Tuesday, 10 January 2012

Sri Lankan president Mahinda Rajapaksa's relative attacked in Rameshwaram

Thirukumaran Nadesan, husband of Sri Lankan Member of Parliament Nirupama Rajapaksa, was attacked on Tuesday in Rameswaram by a group of activists.

The attack was unleashed when he was coming out of a house after performing puja.
He was on a two-day visit to Rameswaram to offer prayer at Sri Ramanathaswamy temple.


The activists of Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) and Nam Tamilar Iyakkam, who came to know about the arrival of Mr. Nadesan, laid seize to a house at Nadutheru, where he was performing puja, protesting against the Sri Lankan President Mahinda Rajapaksa.

7 ஆண்டுகள் கடந்தும் நிரந்தர பாலம் இல்லை : மணக்குடி பாலப்பணி எப்போது முடியும்?

மணக்குடியில் 7 ஆண்டுகளுக்கு முன், சுனாமியால் சேதமடைந்த பாலத்துக்கு பதிலாக இன்னும் புதிய பாலம் முழுமையாக கட்டப்படாததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது நடந்து வரும், மணக்குடி நிரந்தர பாலத்தின் வேலைகளை வேகமாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் அடுத்த கீழமணக்குடி, மேலமணக்குடி ஆகிய இரு கிராமங்களையும் இணைக்கும் வகையில், பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக் கையை ஏற்று, கடந்த 1999ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ரூ 8.47 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் பாலம் 2 ஆக உடைந்தது.

முல்லைப் பெரியாறும் கேரளா அரசின் நாடகங்களும்

முல்லைப் பெரியாறு விவகாரம் : கேரள அரசின் அழைப்பு நியாயம்தானா?
அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். அந்த அழைப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்காமல் மவுனமாக நிராகரித்து விட்டார்.
இது குறித்து 5 மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.எம். அப்பாஸ் மற்றும் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரளா தொடர்ந்து முரண்பாடான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. 32 ஆண்டுகளாக தமிழக அரசு, கேரள அரசுக்கு சுமார் 40 கடிதங்கள் எழுதிவிட்டது. தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர்கள் பல முறை திருவனந்தபுரத்தில் பேச்சு நடத்தினர். அவை தோல்வியில் முடிந்தன. அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகவே நிலை நிறுத்த வேண்டும். அதற்கு மேல் உயர்த்தக் கூடாது என்று கடந்த 2001ம் ஆண்டில் கேரள சட்டப் பேரவையில் சட்டம் இயற்றியது.

பேராசை பெரு நஷ்டம் : ரூ 5.50 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ 5.10 லட்சத்தை வாலிபர் இழந்தார்

செல்போன் எண்ணுக்கு ரூ 5.50 கோடி பரிசு விழுந்திருப்பதாக கூறி, வாலிபரிடம் ரூ 5.10 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்கிருஷ்ணன்(27). இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது செல்போன் எண் அதிர்ஷ்ட எண்ணாக தேர்வு செய்துள்ளோம். பல கோடி பரிசு காத்திருக்கிறது.

குளச்சல் கடலில் நீர் மட்டத்தை அளவிட ரேடார் கருவி

குளச்சல் கடலில் நீர் மட்டத்தை அளவிட சாட்டிலைட் இணைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ரேடார் கருவி ஒரு வாரத்திற்குள் செயல்பட துவங்க உள்ளது.

உலக வெப்பமயமாதலால் துருவப் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடலில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் மட்ட உயர்வை கணக்கிட ஒவ்வொரு நாட்டிலும் கடற்கரை பகுதிகளில் ‘ரேடார் கேஜ்’ கருவி அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய& பிரான்ஸ் (சரல்அல்டிகர்) நாடுகளின் கூட்டு முயற்சியில் குமரி மாவட்டம் குளச்சல், ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டணம், அந்தமான் நிகோபார் தீவு மற்றும் லட்சத்தீவுகளில் இது அமைக்கப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து ரேடார்களும் ‘சார்’ என்ற சாட்டிலைட்டுடன் இணைக்கப்படும். தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும். இதன் செயல்பாடுகளை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையம் கண்காணிக்கும்.
இந்தியாவில் முதல் முதலாக குளச்சல் துறைமுக பாலத்தில் ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் சூரிய வெப்பசக்தியுடன் இயங்கும் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் இஸ்ரோ சார்பில் கடல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி ஜோசப் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரி துறைமுக அதிகாரி ஜாண்ஜெக செல்வம் மேற்பார்வையில் இதனை அமைத்துள்ளனர்.
இது குறித்து ஜாண் ஜெக செல்வம் கூறுகையில், "கடல் நீர் மட்டத்தை கணக்கிட குளச்சல் துறைமுக பாலத்தில் ரேடார் கேஜ் கருவியுடன், டவர், சோலார் பேனல், பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வரும் இது ஒரு வாரத்திற்குள் சாட்டிலைட்டுடன் இணைக்கப்பட்டு செயல்பட துவங்கும்" என்றார்.

தமிழகத்தில் கோடிக்கணக்கில் புழக்கத்தில் விட்ட கள்ளநோட்டு கும்பல் சிக்கியது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவது, தேசிய புலனாய்வு அமைப்பு. இந்த அமைப்புக்கு, பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த அமைப்பின் அதிகாரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கள்ள நோட்டு கும்பல் தலைவன் மாணிக்தேஷ்க் மற்றும் அவனது கூட்டாளி மார்ஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சில கூட்டாளிகள் மூலம் சென்னையில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிந்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பின் தென்மண்டல டிஐஜி சேதுராமன் மேற்பார்வையில் டிஎஸ்பி சுதர்சன் ரெட்டி, இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது, சென்னை அருகே பள்ளிக்கரணையில் நடத்தப்பட்ட சோதனையில், எஸ் கொளத்தூர் லேபர் காலனியில் தொழிலாளிகள் போல பதுங்கியிருந்த அபிபுல் ரகுமான், அப்துல் முத்தலிக், பிரசாந்த் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:
இந்தியா முழுவதும் நெட்வொர்க் வைத்து, இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ 1000, ரூ 500, ரூ 100 கள்ள நோட்டுக்களை வங்காள தேசத்துக்கு கடத்தி வந்து விடுவார்கள். பின்னர், அதை வங்காள தேச எல்லையில் வீசி விடுவார்கள். பின்னர், அவற்றை பொறுக்கி எடுத்து வந்து, நாடு முழுவதும் ஏஜென்டுகள் மூலம் புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். மேலும், அடிக்கடி ரயில்கள் மூலம் தான் தமிழகத்துக்கு வந்து புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் போல, தமிழகத்தில் உள்ள பெரிய சந்தைகள், மதுக்கடைகள், ஆகிய இடங்களில் கள்ளநோட்டுக்களை கொடுத்து நல்ல நோட்டுக்களாக மாற்றியிருப்பது தெரிந்துள்ளது. இதில் சில ஏஜென்டுகளுக்கும் பங்கு உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளது விசாரணையில் தெரிந்துள்ளது.
மேலும், இவர்களது கூட்டாளிகள் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டெல்லியில் நடத்திய அதிரடி வேட்டையில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட பகதூர் யாதவ், ஐதராபாத்தில் சயிப் உல்ஹக், அன்வர், உமால் ஷேக், அக்ரம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் கள்ள நோட்டு கும்பலின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிசு, நொறுக்குத் தீனிக்கு தடை : பொதுக்குழு கூட்டத்தில்

பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆண்டு பொதுக்குழுவில் பரிசுப் பொருட்கள், கிப்ட் வவுச்சர்கள் தருவது, உணவு கூப்பன்கள் தருவது குற்றமாகும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு வருமாறு:
மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பது தொடர்பான வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தேனீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள், கூட்டம் நடக்கும் முன்பே கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு (பங்கு தாரர்களுக்கு) தரப்பட வேண்டும். இந்த உணவுப் பொருட்கள் தவிர எந்த பரிசுப் பொருட் களையும் தரக்கூடாது.
கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள், உணவு கூப்பன்கள், பரிசு கூப்பன்கள் ஆகியவற்றை தருவதும், கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும், கம்பெனிகள் சட்டம் பிரிவு 168ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி தரப்படும் பொருட்களுக்கு உரிய தொகையை, நிறுவனத்தின் இயக்குநர்கள் கொடுத்துவிட்டாலும், குற்றம் செய்ததாகவே கருதப்படும். இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களிடமும் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலையை சரி செய்வதற்காகவும், செலவினங்களை குறைப்பதற்காகவும், மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு ஏற்கனவே அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பே, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு தலைமை செயல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.