பெண் பனையில் உருவாகும் பாளை நாளடைவில் பணம்காயாக உருவாகிறது. இளம் பனம்காய் நொங்கு எடுக்க உகந்தது. சரியான பருவம் முக்கியம். இல்லை எனில் கடுக்காய் எனப்படும் முதிர்ந்த நிலைக்கு சென்று விடும். அது சுவைக்காது!!
உயரமான மரமெனில் குலையோடு கயிற்றில் கட்டி கவனமாக இறக்க வேண்டும். இல்லையெனில் காய் சிதறி விடும். இறக்கப்பட்ட நொங்கின் மேல்பகுதியை கூரிய அரிவாளால் சீவ வேண்டும். சீயவிய பின் கையோடு வரும் சிறு பகுதியிலும் கொஞ்சம் நுங்கு இருக்கும் இதை வீணாக்காமல் நக்கி சாப்பிடுவது நம் பண்பாடு.
இப்போது சீவப்பட்ட பகுதி உங்கள் கையில் இருக்கும். ஒரு கத்தியை கொண்டு
நொங்கின் கண் பகுதியை சுற்றி தோசை திருப்பி போடுவதுபோல் எல்லா பக்கம்களிலும் வாகாக இளக்க வேண்டும். பின்னர் நான்கு புறமும் மாற்றி மாற்றி நெம்ப வேண்டும் இப்படி செய்தால் நுங்கு சேதமில்லாமல் இளகி வரும். இதுதான் நோண்டி நொங்கு எடுத்தல் எனப்படும். நோகாமல் நொங்கு தின்பது என்ற சொல்வடை இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும். நொங்கு சேதாரமின்றி எடுத்தல் அவசியம். அப்போதுதான் நுங்கின் உள்ளே இருக்கும் சில துளி இனிமையான திரவம் பருக கிடைக்கும்.
அனைத்து கண்களும் எடுக்கப்பட்ட ஒரே அளவிலான இரு நுங்கு காய்களை எடுத்து இருபறமும் முனை சீவப்பட்டு கூர்மையான கம்புதுண்டை இருமுனைகளிலும் இரண்டு நுங்கு காய்களை நடுபகுதியில் சொருக வேண்டும். இபோது இரு சக்கர நுங்கு வண்டி தயார். இனி வண்டியை செலுத்த தயாராக ஒரு நீண்ட V முனை கொண்ட கம்பை இணைத்து வண்டியை ஓட்ட ஆரம்பிக்கலாம்.
சிலர் மூன்று காய்களை வைத்து மூன்று சக்கர வண்டியும் செய்வார்கள்.
No comments:
Post a Comment