Saturday 14 January 2012

ரஞ்சி கோப்பை : பைனலில் தமிழகம்

மும்பை அணியுடனான ரஞ்சிக் கோப்பை அரை இறுதிப் போட்டியை டிரா செய்த தமிழகம், முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சென்னையில் 19ம் தேதி தொடங்கும் பைனலில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணியுடன் தமிழகம் மோதுகிறது.
வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்த அரை இறுதியில், மும்பை அணியுடன் மோதிய தமிழகம் முதல் இன்னிங்சில் 359 ரன் விளாசியது. மும்பை அணி முதல் இன்னிங்சில் 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழகம், 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்திருந்தது. முரளி விஜய் 103 ரன், பிரசன்னா 1 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.
விஜய் 142 ரன் (250 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்சர்), பிரசன்னா 44, குப்தா 13, பாலாஜி 4 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். தமிழகம் 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. யோமகேஷ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை பந்துவீச்சில் பல்விந்தர் சாந்து 5 விக்கெட் கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்சில் 534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 29 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன் எடுத்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக தமிழக அணி பைனலுக்கு முன்னேறியது. பிரசன்னா ஆட்டநாயகன் விருது பெற்றார். சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 19ம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணியுடன் தமிழகம் மோதுகிறது.

click here

No comments:

Post a Comment