Tuesday, 29 November 2011

N.S.K (Nagercoil Sudalaimuthu Krishnan) 103 years

Kalaivanar
D.O.B : November 29, 1908.


Actor N.S.Krishnan Birthday is celebrated every year on Nov 29. Let us collect little knowledge about this Actor.


1. Villu Paatu is the first movie in which N S Krishnana started his career as an Artist


2. Menaka (1935) is the first movie in which he made his acting debut as an Actor.


3. T.A Madhuram was the popular actor in his day with whom he has acted in many films.


4. Haridas (1944) is the film first time in Tamil Cinema which ran successfully for 110 weeks in Chennai Broadway Talkies


5. In 1936 he acted his first film with M.G.R in Sathi Leelavathi


6. In 1952 he acted his first film with Sivaji Ganeshan in Panam


7. He also acted in two Telugu films apart from Tamil movies. They are Bagya Lakshmi (1943) and Governors Cup (1955)

‘நமக்கு நாமே’ கல்லறை!


இவர்கள் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த கையுண்ணி பைங்காள் பகுதியை சேர்ந்த தம்பதி திம்மையா (82) & லட்சுமியம்மா (77). பின்னால் இருப்பது.. தங்களுக்காக அவர்களே கட்டி வைத்திருக்கும் கல்லறை. மறைவு தேதிக்கு மட்டும் இடம் விட்டு, பெயர் கல்வெட்டுகூட பதித்து வைத்துவிட்டார்கள். நான் கோயில் கட்டி கும்பிடும் பகவதி அம்மன் ‘என்னைவிட்டு எங்கும் போய்டாத’னு கனவுல சொன்னா. அதனாலதான் இந்த ஏற்பாடு என்கின்றனர்.
நன்றி : தினகரன் Nov 29

கடலோர காவல்படை மனு : மீனவர்களிடையே கொந்தளிப்பு


இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின், தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை தாக்குவது தொடர் கதையாகியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் குறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை, கடலோர காவல் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இந்திய கடலோர காவல் படை தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கின்றனர்.
இலங்கை கடல் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். என குறிப்பிட்டது. இதை ஏற்காத ஐகோர்ட், தனது தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
மேலும், கடலோர காவல் படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாட்டின் பாதுகாப்பு கருதி, குஜராத் & பாகிஸ்தான் எல்லையில் மீன்பிடி இல்லா மண்டலம் உருவாக்கப்பட்டு இருப்பதை போல், தமிழக & இலங்கை கடற்பகுதியை மீன்பிடி இல்லா மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடலோர காவல் படை தாக்கல் செய்துள்ள இம்மனுவை திரும்ப பெற வலியுறுத்தி, ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு மீனவர் நலச்சங்க ஆலோசகரும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவருமான தேவதாஸ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மீனவர் நலச்சங்க பொதுச்செயலாளர் போஸ், ராமேஸ்வரம் மீனவர் நலச்சங்கத்தலைவர் எமரிட் உள்பட 13 மீனவர் சங்க பிரதிநிதிகள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேவதாஸ் கூறுகையில், “உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்திய கடலோர காவல் படை தாக்கல் செய்த மனு தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலோர காவல் படையின் இச்செயல்பாடு, இலங்கை ராணுவத்துக்கு சாமரம் வீசுவது போல் உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் கடலோர காவல் படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால், தமிழகம் முழுவதும் மீனவர்களை ஒருங்கிணைத்து, பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.
நன்றி : தினகரன் Nov 29

சபரிமலை : 2026 வரை முன்பதிவு முடிந்தது

சபரிமலையில் படி பூஜைகள் முன்பதிவு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதற்கான முன்பதிவு 2026ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துவிட்டது. உதயாஸ்தமன பூஜை முன்பதிவு 2017 வரையும் முடிந்துவிட்டது.  
படிபூஜைக்கு 40 ஆயிரமும், உதயாஸ்தமன பூஜைக்கு 25 ஆயிரமும் வழிபாடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பூங்காவனத்தில் உள்ள 18 மலை தேவதைகளுக்காக இது நடத்தப்படுகிறது. முன்பு 12 வருடங்களுக்கு ஒரு முறை படிபூஜை வழிபாடு நடந்து வந்தது. இதற்காக பக்தர்கள் எண்ணிக்கை பெருகியதை தொடர்ந்து மாதம்தோறும் மாத பூஜைக்கு நடை திறப்பு நடக்கின்ற ஐந்து நாட்கள் படிபூஜை நடக்கிறது.
நினைத்த காரியம் நிறைவேற நடத்தப்படும் முக்கிய வழிபாடு உதயாஸ்தமன பூஜையாகும். உஷபூஜையும், உச்சபூஜையும் தந்திரி தலைமையில் நடைபெறுகின்ற பூஜைகளாகும். இதர 16 பூஜைகளும் மேல்சாந்தியால் நடத்தப்படும்.
நன்றி : தினகரன் Nov 29

புயல்சின்னம் : மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல்சின்னம் காரணமாக பெய்து வந்த மழை குறைந்தபோதும் பலத்த காற்று எச்சரிக்கை தொடருவதால் குமரி மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இடம்பெயர்ந்ததால் குமரி மாவட்டத்தில் நேற்று மழையின் தீவிரம் குறைந்திருந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும், அவ்வப்போது சாரல் மழை தொடருவதுமாக இருந்தது. பிற்பகல் முதல் வெயிலடிக்க துவங்கிவிட்டது. தொடர் மழை காரணமாக மீனவர்கள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்றிருந்த மீனவர்களும் கரைதிரும்பிவிட்டனர். நேற்று புயல்சின்னம் மாறி மழையின் தீவிரம் குறைந்தபோதும் கடலோர பகுதிகளில் மணிக்கு 44 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று மீன்வளதுறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இது தொடர்பான அறிவிப்பு நேற்று இரவு வரை அமலில் இருந்தது என்பதால் மீனவர்கள் நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கட்டுமரங்கள் கரையோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது. குளச்சல் பகுதியிலும் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கட்டுமரங்கள் நிறுத்திவிடப்பட்டிருந்தன.
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குளச்சலில் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
மழைக்காலம் துவங்கிய கடந்த 25ம் தேதி அன்று மீனவர்கள் காலையில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை. நேற்றும் மீன்பிடிக்க செல்லாததால் 3 வது நாளாக மீன்பிடி தொழில் முடங்கியிருந்தது.
தொடர் மழை காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 29.50 அடியாக இருந்தது. அணை க்கு வினாடிக்கு 1146 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 61.20 அடியாக இருந்தது. அணைக்கு 1530 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்&1ல் 5.22 அடியும், சிற்றார்&2ல் 5.31 அடியும் நீர்மட்டம் இருந்தது. பொய்கை அணை நீர்மட்டம் 11.80 அடியாக உயர்ந்தது.
மாவட்டத்தில் பேச்சிப்பாறையில் 20, பெருஞ்சாணியில் 26, சிற்றார்&1ல் 12, நாகர்கோவிலில் 15, பூதப்பாண்டியில் 27.4, சுருளோட்டில் 25.4, கன்னிமாரில் 18.4, குளச்சலில் 68, அடையாமடையில் 43, கோழிப்போர்விளை 26, திருவட்டார் 90, முள்ளங்கினாவிளை 36.2 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. இதற்கிடையே மழையால் சேதமடைந்த படகுகள், இடிந்து விழுந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளில் வருவாய்துறை, மீன்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி : தினகரன் Nov 29