சபரிமலையில் படி பூஜைகள் முன்பதிவு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதற்கான முன்பதிவு 2026ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துவிட்டது. உதயாஸ்தமன பூஜை முன்பதிவு 2017 வரையும் முடிந்துவிட்டது.
படிபூஜைக்கு 40 ஆயிரமும், உதயாஸ்தமன பூஜைக்கு 25 ஆயிரமும் வழிபாடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பூங்காவனத்தில் உள்ள 18 மலை தேவதைகளுக்காக இது நடத்தப்படுகிறது. முன்பு 12 வருடங்களுக்கு ஒரு முறை படிபூஜை வழிபாடு நடந்து வந்தது. இதற்காக பக்தர்கள் எண்ணிக்கை பெருகியதை தொடர்ந்து மாதம்தோறும் மாத பூஜைக்கு நடை திறப்பு நடக்கின்ற ஐந்து நாட்கள் படிபூஜை நடக்கிறது.
நினைத்த காரியம் நிறைவேற நடத்தப்படும் முக்கிய வழிபாடு உதயாஸ்தமன பூஜையாகும். உஷபூஜையும், உச்சபூஜையும் தந்திரி தலைமையில் நடைபெறுகின்ற பூஜைகளாகும். இதர 16 பூஜைகளும் மேல்சாந்தியால் நடத்தப்படும்.
நன்றி : தினகரன் Nov 29
No comments:
Post a Comment