Saturday 5 May 2012

குழந்தை, சமையல், துணி மடித்தல் காரணங்களுக்காக விவாகரத்து கேட்க முடியாது

குடும்பத்தின் நிதி நிலையை கருதி மனைவி குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பதை காரணம் காட்டி, கணவர் விவாகரத்து கோர முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
divorced_couple_maharashtraமகாராஷ்டிராவை சேர்ந்தவர் ரமேஷ் ஷெனாய் (30), இவருடைய மனைவி பிரீதி (26), இருவருக்கும் 2007, பிப்ரவரியில் திருமணம் நடந்தது. இருவரும் வேலை செய்கின்றனர்.
திருமணமான நான்கு மாதத்துக்கு பிறகு பிரீதி தனது கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் ரமேஷ் மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அவர் தனது மனுவில், "தேனிலவின்போது ஆணுறை அணிந்தால் மட்டுமே உடலுறவுக்கு சம்மதிப்பேன் என்று என் மனைவி கூறினார்.மேலும் அவருக்கு சமைக்க தெரியவில்லை. சம்பள பணத்தை என்னிடம் தருவதில்லை. துணிகளை சரியாக மடித்து வைக்க தெரியவில்லை. எனவே, அவரை விவாகரத்து செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று கோரினார்.
நீதிபதிகள் மஜும்தார், அனூப் மேத்தா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அதை தள்ளுபடி செய்த நீதிபதிகள், “குடும்ப நிதி நிலையை கருதி மனைவி கருத்தரிக்க மறுப்பதை காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது . மனைவியின் இந்த நடவடிக்கையை கொடுமைபடுத்துவதாக கூற முடியாது. இதேபோல், மனைவிக்கு சமைக்க தெரியாது, துணிகளை மடிக்க தெரியாது போன்ற காரணங்களுக்காகவும் விவாகரத்து கேட்க முடியாது” என்று தீர்ப்பு அளித்தனர்.

No comments:

Post a Comment