கலெக்டருக்கு மார்க்சிஸ்ட் வேண்டுகோள்
நாகர்கோவிலில் சமீப காலமாக ஓட்டல்களின் செயல்பாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. பல ஓட்டல்களின் விலைப்பட்டியல் வைப்பதில்லை. பண்டங்களை ஈக்கள் மொய்க்காமலும், தூசுகள் படியாமலும் மூடி வைப்பதில்லை. பெரும் கலப்படங்கள் நடைபெறுகிறது.
எண்ணெய், மாவு, தேயிலை உள்பட அனைத்தும் கலப்படமாகவே உள்ளது. மேலும் இறைச்சி வகைகளிலும் பெரும் கலப்படம் உள்ளதாக ஏராளமான புகார்கள் உள்ளது. மக்கள் ஓட்டலில் சாப்பிட பயப்படுகின்றனர். இது ஓரு புறமிருக்க உணவுகளின் விலையோ கட்டுபாடில்லாமல் உயருகிறது. ஒரு தோசை ரூ45, சாதா சாப்பாடு ரூ.60, ஒரு துண்டு மீன் ரூ.70, இரண்டு இட்லி ரூ.15 என கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது. இதை யாரும் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக நமது மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
எனவே கலெக்டர் இப்பிரச்னையில் தலையிட்டு உணவு பண்டங்களின் விலையை கட்டுப்படுத்தவும், கலப்படமற்ற உணவு பண்டங்கள் வழங்கவும், முறையான விலை பட்டியல் வைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment