Friday, 6 January 2012

பெற்றோர் எதிர்ப்பு : பிளஸ் 2 காதல் ஜோடி ஊட்டியில் விஷம் குடித்தனர்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவனும், மாணவியும் ஊட்டியில் விஷம் குடித்தனர்.
ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே புல்வெளியில் ஒரு இளம்பெண் ணும், வாலிபரும் படுத்து கிடந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி மயக்கமடைந்து கிடந்தனர். ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நள்ளிரவு இருவருக்கும் மயக்கம் தெளிந்தது.
அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் மேலமங்கலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர், கீழமுடிமானை சேர்ந்த 18 வயது இளம் பெண் என்பது தெரியவந்து. இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இது இருவரது பெற்றோருக்கும் தெரியவர ‘படிக்கிற வயசுல காதலா’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனமுடைந்த இருவரும், கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஊட்டி வந்தனர். இருவரையும் காணாமல் பெற்றோர் தவித்தனர். போலீசார் இவர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில், ஊட்டியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இருவரும், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இருவரது பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காதல் ஜோடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிளஸ் 2 காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட பக்கிகளா காதல்னா என்னப்பா???
முதல்ல நல்ல படுச்சு வேலைக்கு போ!!!! நல்லா புடுச்ச பொண்ண பாரு!!!!! கல்யாணம் பண்ணு!!!
அப்ப LOVE பண்ணு........ குழந்தை பொறக்கும்... LOVE .... LOVE ... LOVE ... பண்ணிகிட்டே இரு..  சாகும் வரைக்கும்...
இந்த LOVE எல்லாம் சூடு குறைஞ்சா காத்துல பறந்துடும் தம்பி....
அதுதாண்டா LOVE... காதல் ... எல்லாமே!!!

மேற்குவங்காளம் : குமரி மத்திய ரிசர்வ் படை வீரரை சுட்டுக்கொன்றது கேரள வீர

இன்னொருவரை கொன்று தானும் தற்கொலை
மேற்குவங்காளத்தில் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட மார்த்தாண்டம் சி.ஆர்.பி.எப் வீரரை அவருடன் பணியாற்றிய சக வீரரே சுட்டுக்கொலை செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் மேலும் ஒருவரை கொன்று, தானும் தற்கொலை செய்துள்ளார்.
குமரிமாவட்டம் மார்த்தாண்டம் பம்பத்தைசேர்ந்தவர் குமார்(36). மேற்குவங்காளத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி வந்தார். அங்குள்ள சீதாபுரா பகுதியில் குமார் உட்பட 183 வீரர்கள் நக்சலைட்டுகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள முகாமில் தங்கி அவர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த இருதினங்களுக்கு முன் குமார் மற்றும் அவருடன் பணியாற்றிய திருவனந்தபுரத்தை சேர்ந்த துளசிதரன், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரியாஸ் அகமதுபட் ஆகியோர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சீதாபுரா மாவட்ட எஸ்.பி திரிபாதி, சம்பவ இடத்திற்கு சென்று சக வீரர்களிடம் விசாரணை நடத்தினார். இதில், வீரர்களிடையே நடந்த மோதலில் 3 பேரும் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
சம்பவத்தன்று வீரர்கள் துளசிதரன், குமார், ரியாஸ் அகமதுபட் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துளசிதரன், ஏ.கே. ரக துப்பாக்கியால் குமாரை யும், ரியாஸ் அகமது பட்டையும் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலே பலியாயினர்.
இதனைத்தொடர்ந்து துளசிதரன், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
அரசு மரியாதையுடன் அடக்கம்
இதனிடையே பலியான மார்த்தாண்டம் பம்மத்தை சேர்ந்த வீரர் குமாரின் உடல் நேற்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து டிஎஸ்பி தினேஷ் தலைமையிலான வீரர்கள், துணை ராணுவ வாகனத்தில் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.
அவரது உடலுக்கு குமரிமாவட்ட எஸ்.பி லட்சுமி மற்றும் போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க, குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  (Dinakaran)

தலைமையாசிரியர் சஸ்பெண்ட் : வேலை நேரம் முடியும் முன் பள்ளியை மூடிச் சென்றார்

விழுப் புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமசாமி விக்கிரவாண்டி ஒன்றியம் பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியை நேற்று முன்தினம் மாலை 3.50 மணிக்கு பார்வையிட வந்தார். அப்போது பள்ளி எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டிருந்தது. கிராம மக்களிடம் விசாரித்ததில் தலைமை ஆசிரியர் பள்ளியை, வேலை நேரம் முடிவதற்கு முன்பாக மாலை 3.45 மணிக்கே மூடிவிட்டு சென்றதாக கூறினர். பள்ளி பணி நேரம் முடிவதற்கு முன்பாகவே மூடிவிட்டுச் சென்றதால், 55 மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டதாக கூறி தலைமை ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மயிலம் ஒன்றியம் ரெட்டணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு தாமத மாக வந்ததால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் வல்லம் ஒன்றியம் மேல் களவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு செய்தபோது 6, 7, 8 வகுப்புகளில் மாணவர்களின் காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் சரிவர மதிப்பிடப்படாமலும், மதிப்பெண் பதிவேட்டில் பதியப்படாமலும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

சாத்தூர் : பால் : பரபரப்பை ஏற்படுத்திய வேப்பமரம்

சாத்தூர் அருகே வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து அதிசயித்து செல்கின்றனர். பரபரப்பை ஏற்படுத்திய வேப்பமரம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது குமாரரெட்டியாபுரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் முன்புறம் உள்ள ஒரு வேப்ப மரத்தில் திடீரென பால் வடியத் துவங்கியது. இதனை பொதுமக்கள் வந்து அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த தகவல் அக்கம், பக்கத்தில் உள்ள ஊர்களுக்கும் பரவியது.
சாத்தூர், கத்தாழம்பட்டி, வாழவந்தாள்புரம், அம்மாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பால் வடியும் அதிசய வேப்பமரத்தை காண வந்தனர். மரத்திலிருந்து வடிந்த பால் மரத்தை சுற்றிலும் தேங்கி நின்றது. பொதுமக்கள் சிலர் வேப்பமரத்திற்கு மஞ்சள் நீரூற்றி அபிஷேகம் செய்து, சிவப்பு சேலை சுற்றி அம்மனாக வழிபடத் துவங்கினர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளும் பால்வடியும் வேப்பமரத்தை கண்டு வணங்கினர்.
இதுகுறித்து கோயில் பூசாரி சீனிவாசன் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக, இதே வேப்பமரத்தில் பால் வடிந்தது, அப்போதும் ஊர்மக்கள் கூடி வேப்பமரத்தை அம்மனாக நினைத்து வழிபட்டனர். இன்று மீண்டும் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் மீண்டும் அம்மன் அவதாரம் எடுத்துள்ளதாக கருதி பொதுமக்கள் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர், என்றார்.
இதுகுறித்து தனியார் கல்லூரி தாவரவியல்துறை பேராசிரியர் தங்கப்பாண்டியன் கூறுகையில், மரங்களில் பால்வடிவது என்பது ஒரு சாதாரண விசயம். லேடக்ஸ் வகையை சேர்ந்த மரங்களில் குறிப்பிட்ட காலங்களில் ஒருவித திரவம் வழியத் துவங்கும். வெள்ளெருக்கு, பால் அட்டங்குலை மற்றும் வேப்பமரங்களில் லேடக்ஸ் வகைகளில் மட்டுமே குறிப்பிட்ட காலங்களில் இதுபோல் பால் போன்ற திரவம் வடிவது இயற்கையானது தான்.
இதையே கிராம மக்கள் வேப்பமரத்தில் பால் வடிந்தவுடன் அம்மன் அருள் என்று வணங்க ஆரம்பித்து விடுகின்றனர், என் றார்.

Women get raped by provoking Men : Police Chief

Andhra Pradesh police chief V Dinesh Reddy feels ‘women provoke men to rape them by wearing flimsy clothes.’
Last week, he said the police cannot be faulted for the rise in rape cases. ‘It can’t be attributed to police failure. One of the factors is that the accused are getting provoked as women are getting fashionable, even in rural areas… it is one of the factors provoking the accused (towards rape),’ Reddy said.


Later claiming that his comments had been misinterpreted, look what he said. ‘What I meant was one of the factors behind rape cases was the provocative dresses worn by women over which police has no control.’!

பசுமை மாணவர்கள் : பள்ளியில் செயல்படும் நர்சரி

இயற்கையை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்குகின்றனர் பட்டிவீரன்பட்டி நாசுவிவி பள்ளி மாணவர்கள். தங்களது சொந்த முயற்சியில் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள நர்சரி மூலம் அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி நாசுவிவி பள்ளி தேசிய பசுமைப்படை மாணவர்கள் தாங்கள் மேற்கொண்ட யுக்தியினால் வெறும் மனித ஆற்றல் மூலம் இன்றைக்கு பெரிய நர்சரியையே பள்ளியில் உருவாக்கி உள்ளனர்.
இப்பள்ளி 15 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் மரங்களைக் கொண்டுள்ளது. இவற்றை வைத்தே மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக நர்சரியை உருவாக்கி பராமரித்து வருகின்றனர். இந்த மரங்களில் இருந்து விழும் விதைகளை பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் சேகரித்து வைத்துக் கொள்கின்றனர்.
பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒவ் வொரு வீடாகச் சென்று எண்ணெய் பாக்கெட் கவர்களை கீழே போடாமல் எங்களிடமே தாருங்கள் என்று கூறி குறிப்பிட்ட தினங்களில், சேகரித்து வைத்த கவர்களை பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு பகுதி மற்றும் கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் இப்பணிக்கு பொறுப்பேற்று பள்ளிக்கு பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து கொண்டு வருகின்றனர். பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்து மண் எடுத்து நிரப்பி பக்குவப்படுத்தப்பட் விதைகளை அதில் ஊன்றி வளரச் செய்கின்றனர்.
ஆரம்பத்தில் 100 கன்றுகளுடன் ஆரம்பித்த நர்சரியில் தற்போது 10 ஆயிரம் மரக்கன்றுகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. மேலும் 2 லட்சம் விதைகளும் உள்ளன. இதில் மயில்கொன்றை, வாகை உள்ளிட்ட விதைகள் 5 ஆண்டுகளானாலும் உழுத்துப்போகாமல் கெட்டித்தன்மையுடன் முளைக்கும் திறனுடன் இருக்கும்.
இவ்வாறு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் திண்டுக்கல் மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் இலவசமாக அனுப்பப்படுகிறது. மரக்கன்றுகள் நடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளதா?, நீர் மற்றும் பராமரிக்கும் திறன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தே இவை வழங்கப்படுகிறது.
தற்போது மாவட்டத்தில் எங்கு மரக்கன்றுகள் தேவைப்பட்டாலும் உடன் பட்டிவீரன் பட்டி பள்ளியைத்தான் பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் நாடி வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் கூறுகையில், மரம் வளர்ப்பினால் பல்வேறு பயன்கள் இருந்தாலும் இதில் பிளாஸ்டிக் ஒழிப்பும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இத்திட்டம் மூலம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிளாஸ்டிக் பையை வீதியில் எறியும் பழக்கத்தை மாற்றியுள்ளோம்.
இவற்றில் மரக்கன்று நடுவதின் மூலம் அதன் வீரியம் வெகுவாய் குறைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரித்தால் அதில் உள்ள பாலிபுரோபின், நச்சுவாயுவாக மாறி சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், மண்வளத்தையும் வெகுவாய் பாதிக்கும். தற்போது இதுபோன்ற அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. 12 அடி உயரம் வளர்ந்த கன்றுகள் கூட எங்களிடம் தயார் நிலையில் உள்ளது. அழிந்து வரும் மரங்களான அரசமரம், ஆலமரம், பூவரசு உள்ளிட்டவற்றை முக்கியத்துவம் கொடுத்து அதிகம் விளைவித்து வருகிறோம். இந்த முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு பள்ளியுமே ஒரு நர்சரியாக மாற முடியும் என்றார். 

உங்கள் வயது 18??? வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையா???

இந்திய தேர்தல் ஆணையம் 18 & 19 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் ஒன்றை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த முகாம் தமிழ்நாட்டில் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. 1.1.2012 அன்று தகுதியடைந்து, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். கல்லூரி மாணவர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பிரவீன்குமார் கூறினார்.
வாக்காளர் அட்டை தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ, தீயில் கருகி போனாலோ உரிய ஆதாரத்துடன் வாக்காளர்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் ரூ 25 செலுத்தி, புகைப்படத்துடன் விண்ணப்பித்தால் 2 வாரங்களுக்குள் புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கிடைக்கும். தமிழ்