Friday, 6 January 2012

மேற்குவங்காளம் : குமரி மத்திய ரிசர்வ் படை வீரரை சுட்டுக்கொன்றது கேரள வீர

இன்னொருவரை கொன்று தானும் தற்கொலை
மேற்குவங்காளத்தில் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட மார்த்தாண்டம் சி.ஆர்.பி.எப் வீரரை அவருடன் பணியாற்றிய சக வீரரே சுட்டுக்கொலை செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் மேலும் ஒருவரை கொன்று, தானும் தற்கொலை செய்துள்ளார்.
குமரிமாவட்டம் மார்த்தாண்டம் பம்பத்தைசேர்ந்தவர் குமார்(36). மேற்குவங்காளத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி வந்தார். அங்குள்ள சீதாபுரா பகுதியில் குமார் உட்பட 183 வீரர்கள் நக்சலைட்டுகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள முகாமில் தங்கி அவர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த இருதினங்களுக்கு முன் குமார் மற்றும் அவருடன் பணியாற்றிய திருவனந்தபுரத்தை சேர்ந்த துளசிதரன், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரியாஸ் அகமதுபட் ஆகியோர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சீதாபுரா மாவட்ட எஸ்.பி திரிபாதி, சம்பவ இடத்திற்கு சென்று சக வீரர்களிடம் விசாரணை நடத்தினார். இதில், வீரர்களிடையே நடந்த மோதலில் 3 பேரும் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
சம்பவத்தன்று வீரர்கள் துளசிதரன், குமார், ரியாஸ் அகமதுபட் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துளசிதரன், ஏ.கே. ரக துப்பாக்கியால் குமாரை யும், ரியாஸ் அகமது பட்டையும் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலே பலியாயினர்.
இதனைத்தொடர்ந்து துளசிதரன், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
அரசு மரியாதையுடன் அடக்கம்
இதனிடையே பலியான மார்த்தாண்டம் பம்மத்தை சேர்ந்த வீரர் குமாரின் உடல் நேற்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து டிஎஸ்பி தினேஷ் தலைமையிலான வீரர்கள், துணை ராணுவ வாகனத்தில் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.
அவரது உடலுக்கு குமரிமாவட்ட எஸ்.பி லட்சுமி மற்றும் போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க, குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  (Dinakaran)

No comments:

Post a Comment