டீசல் கார் மீதான உற்பத்தி வரியை அதிகரிப்பது குறித்து நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. வரி உயர்வு பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய தலைவர் எஸ்.கே.கோயல் நேற்று தெரிவித்தார்.
டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. அப்படியிருந்தும் டீசலின் விலையில் லிட்டருக்கு ரூ 15.35 வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே, டீசல் கார்களின் விலை அதிகரித்தால், அதன் விற்பனை குறையும். அதன் மூலம், டீசல் பயன்பாடு குறையும் என மத்திய அரசு கருதுகிறது.