Tuesday 28 February 2012

குளச்சல் (குமரி) மீனவர்கள் 7 பேர் மாயம் : கலெக்டரை சந்தித்து மனு

திருச்செந்தூர் அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேர் 15 நாட்களாகியும் கரை திரும்பாததால் மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. உறவினர்கள், பங்குதந்தையர் நேற்று கலெக்டரை சந்தித்து காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரகேட்டு மனு கொடுத்தனர்.

மீனவர்களை சுட உத்தரவிட்டது யார்? சிக்கலில் இத்தாலி கடற்படை


கடந்த மாதம் பிப்ரவரி 13-ம் தேதி. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து 11 மீனவர்களுடன் வழக்கம்போல ஒரு மீன்பிடிப் படகு கடலுக்கு சென்றது.  குமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த பிரெடி என்பவருக்கு சொந்தமான "செயின்ட் ஆன்டனீஸ்" என்ற இந்தப் படகில் இரயுமன்துறையைச் சேர்ந்த அஜீஷ் பிங்கு, கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் உட்பட 11 பேர் இருந்தனர். 15ம் தேதி கரைக்கு திரும்ப திட்டம். ஆனால் அன்று மாலை 4.30 மணியளவில் படகில் இருந்த ஜெலஸ்டின் மற்றும் அஜீஷ் ஆகியோர் இத்தாலி கப்பல் வீரர்களால் சுடப்பட்டனர்.

லட்சக்கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : காரணம் என்ன???


காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தது. இதனால் கடலில் ரசாயன கழிவு கலக்கப்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அம்மா!!! தாயே!!! கல்வி பிச்சை ஆர்ப்பாட்டம் : அரசு கவனிக்குமா???

ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று மாணவிகள் தட்டு ஏந்தி, கல்வி பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினர்.