Saturday, 5 May 2012
குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறை இல்லை : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
தனது கிளைகளில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறையை கைவிடுமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 17ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கித் துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வீட்டு கடனை முன்கூட்டி திருப்பி செலுத்தினால் அபராத வட்டி கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 0 பாலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்குகளை தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.
குழந்தை, சமையல், துணி மடித்தல் காரணங்களுக்காக விவாகரத்து கேட்க முடியாது
குடும்பத்தின் நிதி நிலையை கருதி மனைவி குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பதை காரணம் காட்டி, கணவர் விவாகரத்து கோர முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)