Monday, 12 December 2011

2012 ஏப்ரல் முதல் பி.எப் பாஸ்புக் வழங்க திட்டம் :

ஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்டம் & 1952ன்படி, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பி.எப் பங்கேற்பாளர் அட்டை வழங்க வேண்டும் என்பது கட்டாயம். அதில் மாதந்தோறும் இருப்பு பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆனால், எந்த ஒரு நிறுவனமும் இதை பின்பற்றவில்லை.
இந்நிலையில், 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுமார் 5 கோடி பி.எப் சந்தாதாரர்களுக்கு பங்கேற்பாளர் அட்டை வழங்குவது குறித்து, வரும் 23ம் தேதி நடைபெற உள்ள பி.எப் அமைப்பின் அதிகாரம் படைத்த மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அட்டையில், கணக்கு எண், இருப்புத் தொகை, பிறந்த தேதி, வாரிசுதாரர் என பி.எப் கணக்கு பற்றிய அனைத்து விவரங்களும் இதில் இடம் பெறும்.
ஏற்கனவே, கட்டுமானத் தொழில் உட்பட அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பி.எப் பாஸ்புக் வழங்க வாரியம் திட்டமிட்டது. எனினும், ஊழியர்கள் அடிக்கடி நிறுவனம் மாறுவதால் சிக்கல் ஏற்படும் என கருதி இந்த திட்டத்தை கைவிட்டது. அதேநேரம், இதுபோன்ற பிரச்னையை சமாளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டத்தை வகுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

No comments:

Post a Comment