அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
தமிழகத்தில் 33326 தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 10815 நடுநிலைப் பள்ளிகள், 5020 உயர்நிலைப் பள்ளிகள், 5369 மேனிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 8வரை உள்ள வகுப்புகளில் மொத்தம் 9935624 மாணவ மாணவியர் படிக்கின்றனர். உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 5063194 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் சமச்சீர் கல்வியை கொண்டு வருவதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக 60 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் குறைந்த கால அளவில் காலாண்டுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கமான காலத்துக்குள் இப்போது அரையாண்டுத் தேர்வுகள் நடக்கிறது. அரையாண்டுத் தேர்வு இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. 24ம் தேதி சனிக்கிழமை என்பதால் அன்று முதல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. 9 நாள்கள் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் இயங்கும்.
No comments:
Post a Comment