Saturday, 14 January 2012

ஓட்டலில் உணவு விலையை கட்டுப்படுத்த வேண்டும் : தோசை ரூ 45, சாப்பாடு ரூ 60

கலெக்டருக்கு மார்க்சிஸ்ட் வேண்டுகோள்
குமரி மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாகர்கோவிலில் சமீப காலமாக ஓட்டல்களின் செயல்பாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. பல ஓட்டல்களின் விலைப்பட்டியல் வைப்பதில்லை. பண்டங்களை ஈக்கள் மொய்க்காமலும், தூசுகள் படியாமலும் மூடி வைப்பதில்லை. பெரும் கலப்படங்கள் நடைபெறுகிறது.

கொழுப்பை கரைக்கும் அக்ருட் : ஆராய்ச்சி தகவல்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ருட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம்.

அரசின் இலவச ஆடுகள் கசாப்பு கடைகளில் : இலவசங்கள்?????

விவசாயிகள் தங்கள் குடும்ப வருமானத்தை பெருக்க தமிழக அரசு, இலவச ஆடு, மாடுகளை வழங்கி வருகிறது. இந்த ஆடுகள் அந்தந்த ஊர்களில் உள்ள சந்தைகளில் அதிகாரிகளால் வாங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு அதிகாரிகள் ஆடுகளை வழங்கினர்.

மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் : அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை கேட்டு வழக்கு

கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த வி. ஆர்த்தி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:
தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள், 14 நடமாடும் மருத்துவ பிரிவு கள், 11 அரசு மருந்தகங்கள், 7 பெண்கள் மற்றும் குழந் தைகள் மருத்துவமனைகள், 4 காசநோய் மருத்துவ மனை கள் மற்றும் 7 தொழுநோய் மருத்துவமனைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த மருத்துவமனைகளின் சேவையை நம்பியே உள்ளனர். சமுதாயத்திற்கு சேவையாற்றும் பொறுப்பு இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு உள்ளது.

ரஞ்சி கோப்பை : பைனலில் தமிழகம்

மும்பை அணியுடனான ரஞ்சிக் கோப்பை அரை இறுதிப் போட்டியை டிரா செய்த தமிழகம், முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சென்னையில் 19ம் தேதி தொடங்கும் பைனலில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணியுடன் தமிழகம் மோதுகிறது.

Americans Jobless : Limit Outsourcing : Obama (ஒபாமா எச்சரிக்கை : அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?)

President Barack Obama wants to implement tax incentives for companies to bring home manufacturing jobs back in the country. He also wants to limit tax breaks for companies that send jobs abroad. He gave the statement last Wednesday among executives from chemical, aerospace and furniture companies.

தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் : தென் மண்டலம்

தென் மண்டல அஞ்சல் துறையின் கீழ் உள்ள 733 தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த சேவையும் துரிதமாக நடைபெறும்.
தபால் பட்டுவாடா, பதிவு தபால் போக்குவரத்து, பார்சல் தபால் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, மணியார்டர், ஸ்பீடு போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அஞ்சல் துறை செய்து வருகிறது.

3 சிறுமிகளை காப்பாற்றிய தர்மபுரி மாணவனுக்கு தேசிய விருது

R. Sudhakar, Superintendent of Police, handing over a cash prize to G. Parameswaran
தர்மபுரி அருகே குளத்தில் தத்தளித்த மூன்று சிறுமிகளை காப்பாற்றிய 9ம் வகுப்பு மாணவனுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் இதை பிரதமர் வழங்குகிறார்.
தர்மபுரி மாவட்டம் அரகாசனஅள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பரமேஸ்வரன்(14). இவர் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18.09.2010 அன்று நாகாவதி அணையின் கால்வாயில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.

விண்ணப்பங்கள் வரவேற்பு : வேலைவாய்ப்பற்றோர் அரசு உதவித்தொகை

சென்னை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசால், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் 31.12.2011 தேதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.