விழுப் புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமசாமி விக்கிரவாண்டி ஒன்றியம் பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியை நேற்று முன்தினம் மாலை 3.50 மணிக்கு பார்வையிட வந்தார். அப்போது பள்ளி எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டிருந்தது. கிராம மக்களிடம் விசாரித்ததில் தலைமை ஆசிரியர் பள்ளியை, வேலை நேரம் முடிவதற்கு முன்பாக மாலை 3.45 மணிக்கே மூடிவிட்டு சென்றதாக கூறினர். பள்ளி பணி நேரம் முடிவதற்கு முன்பாகவே மூடிவிட்டுச் சென்றதால், 55 மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டதாக கூறி தலைமை ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மயிலம் ஒன்றியம் ரெட்டணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு தாமத மாக வந்ததால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வல்லம் ஒன்றியம் மேல் களவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு செய்தபோது 6, 7, 8 வகுப்புகளில் மாணவர்களின் காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் சரிவர மதிப்பிடப்படாமலும், மதிப்பெண் பதிவேட்டில் பதியப்படாமலும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
Excellent steps by the DEO. Must continue to monitor the activities of these educators. Thanks.
ReplyDelete