ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி முதல்வகுப்பு 2 அடுக்கு ஏசி, ஏசி முதல் வகுப்பு கட்டணங்கள நாளை முதல் உயர்கிறது. ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 காசு முதல் 30 காசு வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.