விவசாயிகள் தங்கள் குடும்ப வருமானத்தை பெருக்க தமிழக அரசு, இலவச ஆடு, மாடுகளை வழங்கி வருகிறது. இந்த ஆடுகள் அந்தந்த ஊர்களில் உள்ள சந்தைகளில் அதிகாரிகளால் வாங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு அதிகாரிகள் ஆடுகளை வழங்கினர்.
அவற்றில் பல ஆடுகள், நோயுற்ற ஆடுகள் என கூறப்படுகிறது. நோயுள்ள ஆடுகளை பெற்ற பயனாளிகள் அந்த ஆடுகளை பராமரிக்க முடியாமலும், எங்கே இறந்து விடுமோ என்ற அச்சத்திலும் அதனை குறைந்த விலைக்கு விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்திக் கொள்ளும் தரகர்கள் பயனாளிகளிடம் இருந்து ரூ.1000 கொடுத்து வாங்கிய ஆடுகளை மீண்டும் அதிக விலைக்கு செஞ்சி, அதை சுற்றியுள்ள சந்தைகளில் விற்கின்றனர். புதுச்சேரியை சேர்ந்த ஆட்டிறைச்சி வியாபாரிகள் புதுவை பகுதிகளில் ஆடுகள் கிடைக்காததால் செஞ்சி சந்தைகளுக்கு சென்று அதிக விலை கொடுத்து நோயுள்ள ஆடுகளை வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து புதுவையை சேர்ந்த ஆடு இறைச்சி வியாபாரி கூறுகையில், “நோயுள்ள ஆடுகளை வளர்க்க முடியாமல் இறந்து விடும் என்ற பயத்தில் பயனாளிகள், அவற்றை தரகர்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு விற்று விடுகின்றனர். அந்த ஆடுகளை தரகர்கள், ஆட்டிறைச்சி கடைக்காரர்களுக்கு ரூ.3 ஆயிரத்துக்கு விற்கின்றனர்” என்றார்.
No comments:
Post a Comment