Wednesday, 14 December 2011

62 year Old lady breaks traffic rules 1500 times [62 வயது பாட்டிக்கு 62 லட்சம் அபராதம்]

An elderly British woman, living in Italy, has been finally slapped with motoring fines totalling over $118,000 (6 lacs) after being tracked for many days by Italian police investigators.
The 62-year-old woman, who has not been identified, was traced after her Mercedes Benz car was photographed breaking city speed limits and entering traffic restricted areas 1,500 times in a matter of weeks, the Daily Mail reported.
Initially, Italian police in Florence were hampered in their attempts to trace her, as her car carried a British number plate and they were not allowed access to vehicle registration systems in other countries.
The woman, who lives in Florence, the capital city of Tuscan region, was eventually nabbed after police spotted the Mercedes parked in a street in the city and waited for her to return to it.
Just as she arrived, policemen handed over the details of the staggering amount of unpaid fines.

[காரில் ஓவர் ஸ்பீடு : இத்தாலியின் டஸ்கன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்று அதிவேகமாக செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். நோ பார்க்கிங் பகுதிகளில் அந்த கார் நிறுத்தப்படுகிறது. போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் செல்கிறது என்றும் தெரியவந்தது. இங்கிலாந்து பதிவெண் கொண்டிருந்ததால் அதன் சொந்தக்காரர் யார் என்று போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கார் கடந்த சில நாட்களுக்குள் 1,500 முறை ஓவர் ஸ்பீடில் போனது தெரியவந்தது. 
இந்நிலையில், பிளாரன்ஸ் பகுதியில் ஒரு கடை வாசலில் அந்த கார் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்றனர். காரை நிறுத்திவிட்டு ஷாப்பிங் சென்றிருந்த 62 வயது மூதாட்டியை கையும் களவுமாக பிடித்தனர். போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக அவருக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.]

அப்பப்பா!!! ஒரு பால் உறவு : கோட்டாறு பகுதியில் : கணவன்களை உதறிவிட்டு ‘இணைந்து’ வாழ்ந்த பெண்கள்

நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் வசிக்கும் இரு பெண்கள் இடையே லெஸ்பியன் உறவு இருந்து வந்தது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு மேலாக யாருக்கும் தெரியாமல் பழக்கத்தை நீட்டித்து வந்தனர். அரசல், புரசலாக இருந்த இந்த விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. குடும்ப நலன் கருதி இருவரையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்தனர்.
ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதற்கிடையே இரண்டு பேரில் ஒரு பெண்ணின் கணவர் அவரை பிரிந்து சென்றார். மற்றொரு பெண்ணின் கணவன் தனது மனைவியை தகாத பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் இரு பெண்களையும் அழைத்து பேசி அறிவுரைகள் வழங்கினர். ஆனால் இந்த பழக்கத்தில் இருந்து அவர்களால் மீளமுடியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டில் இருந்து இருவரும் மாயமானார்கள். பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிவந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
உறவினர்கள் சென்று இரு பெண்களையும் மீட்டனர். நேற்றிரவு அவர்களை கோட்டாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசார் பல்வேறு அறிவுரைகளை கூறினர். இருப்பினும் இரு பெண்களையும் பிரிக்க முடியவில்லை.
எங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்வோம் என இருவரும் கண்ணீர் விட்டனர். தொடர்ந்து ஊர் பிரமுகர்களை அழைத்து பேசிய போலீசார் இரு பெண்களையும் தனித்தனியாக பிரித்து அனுப்பிவைத்தனர்.

எஜமானுக்காக உயிரை கொடுத்த நாய் [ Dog Sacrifices Life for Master]


தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி (40), இரண்டு நாய்க் குட்டி வளர்த்தார். வழக்கம்போல, நேற்றும் அவருக்கு அருகிலேயே நாய்க் குட்டிகள் படுத்து தூங்கின. நள்ளிரவு நேரத்தில் அசந்து தூங்கியபோது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. எஜமானரின் அருகில் பாம்பு செல்வதை பார்த்து குரைத்த ‘மகாலட்சுமி’ என்ற நாய்க் குட்டி, பாம்புடன் போராடி அதன் தலையை கடித்து குதறி கொன்றது. பாம்பு கொத்தி விஷம் ஏறியதில் நாய்க் குட்டியும் பரிதாபமாக இறந்தது. பாம்பை கவ்விய நிலையில் உயிர் விட்ட நாய்க் குட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பழனி.          (Tamil Murasu)

10 ஆயிரம் பெண்கள் மறியல் : 10&வது நாளாக இன்றும் படையெடுப்பு லாரி, வேன்களில் அணிவகுப்பு

கேரள அரசை கண்டித்து 10&வது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்லை நோக்கி திரண்டனர். எல்லையில் 10 ஆயிரம் பெண்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் குமுளி, கம்பம்மெட்டு உள்ளிட்ட கேரள & தமிழக எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள எல்லைக்குள் நுழைந்து விடாமல் இருக்க போலீசார் கடந்த இரு நாட்களாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து வருகின்றனர்.
தேனி நகர் பகுதியிலும் நேற்று போராட்டம் வெடித்தது. கேரள பிரமுகருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் சூறையாடப்பட்டது. 10-வது நாளாக இன்றும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. மதுரையில் இருந்து தேனிக்கு ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தேனியில் இருந்து கம்பம், கூடலூர் பகுதிக்கு பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 20-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கம்பத்தில் உழவர்சந்தை அடைக்கப்பட்டு, வியாபாரிகள் பேரணியாக சென் றனர்.
உத்தமபாளையம் அருகே கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், சின்னஓபுலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இன்று காலை கேரள மாநிலம் குமுளி நோக்கி புறப்பட்டனர். 500&க்கும் அதிகமான பைக்குகள், மினிலாரிகளில் அணிவகுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பத்தில் அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூரில் 10 ஆயிரம் பெண்கள் இன்று காலை திரண்டு ஊர்வலமாக வந்தனர். லோயர்கேம்ப் செல்ல முயன்ற அவர் களை போலீசார் தடுத்தனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார், பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
இதற்கிடையே தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. மயிலாடும்பாறை அருகே உள்ள தழையூத்து கிராமத்தில் கேரள பிரமுகருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இன்று காலை எஸ்டேட்டுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். அங்கு பதற்றம் இன்னும் தணியவில்லை.
வெற்றி நம் பக்கம்தான்’ வீதி வீதியாக தண்டோரா
பெரியாறு அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்ககோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து போராட்டங்களின் தீவிரத்தை குறைக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பற்றி தண்டோரா மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. கலெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில், தேனி மாவட்டம் முழுவதும் இன்று காலை தண்டோரா செய்யப்பட்டது.
‘அணை விவகாரத்தில் கேரள அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து வருகின்றன. வெற்றி நம் பக்கம்தான். இதனால் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். 999 ஆண்டு உரிமை நிச்சயமாக மீட்டெடுக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது.
பதற்றம் அதிகமாக உள்ள தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் பகுதிகளிலும் போலீசார் மைக்கில் இதை அறிவித்தபடி சென்றனர்.
சாப்பாட்டுக்கு தவிக்கும் போலீசார்
கடந்த ஒரு வாரமாக கூடலு£ர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் தொடர் கடையடைப்பு, போக்குவரத்து முடக்கம் காரணமாக அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மறியல், உருவ பொம்மை எரிப்பு, ஊர்வலம் என்று பல பிரச்னைகளை அவர்கள் சமாளிக்க வேண்டி உள்ளது. இதற்கிடையே, சரியான சாப்பாடு கிடைக்காமல் போலீசார் சோர்ந்து போகின்றனர். பலர் பழம், பிரட் என கிடைத்ததை உண்டு பசியாறி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு : சுற்றுலா பயணிகள் குறைந்ததால் வெறிச்சோடும் தேக்கடி, மூணாறு

முல்லைப் பெரியாறு பிரச்னையால் பதற்றம் நிலவுவதால், கேரளாவின் புகழ் பெற்ற தேக்கடி, மூணாறில் சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவுகிறது. கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக கம்பம், கூடலூர், குமுளி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், இந்த வழியாக கேரளாவுக்குள் கடந்த 2 வாரங்களாக எந்த போக்குவரத்தும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து குமுளி சோதனைச் சாவடி வழியாக சரக்குகள் எதுவும் செல்லாததால், கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.
சுற்றுலா செல்பவர்கள், சபரிமலை செல்பவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால், கேரளாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கேரளாவின் முக்கிய வருமானங்களில் சுற்றுலா வருமானம் குறிப்பிடத்தக்கது. இடுக்கி மாவட்டத்தில்தான் சர்வதேச சுற்றுலாத் தலங்களான தேக்கடி, மூணாறு ஆகியவை அமைந்துள்ளன. இந்த இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த இடங்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில்தான் அதிகளவில் பயணிகள் வருவார்கள்.
வனத்துறையின் அதிகாரபூர்வ கணக்கின்படி கடந்த 2010, நவம்பரில் 62,148 உள்ளூர் பயணிகளும், 4,600 வெளிநாட்டினரும் தேக்கடி வந்துள்ளனர். இதே ஆண்டு, டிசம்பரில் 70,468 உள்ளூர் பயணிகளும், 4238 வெளிநாட்டினரும் வந்துள்ளனர். இந்த ஆண்டு கடந்த நவம்பரில் 52,298 உள்ளூர் பயணிகளும், 3,736 வெளிநாட்டினரும் வந்துள்ளனர்.
உச்சக்கட்ட சீசன் நேரமான இந்த டிசம்பர் மாதத்தில் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக தேக்கடி, மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. ஓட்டல்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மூணாறில் உள்ள பல ஸ்டார் ஓட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெரும்பாலான அறைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தேக்கடி, மூணாறில் சுற்றுலா பயணிகள் குறைந்து வருவதால் கேரள சுற்றுலாத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
படகு சவாரிக்கு ஆளில்லை
தேக்கடியில் படகில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால், சில தினங்களாக பயணிகள் இன்றி படகு குழாம் வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன் தேக்கடியில் நடந்த படகு விபத்தில் 45 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால், ஓராண்டுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலுமாக குறைந்து இருந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் சகஜநிலை திரும்பி, பயணிகள் வருகை அதிகமானது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது, முல்லைப் பெரியாறு விவகாரத்தால் தேக்கடியில் சுற்றுலாவை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் ரன் குவிப்பு : முகுந்த் 220, பத்ரிநாத் 102 கார்த்திக் 103* விளாசல்

குஜராத் அணியுடனான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் (எலைட், பி பிரிவு), தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 445 ரன் குவித்துள்ளது. அபினவ் முகுந்த் (220), பத்ரிநாத் (102) கார்த்திக் (103 அபாரமாக சதம் விளாசினர்.
அகமதாபாத், சர்தார் பட்டேல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக அபினவ் முகுந்த், முரளி விஜய் களமிறங்கினர். விஜய் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஈஸ்வர் சவுத்ரி பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார்.
அடுத்து முகுந்த்துடன் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய இருவரும் குஜராத் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 223 ரன் சேர்த்து அசத்தியது. பத்ரிநாத் 102 ரன் (214 பந்து, 14 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க முகுந்த் ரன் வேட்டையை தொடர்ந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்துள்ளது. முகுந்த் 150 ரன் (264 பந்து, 22 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். குஜராத் பந்துவீச்சில் சவுத்ரி 2 விக்கெட் கைப்பற்றினார். விளாசல்

கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளிடம் போராட்டக் குழுவினர் சோதனை : 16, 17, 18 தேதிகளில் கூடங்குளத்தில் கடையடைப்பு

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்குள் செல்லும் அதிகாரிகளிடம் போராட்டக்குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை அவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடங்குளம் அணுமின்நிலைய பணிக்கு செல்பவர்களை கண்காணிக்க வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போராட்டக்குழுவினர் ஆய்வு செய்ய அனுமதியளிக்கப்பட்டது. வரும் 15ம் தேதிக்குள் அங்கு பணிபுரியும் அனைத்து ஒப்பந்த பணியாளர்களும் வெளியேற வேண்டும். அன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மத்திய, மாநிலக்குழுக்களுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் எவை அத்தியாவசியப்பணிகள் என்பது வரையறுக்கப்பட வேண்டும் என்ற கோ ரிக்கைகள் ஏற்கப்பட்டன.
நேற்று முதல் அணுமின்நிலைய ஊழியர்கள் செல்லும் பஸ்கள் முதல் அதிகாரிகள் செல்லும் கார்கள் வரை வழிமறித்து விஏஓ, வருவாய் ஆய்வாளர் மற்றும் போராட்டக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சோதனையிட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளை போராட்டக் குழுவினர் அடையாள அட்டையை காட்டக்கூறி கேட்டனர். அணுமின்நிலையத்திற்குள் அந்நியர்கள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பில் ஈடுபடும் எங்களை எந்த அதிகாரமும் இல்லாதவர்கள் சோதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று மனம் குமுறுகின்றனர்.
கூடங்குளத்தில் தற்போது செய்யப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் விவரம் குறித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் ராஜகிருபாகரன்கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
16, 17, 18 ஆகிய தேதிகளில் கூடங்குளத்தில் கடையடைப்பு
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நிம்மதியான பணிச்சூழல் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் வரும் கல்வியாண்டில் சென்னை கல்பாக்கத்திலோ அல்லது இந்தியாவில் உள்ள வேறு அணுமின்நிலையங்களிலோ மாறுதல் பணி கேட்க தொடங்கி விட்டனர். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் கூடுதல் அணுஉலைகளை நிறுவுவதற்காக 3 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் 16ம் தேதி ரஷ்யா செல்கிறார். இதையடுத்து 16, 17, 18 ஆகிய தேதிகளில் கூடங்குளத்தில் கடையடைப்பு நடத்தவும், கடலோர கிராமங்களில் மீன்பிடிக்க செல்லாமல் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

பத்திரங்கள் பதிவு செய்வதற்கு பொதுமக்களே ஆவணங்கள் எழுதலாம்

இணையதளத்தில் படிவங்கள் 
தாங்களாகவே ஆவணங்களை எழுதி தாக்கல் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரி படிவங்கள் இணைய தளத்தில் உள்ளது என கலெக்டர் மதுமதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பத்திரப்பதிவு செய்வதற்கான ஆவணங்கள், ஆவண எழுத்தர்கள் மூலமாக எழுதப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பொதுமக்கள் தாமாகவே ஆவணங்கள் தயாரிக்க உதவிடும் வகையில் எளிய மாதிரி படிவங்கள் பத்திரப்பதிவுத்துறை மூலமாக வடிவமைக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி படிவங்களை பதிவுத்துறை இணையதளத்தில் www.tnreginet.net பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகங்களில் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மாதிரி ஆவணங்களை பயன்படுத்தி ஆவணதாரர்களே ஆவணம் எழுதி தாக்கல் செய்ய ஏதுவாக தாங்கள் பதிவு செய்ய வேண்டிய பொருள் குறித்த விவரங்களை இணையதளத்திலோ, அலுவலகத்திலோ தெரிந்து கொள்ளலாம். பதிவு செய்ய வேண்டிய ஆவணத்தின் மதிப்பிற்கு ஏற்ப பத்திரங்கள் வாங்கி பிழைகள் இல்லாமல் தயார் செய்து பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் திருமணங்கள் பதிவு செய்யவும், வில்லங்கச் சான்று நகல் மனு பெறவும் தேவையான விண்ணப்பப் படிவங்களும் பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாதிரி படிவங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவுகள் செய்து பயனடையலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் முப்பருவ தேர்வு (ட்ரைமஸ்டர்) முறை : கல்லூரிகளில் செமஸ்டர் போல

அரசு பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டு முதல் முப்பருவ தேர்வு (ட்ரைமஸ்டர்) முறை நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கெனவே மாநில பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறையில் கல்வி கற்பிக்கும் முறை இருந்தது. இதனால் மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுகிறது என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த கருத்தை ஏற்று கடந்த முறை ஆட்சியில்இருந்த திமுக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தது.
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை முழுக் கல்வி ஆண்டும் படிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால், முழுக் கல்வியாண்டுக்குரிய பாடப் புத்தகங்களை 3 பருவங்களாக பிரித்து படிக்கும் வகையில் முப்பருவ தேர்வு முறையை அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: வரும் கல்வி ஆண்டு (2012 & 2013) முதல் இந்த முப்பருவ தேர்வு முறை 1 முதல் 8ம் வகுப்புவரை நடைமுறைக்கு வருகிறது. பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் உடல் ரீதியான குறைபாடுகளை தவிர்க்கவும் இந்த முறை கொண்டு வரப்படுகிறது.
மேலும், முழுக் கல்வி ஆண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் 3 பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவ முடிவிலும், தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு முறையுடன் கூடிய தேர்வு நடத்தப்படும். இதனால், மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படும்.
மேலும், ஆண்டு இறுதியில் பாடங்கள் மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இதற்காக, தொடர் மதிப்பீட்டு முறைகள் (சிசிஇ) கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டும், 9 மற்றும் 10ம வகுப்புகளுக்கு 2013 & 2014ம் கல்வி ஆண்டிலும் கொண்டு வரப்படும்.
முதல் பருவம் என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரையும், இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையும், மூன்றாம் பருவம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் இருக்கும். இதற்கேற்ப பாடப்புத்தகங்கள் 3 பாகமாக பிரிக்கப்படுகிறது.
முப்பருவ தேர்வு முறையில் பாடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளதால் கற்கும் மாணவர்களின் முழுத் திறனும் வெளிப்படும். மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படும். கலந்துரையாடும் தன்மை, எளிதில் கற்கும் தன்மை, போன்றவற்றை மாணவர்கள் பெறுவார்கள்.
ஆசிரியர்களுக்கும் அதிக பாடங்களை நடத்த வேண்டிய சிரமம் குறைகிறது. மேலும், பருவ முறை பாடத்துடன் மாணவர்களின் தனித்திறன்களும் தொடர் மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்படுவதால், தரமான கல்வியை வழங்க முடியும்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை சிடி : பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தயாரித்தது

கேரள முகத்திரையை கிழிக்கும் : தமிழகம் முழுவதும் விநியோகம்.
முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்த குறும்பட சிடியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.



முல்லை பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் "டேம் 999" படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், கேரள அரசின் பொய் பிரசாரத்தை தோலுரித்து காட்டும் விதமாகவும் தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளனர். சிடியாக உருவாகியுள்ள இந்த குறும்படத்தை தமிழகம் முழுவதும் தமிழர் அமைப்புகள் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறது.
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றுடன் துவங்கும் இந்த குறும்படத்தில், முல்லை பெரியாறு அணை பிரச்னையும், அதற்கான தீர்வும் என்ற தலைப்பில் முழு விளக்கம் எடுத்துரைக்கப்படுகிறது. பாலாறு, காவிரி தண்ணீரை ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர்களால் தரமறுக்கப்படும் நிலையில் முழுக்க முழுக்க தமிழர்களுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை தண்ணீரையும் 142 அடியாக உயர்த்த விடாமல் கேரளா தடுத்து வருகிறது.
தற்போது உள்ள முல்லை பெரியாறு அணைக்கு கீழ் 50 அடி பள்ளத்தில் புதிய அணையை கட்டுவதன் மூலம், தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவை குறைக்கலாம் என்றும், அத்துடன் இடுக்கி அணைக்கு கூடுதல் தண்ணீரை கொண்டு சென்று மின் உற்பத்தியை அதிகரிக்கலாம் என திட்டமிட்டு கேரள அரசு செயல்படுகிறது என தெளிவாக வரைபடங்களுடன் எடுத்துரைக்கப்படுகிறது.