், எல்.கே.ஜி. மாணவன் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான்.
சென்னை அடுத்த கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், தனியார் சாப்ட்வேர் கம்பெனி மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் களது மகன் ஹரீஸ் சாய்நாதன். மூன்றரை வயது சிறுவன். இவன் பல்லாவரம், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.
கிருஷ்ணகுமார், தனது மகனை நேற்று காரில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றார். ஹரீஸ், காலை 10.15 மணிக்கு பள்ளி வராண்டாவில் சக மாணவர்களுடன் வீட்டில் இருந்து கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப் பிட்டுக் கொண்டிருந்தான். வேகமாக சாப்பிட்டதாக தெரிகிறது.
அப்போது, எதிர்பாராதவிதமாக பழம் தொண்டையில் சிக்கியது. இதில் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் அவனுக்கு முதலுதவி செய்தனர். இருப்பினும், மூச்சுத் திணறல் நீடித்தது. பின்னர் வலிப்பு ஏற்பட்டது.
பயந்துபோன பள்ளி ஆசிரியர்கள், அவனை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதனை செய்த மருத்துவர் ஹரீஸ், ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், ஹரீஸ் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், ஹரீஸ் காலையில் என்னுடன் காரில் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தான். நான் வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில், அவன் இறந்து விட்ட செய்தி என்னை அதிர்ச்சியடைய செய்துவிட்டதாக கூறி கதறி அழுத்தார்.  (- தினகரன்)
"பெற்றோர்கள் எளிதில் ஜீரணம் ஆக கூடிய கடினமல்லாத உணவுகளை தங்கள் குழந்தைகளுக்கு தருவதன் மூலம் இதுபோன்ற இழப்பு /அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்"

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்று : அரசு புது உத்தரவு

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வு துறை தெரிவித்துள்ளது. இதற்காக, விண்ணப்பத்துடன் வழங்கப்பட்டுள்ள கூடுதல் படிவத்தில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கலர் புகைப்படம் ஒட்டி, தேர்வர்கள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்காமல், தனித்தேர்வராக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. வரும் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அன்றைய தினம் மாலை 5 மணிக்குள், விண்ணப்பம் விநியோகம் செய்த மையத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, தனித்தேர் வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத்தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. இதற்கு வசதியாக, தனித்தேர்வருக்கான விண்ணப்பத்துடன் கூடுதல் படிவம் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த படிவத்தில் தனித்தேர்வர்கள் தனியாக ஒரு கலர் புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். அந்த படிவத்தில் ஒட்டப்பட்ட புகைப்படத்தில் தேர்வர்களோ, அதிகாரிகளோ கையெழுத் திடத் தேவையில்லை. புகைப்படம், சமீபத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
புகைப்படம் ஒட்டப்பட்ட படிவம், தனித்தேர்வர் விண்ணப்பம் ஆகியவற்றில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடிக்கவோ, குண்டூசி குத்தவோ கூடாது. விண்ணப்பங்களை சேர்த்து அனுப்ப ‘ஜெம் கிளிப்’ மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். தேர்வரின் புகைப்படம்தான் படிவத்தில் ஒட்டப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட தேர்வரே, நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசுத்தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

புரோட்டா எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது : கன்னியாகுமரி வந்த ஹாலந்து மாணவிகள்

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மாரா, எலன், ப்ளூன், ஆகிய மாணவிகளும் தைஸ் என்ற மாணவனும் அங்குள்ள போன்றிஸ் பல்கலைக் கழகத்தில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் பற்றி படித்து வருகின்றனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஹாலந்து மாணவிகள் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று புரோட்டா தயாரிப்பது குறித்து மாஸ்டரிடம் கேட்டறிந்தனர்.
இவர்கள் நான்குபேரும் இந்தியாவில் இந்த சிகிச்சைபற்றிய பயிற்சி பெறுவதற்காக கடந்த மாதம் 3ம் தேதி இந்தியா வந்தனர். திருச்சியிலுள்ள புனித சிலுவை கல்லூரியில் இந்த துறை சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர்கள் கன்னியாகுமரியை சுற்றிப் பார்ப்பதற்காக நேற்று கன்னியாகுமரி வந்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், நாங்கள் முதன் முறையாக இந்தியா வந்துள்ளோம். தமிழகத்தில் பிரபலமான புரோட்டா எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புரோட்டாக்களை தயாரிக்க நாங்கள் கற்றுக்கொண்டோம்.
இந்திய நாடும், இந்த நாட்டின் கலாச்சாரமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. இந்தியாவில் உள்ள வானிலை எங்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
எல்லாவற்றிலும் மேலாக இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.6 வார காலம் இந்தியாவில் தங்கி இருந்து பயிற்சியை முடித்து எங்கள் நாட்டுக்கு செல்ல இருக்கிறோம். ஆனால் இந்தியாவையும் , இந்தியர்களையும் எங்களால் என்றுமே மறக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.