ஜப்பானில் படிக்க ஜப்பான் அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச மாணவர்கள், ஜப்பானில் தங்கி இளநிலைக் கல்வி (யுஜி) படிப்பதற்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க உள்ளது. கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (மெக்ஸ்ட்) கீழ் இயங்கும் சர்வதேச மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளநிலை கல்வி படிக்கலாம். ஏப்ரல் 2013 முதல் 3, 4 மற்றும் 5ம் ஆண்டுகளில் உதவித் தொகை வழங்கப்படும்.