Thursday 31 May 2012

புகையிலையை முற்றிலும் ஒழித்து வழிகாட்டும் கிராம மக்கள்

ஆந்திராவில் ஒரு கிராமத்தினர் புகையிலையை முற்றிலும் ஒழித்து நாட்டுக்கே வழிகாட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே மடுகுலா தாலுகாவில் உள்ளது பொங்கலிபகா கிராமம். 1,600க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் புகையிலை ஒழிக்க கிராமத் தலைவரும் மக்களும் முடிவு செய்தனர். புகையிலையை ஒழிக்க பாடுபட்டு வரும் இந்திய இயற்கை சுகாதார அறக்கட்டளையும் கிராம மக்களுக்கு ஊக்கம் அளித்தது. இந்த அறக்கட்டளையும் கிராம மக்களும் செய்த முயற்சியால் பொங்கலிபகா கிராமம் இன்று புகையிலை இல்லாத கிராமமாக மாறியுள்ளது.

பேஸ்புக் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்

ஆட்சேபகரமான கருத்துக்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற பேஸ்புக் இணையதளத்தின் கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
Delhi-High-courtபல்வேறு மதங்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் இணையதளத்தில் இடம் பெறுவதாக கூறி டெல்லியை சேர்ந்த முப்தி அஜாஸ் என்பவர் பேஸ்புக், கூகுள், யாஹூ மற்றும் சில இணையதளங்களுக்கு எதிராக டெல்லி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கூடுதல் கட்டணம் வசூல் : தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஸ்ரீகிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக இருந்தவர் பால்ராஜ். கடந்த 2006ம் ஆண்டு மாணவர்களிடம் ரூ 7 லட்சத்து 41,501 ரூபாயை கூடுதல் கட்டணமாக வசூலித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் புகார் செய்தனர்.
மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் பால்ராஜ் உரிய பதில் அளிக்காததோடு முன்னுக்குப்பின் முரணாக கூறினார். மீண்டும் விசாரணைக்கு அழைத்தபோது ஆஜராகவில்லை. இதற்கிடையே புதிய நிர்வாகிகள் குழு பள்ளியின் பொறுப் பை ஏற்றது.