Monday, 12 December 2011

‘மர்ம குரல்’ : அமெரிக்காவில் கைக்குழந்தையை ஆற்றில் வீசிய தமிழக பெண் :

‘மர்ம குரல்’ கூறியதாக வாக்குமூலம் : மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு
அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண், கைக்குழந்தையை ஆற்றில் வீசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிப்பவர் தேவி சில்வியா. வயது 34. இவருடைய கணவர் டோமினிக் பிருத்விராஜ். இவர்களுக்கு மூத்த மகள் ஒருத்தியும், ஜெசிகா என்ற 21 மாத பெண் குழந்தையும் உள்ளனர். தமிழகத்தில் கணக்கு ஆசிரியையாக பணியாற்றியவர் சில்வியா. கணவர் அமெரிக்காவில் வேலை செய்வதால் இங்கு குடியேறினார்.
நியூயார்க் நகரில் ஓடும் ஹட்சன் ஆற்றுக்கு கடந்த ஆண்டு மே மாதம் குழந்தையுடன் சில்வியா சென்றார். அங்கு திடீரென தனது கைக்குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலை முயன்றார். தகவல் அறிந்து மீட்டு படையினர் விரைந்து சென்றனர். அதற்குள் ஆற்றின் நடுப்பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
மீட்புப் படையினர் விரைந்து சென்று குழந்தையையும் சில்வியாவையும் மீட்டனர். சிகிச்சைக்கு பின் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்து கொண்டனர். இதையடுத்து சில்வியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது சில்வியா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ‘‘சில்வியா குற்றமற்றவர். அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளது. பைபோலார் என்ற மனநிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்’’ என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்த போது, ‘குழந்தையை ஆற்றில் வீசினீர்களா?’ என்று நீதிபதி கேட்டார். அதற்கு, ‘ஆமாம், ஆனால், என்ன செய்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. யாரோ என்னிடம் பேசும் குரல் கேட்கிறது. குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு என்னையும் குதிக்க சொன்னார்கள். அதன்படி செய்தேன். என்ன செய்தேன் என்பது தெரியவில்லை’ என்று சில்வியா பதில் அளித்தார்.
இதையடுத்து சில்வியாவுக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில்வியா தற்போது ஜாமீனில் உள்ளார். இவருடைய 2 குழந்தைகளையும் உறவினர்கள் இந்தியாவுக்கு அழைத்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரியில் பிரமாண்ட குடில்கள் அமைக்கும் பணி தீவிரம் : கருங்கலில் ரூ.10 லட்சம், பாலபள்ளத்தில் ரூ.7 லட்சம்

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிற கிறிஸ்துமஸ் விழாவானது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் 25&ந் தேதி கொண்டாடப்படும் இந்த விழாவை உலகின் அனைத்து பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். குமரி மாவட்டத்தில் இந்த விழாவை வரவேற்கும் விதமாக 1 மாதத்திற்கு முன்பே வீடுகளில் மின்விளக்குகள், மற்றும் ஸ்டார்கள் கட்டி தொங்கவிட்டு விழாவை சிறப்பிப்பது நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பர் 1 ம் தேதி முதல் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பாடல் ஊர்வலங்கள் போன்றவை நடக்கின்றன. மேலும் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து அதில் வண்ண மின்விளக்குகள் அலங்கரித்து பொதுமக்கள் பார்வைக்கு விடுவதும் வழக்கமாக உள்ளது. இந்த வகையில் ஆண்டுதோறும் குமரியில் கருங்கல் மற்றும் பாலபள்ளம் போன்ற பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்படும். இந்த வருடம் கருங்கல் பகுதி இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் மிக பிரமாண்டமான குடில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
குடில் அமைப்பு வல்லுனர்கள் ஜஸ்டின், மெர்ஜின் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த குடிலானது ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா அரண்மனை வடிவில் உருவாக்கப்படுகிறது. குடில் உள்ளே பைபிள் நிகழ்வுகள், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வரலாறு போன்றவை கண்களை கூசச்செய்யும் மின்விளக்கு அலங்காரங்களுடன் சித்தரிக்கப்படுகிறது. 100 அடி நீளம், 65 அடி உயரத்தில் இந்த குடில் பிரமாண்டமாக உருவாக்கப்படுவதாக இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெரால்டு, செயலாளர் சந்தோஷ், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுபோன்று பாலபள்ளம் வின்ஸ் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் பிரமாண்ட குடில் உருவாக்கப்படுகிறது. 110 அடி நீளம், 55 அடி உயரத்தில் உருவாகும் இந்த குடில் சீனாவில் போதி தர்மர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஹாராவெய்க் என்ற அரண்மனையின் மாதிரியில் உருவாக்கப்படுகிறது. இதுபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளான மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், புதுக்கடை, முஞ்சிறை உள்பட பல்வேறு பகுதிகளிலும் புல் குடில்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த குடில்கள் அனைத்தும் 23 ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படுகின்றன. இவற்றை பார்வையிட குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பேர் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது கருங்கல், பாலபள்ளத்தில் நடை பெரும் நிகழ்வு அல்ல... குமரி மாவட்டம் முழுவதும் மக்கள் போட்டிபோட்டு கொண்டு செய்ய கூடியது. மக்கள் திரளாக, குடும்பங்களுடன் வந்து கண்டு மகிழ்வார்கள். நல்ல ஒரு நிகழ்வு. 
உண்மையில் நாம் இவற்றை எதற்காக அமைக்கிறோம்????
கிறிஸ்துமஸ் என்பது நம்பில் யார் பெரியவன் என காட்டி / போட்டி போட்டு கொள்வதற்காகவா???
ஒற்றுமையும், பிறரை மதித்து, பகிர்ந்து, சகோதர உணர்வுடன் இறைவனின் வருகையை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடுவோம்.  சண்டைகளை தவிப்போம்... ஒற்றுமையுடன் வாழ்வோம்.

அஞ்சுகிராமம் : பொதுமக்கள் முன் மனைவி கழுத்தை அறுத்து கொலை

இன்ஜினியரிங் கல்லூரி ஊழியர் கைது : கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் கொடூரம்
அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் செல்வராஜ்குமார்(36). டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கும் திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த இசக்கிமுத்து மகள் அனிதா(33) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயது மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன.
செல்வராஜ்குமார் செண்பகராமன்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் லேப் அசிஸ்டென்டாக வேலை பார்த்து வருகிறார். பிஎஸ்சி பட்டதாரியான அனிதா வீட்டில் டியூஷன் நடத்தி வந்தார். செல்வராஜ்குமாருக்கு மனைவி மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இரவில் யாரோ அடிக்கடி ஜன்னல் கதவை தட்டியதாக கூறி ஜன்னல் கதவுகளில் மின்சார ஷாக் கொடுத்து வைத்திருந்தார். ஏற்கனவே ஒருமுறை மனைவி மீது சந்தேகம் அதிகரித்ததால் அவருடன் தகராறு செய்து தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மனைவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் செல்வராஜ் மும்பை சென்றார். நேற்று முன்தினம் ஊர் திரும்பினார். அப்போது ஊரில் சிலரிடம் மனைவி தன்னை பைத்தியம் எனக் கூறுவதாகவும், அதற்காக மின்சார ஷாக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பின், வீட்டில் தனியே இருந்த மனைவியிடம் தகராறு செய்தார். திடீரென, எனக்கு மின்சார ஷாக் வைக்க திட்டமிட்டுள்ளாயா? எனக் கூறி மனைவியின் கை மற்றும் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அனிதாவின் அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அனிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதைப் பார்த்த செல்வராஜ்குமார் மீண்டும் பொதுமக்கள் முன்னிலையில் அனிதாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று செல்வராஜ்குமாரை கைது செய்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் அஞ்சுகிராமம் எஸ்ஐ முத்துராஜ் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் செல்வராஜ்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு ஊர்திரும்பிய அவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தனியார் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

2012 ஏப்ரல் முதல் பி.எப் பாஸ்புக் வழங்க திட்டம் :

ஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்டம் & 1952ன்படி, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பி.எப் பங்கேற்பாளர் அட்டை வழங்க வேண்டும் என்பது கட்டாயம். அதில் மாதந்தோறும் இருப்பு பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆனால், எந்த ஒரு நிறுவனமும் இதை பின்பற்றவில்லை.
இந்நிலையில், 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுமார் 5 கோடி பி.எப் சந்தாதாரர்களுக்கு பங்கேற்பாளர் அட்டை வழங்குவது குறித்து, வரும் 23ம் தேதி நடைபெற உள்ள பி.எப் அமைப்பின் அதிகாரம் படைத்த மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அட்டையில், கணக்கு எண், இருப்புத் தொகை, பிறந்த தேதி, வாரிசுதாரர் என பி.எப் கணக்கு பற்றிய அனைத்து விவரங்களும் இதில் இடம் பெறும்.
ஏற்கனவே, கட்டுமானத் தொழில் உட்பட அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பி.எப் பாஸ்புக் வழங்க வாரியம் திட்டமிட்டது. எனினும், ஊழியர்கள் அடிக்கடி நிறுவனம் மாறுவதால் சிக்கல் ஏற்படும் என கருதி இந்த திட்டத்தை கைவிட்டது. அதேநேரம், இதுபோன்ற பிரச்னையை சமாளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டத்தை வகுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

Eunuch declared CM Candidate : முதல்வர் பதவிக்கு திருநங்கை போட்டியிடுகிறார்

உ.பி முதல்வர் பதவி வேட்பாளராக திருநங்கை ஒருவரை ராஷ்ட்ரிய விக்லாங் கட்சி அறிவித்துள்ளது.
உ.பி சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ராஷ்ட்ரிய விக்லாங் கட்சி என்ற சிறிய கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பில் புரட்சியை ஏற்படுத்தி உள் ளது.
வேட்பாளர் பட்டியலில், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முதல் பட்டியலிலேயே 5 திருநங்கைகளின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் விரேந்திர குமார் கூறுகையில், ‘‘உ.பி. பேரவை தேர்தலில் மொத்தம் 50 திருநங்கைகளை வேட்பாளர்களாக நிறுத்துவோம். முதல்வர் பதவிக்கான வேட்பாளராக திருநங்கை முன்நிறுத்தப்படுவார். அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். நேர்மையான ஒருவர்தான் தங்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். திருநங்கைகள் நேர்மையானவர்கள் என்பதால், அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த உள்ளோம்’’ என்றார்.
[The little-known Rashtriya Viklang Party (RVP) has declared an eunuch as its chief ministerial candidate. The party has also decided to field about 50 eunuchs in the coming 2012 UP elections.

"The party has decided to field at least 50 eunuchs from different assembly seats and five names have already been announced," party's national general secretary and UP incharge Virendra Kumar told reporters. "National president of Kinnar Morcha Shobha Bua has been named candidate for Dhaulana assembly seat in Ghaziabad. Shobha will also be chief ministerial candidate of the party," he added. Kumar said first eunuch MLA of the country Shabnam Mausi will be party's candidate from Kanpur cantonment seat.

He said that people want good candidates, as political parties have failed to deliver. Eunuchs are a marginalised section of the society, but their honesty and ability cannot be ignored, he said.

Kumar said that party's election manifesto includes various issues related to eunuchs such as quota in accordance with their population, pension to eunuchs above 40 years, right to live like a common citizen and rehabilitation. He said that while eunuchs neither have children, nor families, therefore they have no reason to indulge in corruption.]

நெய்வேலியில் மேல்நோக்கி குலை தள்ளும் அதிசய வாழை

முக்கனிகளில் ஒன்று வாழை. நெய்வேலியில் வாழை மரத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக வாழைமர குருத்தில் இருந்துதான் வாழைக்குலை தள்ளுவது வழக்கம். ஆனால் நெய்வேலி டவுன்ஷிப் 18வது வட்டம் மகாத்மா காந்தி சாலையில் வசித்து வரும் பொறியாளர் செல்வராஜ் வீட்டில் உள்ள வாழைமரத்தில், தண்டின் நடுவில் இருந்து புவிஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி வாழைக் குலை தள்ளியுள்ளது. 
அதிசய வாழை...! நெய்வேலியில் பொறியாளர் செல்வராஜ் வீட்டில் வளர்ந்துள்ள அதிசய வாழை.
இந்த அதிசய வாழையை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். வாழை மரம் வைத்தவுடன் வளரும் பக்க கன்றுகளை ஆரம்பத்தில் இருந்தே அதனை வெட்டிவிடுவது நடைமுறையில் உள்ளதாகும். பக்க கன்று களை வெட்டிவிடும் போது அந்த தண்டில் இருக்கும் செல் முதிர்ச்சி நிலை அடைந்து விடுகிறது. ஆயினும் முதிர்ச்சி அடைந்த செல்கள் தண்டின் நடுப்பகுதியில் இருப்பதால் இதுபோன்ற அதிசய நிகழ்வுகள் நடக்கிறது என ஓய்வுபெற்ற தோட்டக்கலை பராமரிப்பாளர் பழனி யப்பன் தெரிவித்துள்ளார்.

Military free to shoot down US drones : அமெரிக்க விமானம் நுழைந்தால் சுடு - பாகிஸ்தான்

Pakistani military will shoot down any US drone that intrudes the country's airspace he Punder a new defence policy in which troops have been given greater liberty to respond to incursions by Nato and allied forces in Afghanistan, according to a media report. 
"Any object entering into our airspace, including US drones, will be treated as hostile and be shot down," a senior unnamed Pakistani military official was quoted as saying by NBC News

The defence policy was changed after a Nato air strike on two military border posts killed 24 Pakistani soldiers on November 26. 

Following the air strike, army chief Gen Ashfaq Parvez Kayani issued a communique that gave troops in the field full liberty to respond to any future attacks without consulting their superiors. 

Kayani issued multiple directives since the November 26 attack, including orders to shoot down US drones, senior military officials said. Pakistan also shut down all Nato supply routes and asked the US to vacate the Shamsi airfield. The airbase is reportedly used by CIA-operated drones that target militants.

American forces vacate Shamsi airbase to meet Pak deadline after Nato strike 

The Pakistan army on Sunday took over Shamsi airbase in the country's southwest after it was vacated by US forces in line with a deadline set by the government following a cross-border Nato attack that killed two dozen Pakistani soldiers. The last flight carrying US personnel and equipment had departed from Shamsi airbase in Balochistan province and the facility had been "completely vacated" by the Americans, the Inter-Services Public Relations said. "The control of the base has been taken over by the (Pakistan) army," it said. Prime minister Yousaf Raza Gilanitold the media that the US has vacated the airbase within the time limit given to it.

[அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களை அனுமதியின்றி சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை கடந்த மாதம் 26ம் தேதி நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர்.
இதற்கு பாகிஸ்தானில் அனைத்து தரப்பிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பலுசிஸ்தானில் உள்ள ஷாம்சி விமான தளத்தில் இருந்து அமெரிக்க படை வெளியேற 15 நாள் கெடு விதித்தது பாகிஸ்தான்.
கெடு விதிக்கப்பட்ட கடைசி நாளான நேற்று அமெரிக்க படை முற்றிலும் வெளியேறியது. ஷாம்சி தளத்தில் இருந்த 5 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த ரேடார்கள், உட்பட பல்வேறு நவீன கருவிகளை அகற்றி விட்டு, விமான தளத்தை பாகிஸ்தான் வசம் ஒப்படைத்து விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, ஷாம்சி தளம் பாகிஸ்தான் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று தெரிவித்தார்.]

400 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு : பழநி அருகே

400ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பூலாம்பட்டியில் பாழடைந்த தண்ணீரில்லாத கிணற்றில் ஓலைச்சுவடிகள் கிடந்தன. தொல்லியல் ஆர்வலர் நந்திவர்மன் இதனை கண்டுபிடித்து எடுத்துள்ளார். இந்த ஓலைச்சுவடிகள் 400 ஆண்டுகளுக்கு முந்தையவை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து நந்திவர்மன் கூறுகையில், `இதில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, மூதுரை, விநாயகர் அகவல், பழநி முருகன் காவடி சிந்து, பெரியநாயகி அம்மன் துதி, ராமாயண உரைநடை, மருத்துவச்சுவடிகள், திருமண மொய் கணக்கு, திருமண அழைப்பு, வரவு&செலவு ஓலைச்சுவடிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. இவற்றில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவை நகல்களுக்காக எழுதப்பட்டவை என கருதுகிறேன். சிலவற்றில் இதுவரை அச்சில் வராத தெய்வப் பாடல்கள் தூய தமிழில் உள்ளன.
திருமண சுவடியில் மணமக்களின் பெயர் மற்றும் மொய் அளித்தவர்களின் விபரங்கள் உள்ளன. வரவு & செலவு சுவடியில் வட்டிக்கு பணம் கொடுத்த விபரம், அதற்கு ஈடாக பெற்ற பொருட்களின் விபரங்கள் உள்ளன. ஓலைச்சுவடிகள் 40 செமீ நீளம், 3 செமீ அகலத்தில் உள்ளன. வடமொழி சொற்கள் ஆங்காங்கே அரிதாக உள்ளன. இந்த சுவடிகள் அருங்காட்சியக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்’ என்றார்.

இன்று அரையாண்டுத் தேர்வு தொடக்கம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
தமிழகத்தில் 33326 தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 10815 நடுநிலைப் பள்ளிகள், 5020 உயர்நிலைப் பள்ளிகள், 5369 மேனிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 8வரை உள்ள வகுப்புகளில் மொத்தம் 9935624 மாணவ மாணவியர் படிக்கின்றனர். உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 5063194 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் சமச்சீர் கல்வியை கொண்டு வருவதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக 60 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் குறைந்த கால அளவில் காலாண்டுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கமான காலத்துக்குள் இப்போது அரையாண்டுத் தேர்வுகள் நடக்கிறது. அரையாண்டுத் தேர்வு இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. 24ம் தேதி சனிக்கிழமை என்பதால் அன்று முதல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. 9 நாள்கள் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் இயங்கும்.