Saturday, 18 February 2012

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் : 8 முதல்வர்கள் எதிர்ப்பு

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த மையம் செயல்பட உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் ரெய்டு நடத்தவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் இந்த மையத்தின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த தன்னிச்சையான முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 8 மாநில முதல்வர்கள் கோரியுள்ளனர்.