தண்ணீரில் போட்டாலும் 200 ஆண்டுகளுக்கு மேல் பாதிப்பு ஏற்படாமல் மண் அரிப்பை தடுக்க உதவும் ‘ஜியோபேக்’ என்னும் பைபர் இழைகளால் ஆன பை, கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப் படுகிறது.
மழை மற்றும் வெள்ளம் ஏற்படும்போது வாய்க்கால், ஏரி மற்றும் நீர்நிலைகளின் கரைகள் எளிதில் உடையும். அப்போது பொதுப்பணி த்துறை சார்பில் மணல் நிரப்பப்பட்ட சாக்கு மூட்டைகள் கரை உடையும் இடத்தில் போடப்பட்டு உடைப்பு சரி செய்யப்படு வது வழக்கம். ஆனால், நீண்ட நாள் பயன்படும் வகையிலும், மண் அரிப்பை தடுக்கும் வகையிலும், ‘ஜியோபேக்’ வகை சாக்கு மூட்டைகளை பொதுப் பணித்துறையினர் தற்போது அறிமுகம் செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அளக்குடி என்ற இடத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி, கரையை பலப்படுத்தும் வகையில் கான்கிரீட் சிமென்ட் தூண் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. ஆற்றின் கரையை ஒட்டி, மண் அரிப்பை தடுக்கும் வகையில் ‘ஜியோபேக்’ என்ற வகை சாக்கு மூட்டைகளில் மணல் கொட்டி அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, கொள்ளிடம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மஜித் கூறுகையில், ஜியோபேக் என்பது கண்ணாடி நாரினால் (பைபர் கிளாஸ்) தயாரிக்கப்பட்ட பெரிய பை போன்றது.
இந்த பையில் மணலை நிரப்பி, தண்ணீரு க்குள் போட்டுவிட்டால் 200 ஆண்டுகள் ஆனாலும் பைக்கு பாதிப்பு ஏற்படாமல் அப்படியே இருக்கும். இதனால் மண் அரிப்பு நீண்ட காலத்திற்கு தடுக்கப் படும்.
இது உப்பு நீராலும் பாதிக்கப்படாது என்றார். (Dinakaran)
No comments:
Post a Comment