குஜராத் அணியுடனான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் (எலைட், பி பிரிவு), தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 445 ரன் குவித்துள்ளது. அபினவ் முகுந்த் (220), பத்ரிநாத் (102) கார்த்திக் (103) அபாரமாக சதம் விளாசினர்.
அகமதாபாத், சர்தார் பட்டேல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக அபினவ் முகுந்த், முரளி விஜய் களமிறங்கினர். விஜய் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஈஸ்வர் சவுத்ரி பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார்.
அடுத்து முகுந்த்துடன் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய இருவரும் குஜராத் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 223 ரன் சேர்த்து அசத்தியது. பத்ரிநாத் 102 ரன் (214 பந்து, 14 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க முகுந்த் ரன் வேட்டையை தொடர்ந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்துள்ளது. முகுந்த் 150 ரன் (264 பந்து, 22 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். குஜராத் பந்துவீச்சில் சவுத்ரி 2 விக்கெட் கைப்பற்றினார். விளாசல்
No comments:
Post a Comment