Saturday, 10 December 2011

வெடிகுண்டு கேள்விபட்டிருப்பீங்க கடித வெடிகுண்டு கேள்விபட்டிருகீங்களா??? படியுங்க.

இத்தாலியில் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்த கடிதத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. கடிதத்தை பிரித்த போது வெடிகுண்டு வெடித்து அதிகாரி படுகாயம் அடைந்தார்.
இத்தாலியின் ரோம் நகர் அருகே வருமான வரித் துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று சில கடிதங்கள் வந்தன. அவற்றில், இயக்குனரின் கவனத்துக்கு என்று குறிப்பிட்ட மஞ்சள் நிறத்தில் ஒரு கடிதம் வந்திருந்தது. அதை வருமான வரித் துறை இயக்குனர் மார்கோ குக்காக்னா பிரித்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் மார்கோ படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு கடிதத்தை ‘இன்பார்மல் அனார்கிஸ்ட் பெடரேஷன்’ என்ற கும்பல் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
முகம், கைகளில் படுகாயம் அடைந்த மார்கோவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தாலி யில் புதிய பிரதமராக மரியோ மோன்டி பிரதமர் பொறுப்பேற்றுள்ளார். கடன் நெருக்கடியை தீர்க்க புதிய பொருளாதார கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டார். அதன்படி வரிகள் உயர்த்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கலவர கும்பல் கூறியுள்ளது. வெடிகுண்டு வைக்கப்பட்ட இன்னும் சில கடிதங்கள் இத்தாலி அலுவலகங்களுக்கு அனுப்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.

நாகர்கோவிலில் ஆன்லைன் வர்த்தக மோசடி : வாலிபரிடம் விசாரணை - என்ன கஷ்ட காலத்தில் மாட்டி கொண்டாரோ??

நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஆன்லைன் வர்த்தக மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என விளம்பரம் செய்தார். ரூ. 1 லட்சம் செலுத்தினால் மாதம் ரூ. 8 ஆயிரம் வரை கிடைக்கும் என கூறினார். இதை நம்பி அவரிடம் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்தனர். பங்குகள் விற்பனை ஏற்றம், இறக்கத்துக்கேற்ப மாதந்தோறும் அளிக்கப்படும் தொகை மாறுபடும் எனவும் கூறி இருந்தார்.
அதன் மூலம் சுமார் ரூ. 1.25 கோடி வரை அவர் முதலீட்டாளர்களிடம் வசூலித்துள்ளார். பணத்தை பெற்று கொண்டு ஒரு சில மாதங்கள் அவர் கூறியது போன்று பணம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் பணம் கொடுக்க வில்லை. பணம் கொடுத்தவர்கள் தேடியபோது அவர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக ஏற்கனவே நேசமணிநகர் பகுதியில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று வெள்ளமடம் பகுதியில் , நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை அவரிடம் ஏமாந்த முதலீட்டாளர்கள் சிலர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை பிடித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் டாலர், யூரோ போன்ற வெளிநாட்டு பணங்கள் மதிப்பு குறையும் போது என்னிடம் உள்ள ரூபாயை கொடுத்து அவற்றை வாங்கி வைத்து கொள்வேன். வெளிநாட்டு பணங்கள் மதிப்பு கூடும்போது, அதனை கொடுத்து நம் நாட்டு பணத்தை பெற்றுக் கொள்வேன். இதில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பலரிடமும் பணத்தை பெற்றேன். இதனை நம்பி பலரும் பணம் செலுத்தினர்.
ஆனால் அவர்களுக்கு என்னால் பணத்தை திரும்ப கொடுக்க முடிய வில்லை என்றார். அவரிடம் நடந்த விசாரணையில் மேலும் பலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி தொகை இருப்பதால், இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. (தமிழ் முரசு)
சிந்திப்போம் 
// இந்த நிலையில் நேற்று வெள்ளமடம் பகுதியில் , நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை அவரிடம் ஏமாந்த முதலீட்டாளர்கள் சிலர் சுற்றி வளைத்து பிடித்தனர்.//
** மோசடி செய்ய அந்த வாலிபர் நினைத்திருந்தால் அவர் தலை மறைவாயிருக்கலாம் அல்லவா???
** பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய விதமாக யோசிதிருப்பரோ???
** திட்டம் தோற்றுவிட்டதால் தூற்ற பட்டாரோ.. ஜெயித்திருந்தால் மக்கள் அவரை பாராட்டி இருப்பார்களோ???
உண்மை வெல்லட்டும்... பணத்தை இழந்தவர்ளுக்கு பணம் கிடைக்கட்டும்... வாலிபர் மீண்டும் போராடட்டும்... மோசடி செய்ய நினைத்திருந்தால் தண்டிக்க பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு : நம்ம கூத்தாடி அண்ணன்கள், அக்காமார் என்ன சொல்றாங்கன்னு கேளுங்க???

‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மனித உயிர்கள் முக்கியம். இப்பிரச்னையில் மத்திய அரசுதான் சுமூக தீர்வு காண வேண்டும்’ என்று தமிழ், மலையாள நடிகர், நடிகைகள் கூறி உள்ளனர்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள&தமிழ்நாடு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் எல்லைப்பகுதியில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதுடன் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகள் தாக்கப்பட்டன.
இப்பிரச்னை பற்றி நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ள கருத்து:
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்:
தமிழர்கள், மலையாளிகளுக்கு இடையேயான தாக்குதலை தடுக்க முதலில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னைபற்றி ஆலோசித்து முடிவெடுத்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட வேண்டும். இதனால் அப்பாவி மக்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு மறையும். இப்பிரச்னையில் சினிமா கலைஞர்கள் தலையிடக்கூடாது ஏனென்றால் அவர்களுக்கு பிரச்னை பற்றி முழுமையாக யாரும் தெரிவிப்பதில்லை.
நடிகர் பிரசாந்த்:
உயிர் வாழ முக்கிய ஆதாரம் தண்ணீர்தான். உயிரை காக்கக்கூடிய தண்ணீரை காரணம் காட்டி மனித உயிர்கள் பலியாகக்கூடாது. தமிழர்கள், மலையாளிகள் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் சுமூக தீர்வு காண வேண்டும்.
நடிகை குஷ்பு:
இப்பிரச்னையில் மாநில எல்லைபகுதிகளில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அணையை ஆராய்ந்து பார்த்து அதிகாரிகள் தந்த அறிக்கையில் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி உள்ளனர். எனவே இதில் வன்முறையில் ஈடுபடுவது தேவையற்றது. தமிழ் மக்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல¢ கேரள மக்களின் உயிரும் முக்கியம். இப்பிரச்னைக்கு சுமூக காண முயற்சிக்க வேண்டும்.
நடிகை ரீமா கல்லிங்கால்:
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரும் அதேவேளையில் கேரள மாநிலத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று சிலரும், பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்று சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இப்பிரச்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியம். இருமாநிலத்திலும் சுமூக உடன்பாடு ஏற்பட வேண்டும்.
நடிகை மம்தா:
மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்துவிட்டன. இப்பிரச்னையில் உடனடியாக தீர்வு காண்பதற்கு என்ன தடையாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் நீண்ட கலந்தாய்வுகள் தேவையற்றது. உடனடியாக தீர்வு காண வேண்டும். அணை உடைந்தால் இருதரப்பு மக்களுமே பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நடிகர் சுரேஷ் கோபி:
முல்லைபெரியாறு விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக மத்திய அரசு கருத வேண்டும். நீண்ட வருடமாக இருக்கும் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். (tamil murasu)

Anna Hazare to go on Fast Again : Calls it Second Independence Fight


Ahead of his day-long fast for a strong Lokpal Bill, Anna Hazare on Saturday launched a vitriolic attack on the government, charging that it was "intoxicated" by power and said the "second fight for independence" has started which will go on till corruption is eradicated.
Before leaving for Delhi where he will hold the fast, Hazare said, "So many martyrs lost their lives for our independence but even today we cannot experience independence. Who got independent. What independence. Corruption, loot is still here. Only 'goras' left and 'kalas' came in, that is the only difference."

"So the second fight for independence has started, it is a long fight, till corruption gets eradicated, it will go on. Many people will have to got to jail again, be lathicharged, some will have to sacrifice, that time is here now. Till we sacrifice, we won't get the right independence," Hazare told reporters here.

Keenly observed by government and people, the activist will sit at Jantar Mantar, the protest hotspot in the national capital, the whole day along with his supporters demanding a strong anti-corruption law.

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண் : அரசு டாக்டர்களின் அலட்சியம்

அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக ஒரு பெண் பரிதவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி காயத்ரி (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வலி அதிகமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் (8ம் தேதி) அனுப்பி வைத்தனர்.
இரண்டு நாள் ஆகியும் அங்கு காயத்ரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று, மருத்துவமனைக்கு வந்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராமமூர்த்தியிடம், காயத்ரியின் உறவினர்கள் இதுகுறித்து புகார் கூறினர்.
மருத்துவர்களின் அலட்சியத்தை பார்த்து கொதிப்படைந்த அவர், டீன் தேன்மொழி வள்ளியை சந்தித்து பேசினார். வயிற்றில் இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரியாதா? உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டிய நீங்கள் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நேற்று இரவு 10 மணி அளவில், காயத்ரிக்கு ஆபரேஷன் செய்து, இறந்த குழந்தை அகற்றப்பட்டது.  (tamil murasu)

சினிமா காரர்களை கவரும் கடலோர கிராமம் குறும்பனை : Kurumpanai - A coastal Village attracting Film Makers

இந்திய தேசத்தின் தமிழ் நாடு மாநிலத்தின் குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு அழகான மிக பெரிய கடலோர கிராமம் குறும்பனை.

சமிப காலமாக குறும்பனை கிராமம் சினிமா காரர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று கேட்டால் குறும்பனை கிராமத்தின் அழகும், மக்கள் தரும் ஆதரவும் என்கிறார்கள்.


அப்படி என்னதான் அழகு இந்த கிராமத்தில்... நீங்களே பாருங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்.  

குறும்பனை கடற்கரை : மண் அரிப்பினால் நாங்கள் விளையாடிய பகுதி கடலால் ஆக்ரமிக்கபட்டுவிட்டது. 
 குறும்பனை கடற்கரை மற்றொரு பகுதி : சுற்றுலா தலம் அமைத்தல் என்ற பெயரில் அக்க்ரமிப்புகள்.
குறும்பனை கடற்கரை : இங்குதான் எங்கள் தாத்தா, அப்பா எல்லாரும் உடல் காயா கரமடி இழுத்தார்கள். அது ஒரு காலம்.
 குறும்பனை கடற்கரை : என்னே அழகு!!!

 குறும்பனை : புனித இன்னசியார் ஆலய திருவிழா கொடியேற்றம்.

குறும்பனை : புனித இன்னாசியார் ஆலய பீடம்.

"காமராசு (1998 )" : அப்போது நான் 11 -ம் வகுப்பு. ஊரில் படம் எடுக்கிறார்கள், முரளி, லைலா மற்றும் பட குழுவினர் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி. பரிட்சையை விட்டுவிட்டு படபிடிப்பு காண சென்றோம் (மறைகல்வி பரீட்சை என்பதால்). மற்றொரு சுவாரஸ்யம் எனது அண்ணா எனக்கு வங்கி கொடுத்த ரூ.50 பேனாவையும் தொலைத்தேன்.

"அலையோடு விளையாடு-2008" : படம் இன்னும் வெளிவரவில்லை

"குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் - 2009 "

எனது அன்பு மகன் அமுதன்பு வுடன் "செம்பட்டை-2011" படபிடிப்பு இடத்தில்

"மூன்று பேர் மூன்று காதல் - 2011 " : தற்பொழுது இதன் படபிடிப்பு ஊரில் நடந்து கொண்டிருக்கிறது.

ஊரை சுற்றி வளர்ந்து நிற்கும் தென்னை, பனை மரங்களும், கோவில், பள்ளிக்கூடம், கடற்கரை, குருசடிகள், பாறைகள், வாய்க்கால் அத்தனையுமே அழகுதான். சொகுசு என கருதப்படும் நகர (நரக) வாழ்க்கை இதற்கு முன்னால் தூசுதான்.

10 விக்கெட் வித்தியாசத்தில் தமிழகம் அபார வெற்றி : ரஞ்சி போட்டி

பெங்கால் அணியுடனான ரஞ்சி கோப்பை (எலைட்) பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பெங்கால் அணி முதலில் பந்து வீசியது. தமிழகம் முதல் இன்னிங்சில் 391 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. முகுந்த் 83, பத்ரிநாத் 24, வாசுதேவதாஸ் 106, கேப்டன் எல்.பாலாஜி 49* ரன் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி, முதல் இன்னிங்சில் 176 ரன்னுக்கு சுருண்டது. சுக்லா அதிகபட்சமாக 62 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கங்குலி 28, சுக்லா 50 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். கங்குலி 33, சுக்லா 73 ரன் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பெங்கால் அணி 2வது இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணி பந்துவீச்சில் யோமகேஷ் 3, பாலாஜி 2, கவுஷிக், ஸ்ரீனிவாஸ், அபராஜித், முகுந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 32 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழகம், 4.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 34 ரன் எடுத்து வென்றது. முகுந்த் 25, விஜய் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்தன.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் : கேரள சட்டப்பேரவை

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர். 
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக கேரள சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு பேரவை கூடியது. சிறப்பு கூட்டத்தை தொடங்கி வைத்து உம்மன்சாண்டி பேசுகையில், “முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தீர ஒரே வழி, புதிய அணை கட்டுவதுதான். இந்த விஷயத்தில் தமிழ்நாடு உடனான நல்லுறவு எந்த விதத்திலும் பாதிக்காது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படும் என இந்த பேரவை உறுதி அளிக்கிறது. அதே நேரம், கேரள மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது” என்றார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன் பேசுகையில், “காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வரும்போதுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை பூதாகரமாகிறது. கடந்த இடது முன்னணி ஆட்சியின்போது, இந்த பிரச்னை திறமையாக கையாளப்பட்டது. தற்போது, காங்கிரஸ் அரசு மெத்தனம் காட்டுகிறது. மத்திய அரசும் இதே போக்கைதான் கையாள்கிறது” என்றார்.
நிதித்துறை அமைச்சர் மாணி பேசுகையில், “புதிய அணைக்கான பூமி பூஜையை உடனடியாக தொடங்க வேண்டும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பிஜிமோள் பேசியபோது, “முல்லை பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்றும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் உம்மன்சாண்டி கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேறியது.