Friday, 9 December 2011

15ம் தேதி கடைசி நாள் : பென்ஷன்தாரர் உறுதிமொழி படிவம்


பென்ஷன்தாரர்கள் உறுதிமொழி படிவத்தினை வரும் 15-ம் தேதிக்குள் பென்ஷன் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்புநிதி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். திருச்சி துணை மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இருந்து வங்கி மூலமாக மாதாந்திர பென்ஷன் பெறும் பென்ஷன்தாரர்கள், தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான உறுதிமொழிப் படிவத்தை வங்கியில் பெற்று பூர்த்தி செய்து வரும் 15-ம் தேதிக்குள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தில் முகவரி, செல்போன் நம்பர் தவறாமல் குறிப்பிடவேண்டும். இந்த தகவலை திருச்சி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் சுதீப்தா கோஷ் தெரிவித்து உள்ளார்.
இந்த செய்தி உங்களை சார்ந்ததாக இல்லை எனினும் பிறருடன் பகிருந்து கொள்ளுங்கள். இதை பற்றி அறியாமல் இருக்கும் சிலர் இதை அறிய கூடும். அரசு ஊழியர்கள் லஞ்சம் என்ற பெயரில் முதியவர்களை அலைகளிக்கும் குற்றம் சிறிதாவது குறையும்.

சந்தனம், குங்குமம் கொடுத்து தமிழக ஐயப்ப பக்தர்களை வரவேற்கும் கேரள பஞ்., தலைவி

செங்கோட்டை எல்லையில் நெகிழ்ச்சி
முல்லை பெரியாறு பிரச்சனை யால் தமிழக&கேரள உறவு சீர் கெட்டு வரும் நிலையில் செங்கோ ட்டையை அடுத்த கேரள மாநி லம் ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி, உறுப் பினர்கள் தலை மையில் பொதுமக்கள் தமிழக ஐயப்ப பக்தர்களை வரவேற்று உபசரித்தது பக்தர்களை ஆனந்தமடைய வைத்தது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தால் தேனி, குமுளி, வழியாக சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு மலையாளிகள் இடையூறு செய்து வருவதால் பக்தர்கள் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்கின்றனர். ஆரியங்காவு பகுதியில் அவர்களுக்கு பஞ்சாயத்து தலைவி அய்யம்மாள் தலைமையில் பூ மற்றும் சந்தனம் கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினை தமிழக கேரள மக்களிடையே பிரிவினையை உருவாக்கி வருகிறது. காலம் காலமாக சகோதர்களாக வா ழ்கிற நிலை தற்போது பகையாக மாறி வருவது குறித்தும் இரு மாநிலங்களிலும் உள்ள பெரிய வர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். தேனி, குமுளி, வழியாக சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு கேரள மக்கள் இடையூறு செய்வதால் பக்தர் கள் செங்கோட்டை வழி யாக செல்கின்றனர். இதனால் இப் பகுதியில் ஐயப்ப பக்தர்க ளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேரள மக்களின் நல்லெண்ண நடவடிக்கையாக ஆரியங்காவு பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பூ, சந்தனம், குங் குமம், மற்றும் இனிப்பு வழங்கி கனிவோடு வரவேற்று சபரி மலை அனுப்பி வைக்கின்றனர்.
நேற்று ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி ஐயம்மாள், துணை தலைவர் சலீம், மற்றும் அப்பகுதி மக்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை வர வேற்று உபசரித்து சபரிமலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி அனுப்பினர்.
இந்த நிகழ்ச்சி பக்தர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. அத்துடன் ஆரியங்காவு, தென் மலை பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் பசி போ க்க கேரள மக்களால் அன்னதா னம் செய்யப்படுகிறது. இதில் கேரள மக்களின் பாரம்பரிய உணவான கப்பை கிழங்கு, கஞ்சி வழங்கப்பட்டது.
ஒரு சில கேரள அரசியல் வாதிகளால் தமிழக & கேரள உறவு பாதிக்கப்படும் நிலையில் ஆரியங்காவு பகுதி மக்களின் நல்லெண்ண உபசரிப்பு ஐயப்ப பக்தர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. (Tamil Murasu)

குழந்தைகளின் படிப்புக்காக ஊர் ஊராக ஆடு மேய்க்கும் தம்பதி

கல்விக்கு முதல் மரியாதை
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். கல்வியின் முக்கியத்துவத்தை இதன்மூலம் அறியலாம். அழியாத செல்வமான கல்வியை கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும் என்பதால் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போதைய சூழலில் கல்வி வியாபாரமாகி வருவது ஒரு புறம் இருந்தாலும் அரசு பள்ளிகளில் கல்வி இலவசம்தான். இருந்தாலும் பொருளாதார சூழல் காரணமாக குழந்தைகளின் கல்விக்கு தடை ஏற்படுகிறது.
சிதம்பரம் பைபாஸ் சாலை அருகே மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ள செம்மறி ஆடுகள்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நடுவங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், இவரது மனைவி ராமு. ஊரில் சரியான வேலை கிடைக்காததால் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை ஊர் ஊராகச்சென்று மேய்த்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.
தற்காலிக குடிசை அமைத்து தங்கியிருக்கும் கிருஷ்ணன், ராமு தம்பதியர்.
பல வருங்களுக்கு முன் ஊரை விட்டு குடும்பத்துடன் புறப்பட்ட இவர்கள் தற்போது சிதம்பரம் பைபாஸ் சாலை அருகே குடிசை அமைத்து செம்மறி ஆடுகளை மேய்த்து வருகின்றனர். ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டும் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். வறட்சி காரணமாக இவர்கள் ஊரை விட்டு வெளியேறி நாடோடியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுமார் 300 செம்மறி ஆடுகள் உள்ளன். வளர்ந்த பெரிய ஆட்டை மட்டுமே இவர்கள் விற்பனை செய்கின்றனர். ரூ 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்தப்பணத்தில் கொஞ்சம் இவர்கள் வைத்துக் கொண்டு மீதியை ஊரில் தாத்தா பராமரிப்பில் இருந்தபடியே பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குமராட்சி, புவனகிரி, காரைக்கால், நாகூர், கடலூர், சீர்காழி, திருவண்ணாமலை, நகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதியிலேயே இவர்கள் ஆடு மேய்த்து வருகின்றனர். வயதான தாய், தந்தை மட்டுமே சொந்த கிராமத்தில் உள்ளனர். இவர்களை போலவே இவர்களின் ஊரை சேர்ந்த பலரும் ஆடு மேய்த்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
ராமு கூறுகையில், வறட்சி மற்றும் விவசாயம் செய்ய முடியாததால் பிழைப்பு நடத்துவதற்காக நாங்கள் ஊர்விட்டு ஊர்வந்து ஆடு மேய்து வருகிறோம். தலைமுறை, தலைமுறையாக இது நடந்து வருகிறது. நாங்கள் தான் படிக்கவில்லை எங்கள் பிள்ளைகளாவது நல்லமுறையில் படித்து பெரியவேலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில் தான் மழை, வெயில் என்று பாராமல் ஆடுமேய்த்து வருகிறோம். காடு, மேடு என்று பாராமல் படுத்து தூங்குகிறோம், எல்லாம் எங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக என்று பெருமிதத்துடன் கூறினார். குழந்தைகளை வேலைக்கு அனுப்பி அந்த பணத்தில் குடும்பம் நடத்தும் பெற்றோர் மத்தியில் குழந்தைகளின் படிப்புக்காக ஊர் ஊராகச்சென்று ஆடுமேய்த்து வரும் கிருஷ்ணன்&ராமு தம்பதியர் வித்தியாசமானவர்கள்தான். (Tamil Murasu)

அணு மின் நிலையத்தை மூடக் கோரி 39 கிராமத்தினர் இன்று பைக் ஊர்வலம்

நெல்லை மாவட்டம், கூடங் குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 4 மாதங் களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் அணு மின் நிலையம் திணறி வருகிறது. இதனால் மின் உற்பத்தி தள்ளிப் போவதோடு கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக செலவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 116வது நாளாக இடிந்தகரையில் லூர்து மாதா ஆலய வளாகத்தில் போராட்டக்குழு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந¢தது. போரட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கூடங்குளம் பத்ரகாளியம்மன் கோயில் முன்பிருந்து கூடங்குளம் அணு மின¢ நிலைய பாதிப்புகள் குறித்து 30 கி.மீ., சுற்று வட்டார பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போராட்டக் குழு சார்பில் இரு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் கூடங்குளம், செட்டிகுளம், பெருமணல், கூட்டப்புளி வழியாக சுமார் 30 கி.மீ., சுற்றளவுள்ள பகுதிகளை வலம் வந்தது. இதில் 39 கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கறுப்பு பனியன் அண¤ந்து பங்கேற்றனர். இலங்கை மீனவர்கள் பிடித்துச் சென்றுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் ஊர்வலத்தில் வலியுறுத்தப் பட்டது. இதை முன்னிட்டு கூடங்குளத்தில் முழு கடைய டைப்பு போராட்டமும் நடந்தது.

மெக் டொனால்டு நிறுவனத்துக்கு ரூ 9.18 கோடி ‘பைன்’ : குழந்தை உணவுக்கு கடும் எதிர்ப்பு

மெக் டொனால்டு நிறுவனத்தின் ‘ஹேப்பி மீல்’ உணவு பொருள்கள் குழந்தைகளின் உடல்நலனை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி அந்நிறுவனத்துக்கு பிரேசில் கோர்ட் ரூ.9.18 கோடி அபராதம் விதித்துள்ளது. 
உலகம் முழுவதும் கிளைகள் வைத்து உணவு பொருள் விற்பனை செய்து வரும் நிறுவனம் மெக் டொனால்டு. அமெரிக்காவில் 60 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த நிறுவனம். இந்நிறுவனம் ‘ஹேப்பி மீல்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு பொருள்களை 1979&ல் அறிமுகப்படுத்தியது. இது கிப்ட் பாக்ஸ் போல இருக்கும். ஹம்பர்கர், சீஸ் பர்கர், சிக்கன் மெக் நகட்ஸ், சாஸ், குளிர்பானம் ஆகியவை மட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை ஒன்றும் அதில் இருக்கும். உலகின் பல நாடுகளிலும் இதை மெக் டொனால்டு விற்பனை செய்து வருகிறது. உணவுகள்கூட சில நேரம் பொம்மை வடிவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்நிலையில், ஹேப்பி மீல் உணவுகள் குழந்தைகளின் உடல்நலனை கெடுப்பதாக பிரேசிலில் புகார் எழுந்தது. தொடர்ச்சியாக ஹேப்பி மீல் சாப்பிடுவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வீட்டு உணவுகளில் இருந்து அவர்களை அகற்றி, அடிமையாக்குகிறது என்று புகாரில் கூறப்பட்டது.
இதையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சாபாலோ கோர்ட், மெக்டொனால்டு நிறுவனத்துக்கு ரூ.9.18 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Hospital Catches Fire : 62 Killed in Kolkata

At least 62 people were killed and several others injured in a massive fire that broke out at the AMRI hospital in south Kolkata early this morning. 
West Bengal chief minister Mamata Banerjee said said: "The negligence as an unforgivable crime and assured harsh punishment possible for those found responsible. 


The CM said the licence of the AMRI hospital would be cancelled with immideate effect. "Quick action will be taken against the hospital after proper inquiry," she said. 

Nearly 160 patients were admitted in the Dhakuria building, where fire broke out in the wee hours, hospital sources said. 


Only 85 patients were rescued and removed to two other units of the same hospital located at Mukundapur and Saltlake. But the hospital authority could not confirm the condition of remaining 75 patients, they added. 


Meanwhile, fire department lodged an FIR against AMRI hospital authorities. The fire brigade in its complaint said that the hospital authority did not have the adequate fire-preventive mechanism and emergency evacuation system in place. 


Initial report hinted that most of the victims were admitted at orthopaedic ward and majority of them were immovable. 


Hundreds of relatives of the patients are waiting in front of the hospital. Till now, no official communication has been made by the hospital authority. 


Locals and fire officials who started the rescue work alleged that most of the hospital staffs fled soon after fire broke out. 


The report also confirmed that most of the patients are victim of suffocation as thick smoke covered the entire building. 


In the wee hours smoke was first noticed billowing out from the basement of the hospital building. Smoke soon spread inside the hospital building which is centrally air conditioned. Fire brigade was informed but before they could reach flames engulfed the entire building as the basement was packed off inflammable articles. 


Thick smoke covered the entire hospital causing suffocation of the patients. Local joined hand with police and fire brigade officials to rescue the patients. 


Till now, the hospital authority admitted that bodies of 15 patients have been recovered but more feared trapped inside the fourth floor of the building. Fire fighters now managed to scale up in the floor and started working. State minister Firhad Hakim and Javed khan are at the spot. They also admitted that the toll may rise more. 


The fire broke out in the early hours at the basement where hospital chemicals and medical waste were stocked. 


Fire service minister Javed Khan said that 80 per cent of the patients have been removed to other facilities.

இந்தியா 3வது இடம் : அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதில்

2011ம் நிதியாண்டில் மட்டும் ரூ 23,400 கோடி மதிப்பில் போர் விமானங்கள், கருவிகள் வழங்குதற்கு இந்தியா & அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது
கடந்த 2010 & 11ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்கள், ஆயுதங்கள் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
போர் விமானங்கள், ஆயுதங்கள் உட்பட போர் கருவிகளை ஒப்பந்தப்படி வெளிநாடுகளுக்கு அமெரிக்க நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின் 2010&11ம் நிதியாண்டில் (அக்டோபர்&செப்டம்பர்) விற்பனை செய்த போர் கருவிகள் மதிப்பு, அதிகம் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலை டி.எஸ்.சி.ஏ. அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
அணுகுண்டு சோதனை நடத்தியபின் இந்தியாவுக்கு போர் கருவிகள் வழங்குவதை சில ஆண்டுகள் அமெரிக்கா நிறுத்தியது. அண்மையில், இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட சுமூக தீர்வுக்குப்பின் அமெரிக்கா மீண்டும் ஆயுதங்கள் வழங்குகிறது.
இதையடுத்து கடந்த 2011ம் நிதியாண்டில் மட்டும் ரூ 23,400 கோடி மதிப்பில் போர் விமானங்கள், கருவிகள் வழங்குதற்கு இந்தியா&அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது. இதன் மூலம் அந்த ஆண்டில் அமெரிக்காவில் இருந்து போர் கருவிகள் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்தது.
இதில் ரூ 28,000 கோடியுடன் ஆப்கன் பாதுகாப்பு படை முதலிடத்தையும், ரூ 25,480 கோடியுடன் தைபெய் பொருளாதார மற்றும் கலாச்சார பிரதிநிதி அலுவலகம் 2வது இடத்தையும் பிடித்தன.
ஆஸ்திரேலியா ரூ 20,280 கோடியுடன் 4வது இடத்தையும், அதை தொடர்ந்து சவுதி அரேபியா, ஈராக், யுஏஇ, இஸ்ரேல், ஜப்பான், சுவீடன் அடுத்தடுத்தடுத்த இடங்களை பிடித்தன.  (Dinakaran)

ஓட்டல்கள், கடைகளை போலீசார் சூறையாடினர் : லஞ்சம் கொடுக்காததால் ஆத்திரம்

மாமூல் கொடுக்காததால் திண்டி வனத்தில் ஓட்டல் மற்றும் கடைகளை போலீசார் சூறையாடினர். இதை கண் டித்து கடை உரிமையாளர் கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எடைக்குளம் கூட்டுரோடு புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற் பட்ட கடைகள் சாலையின் இருபுறமும் உள்ளன. இதில் டீக்கடை, ஓட்டல், கூல் டிரிங்ஸ் உள்ளிட்ட கடை கள் அடங்கும்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜீப்பில் வந்த இரண்டு போலீசார் 10க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் அத்துமீறி நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தோசை மாவு, சட்னி, சாம் பார் உள்ளிட்டவைகளை வெளியில் வீசினர். அங் கிருந்த டேபிள், சேர், டியூப் லைட் உள்ளிட்ட பொருட் களை அடித்து நொறுக் கினர்.
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு, மாமூல் கொடுக்காததால் இதனை செய்தோம் என தெரிவித்தார்களாம்.
மேலும் நியாயம் கேட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 10 பேரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காவல் நிலை யத்தில் வைத்து தாக்கி உள்ளனர். இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத் திருந்து நேற்று காலை அவர்களை விடுவித்துள் ளனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் புதுவை&திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தக வல் அறிந்து சம்பவ இடத் துக்கு வந்த டிஎஸ்பிக் கள் திண்டிவனம் குப்புசாமி, கோட்டக்குப்பம் முரு கேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் காவல்துறை சார் பில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து கடைக் காரர்கள் மறியலை கைவிட்டனர்.  (Dinakaran)
சிந்திப்போம். தெளிவடைவோம்
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு, மாமூல் கொடுக்காததால் இதனை செய்தோம் என தெரிவித்தார்களாம்.
** போலீசார் பொது இடத்தில் அப்படி வெளிபடையாக சொல்வார்களா???
** போலீசார் இத்தனை அட்டூழியங்களை செய்யும் வரை அனைவரும் பார்த்து கொண்டா இருந்தார்கள்???
இவையனைத்தும் உண்மை எனில் போலீசின் செயல் கண்டிக்கப்பட வேண்டிய செயல்தானே???.

மாநகராட்சி பியூனுக்கு ரூ 12 கோடி சொத்து

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயின் மாநகராட்சியில் பியூன் ஒருவரின் வீட்டில் லோக் அயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான பணம், நகைகள் மற்றும் ரூ 12 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின.
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயின் மாநகராட்சியில் தற்போது ஸ்டோர் கீப்பராக பணியாற்றுபவர் நரேந்திர தேஷ்முக். கடந்த 1978ல் பியூனாக மாதம் ரூ 150 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்த இவர், இத்தனை ஆண்டுகளில் சம்பளமாக அதிகபட்சமாக ரூ 15 லட்சம்தான் வாங்கியிருப்பார். ஆனால், இவர் மிக ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். மாநகராட்சியில் நடந்த பல ஊழல்களில் அதிகாரிகளுடன் இவருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இவரை சஸ்பெண்ட் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, லோக் அயுக்தா போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரது பங்களாவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரொக்க பணம், தங்க நகைகள், எல்சிடி டி.வி.கள், 6 லேப்டாப், 10 செல்போன் மற்றும் ரூ 10 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள், ரூ 13 லட்சம் வங்கி டெபாசிட் சிக்கின. இதை பார்த்து போலீசாரே திகைப்படைந்தனர். பல வங்கிகளில் லாக்கர்கள் வைத்திருப்பதையும் கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் இன்று திறந்து சோதனை நடத்தவுள்ளனர்.
தேஷ்முக் சிக்கியதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய ஊழல் அதிகாரிகள் பலரும் மாட்டலாம் என தெரிகிறது. இதனால், உஜ்ஜயின் மாநகராட்சி அதிகாரிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
பக்கத்து வீட்டில் பண மழை
தேஷ்முக் பங்களாவில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்திய போது, பங்களாவில் இருந்தவர்கள் மாடிக்கு ஓடியிருக்கின்றனர். உடனே, போலீசாரும் வேகமாக பின்தொடர்ந்தனர். அப்போது அங்கிருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் அவர்களை பயமுறுத்தியது. ஒரு வழியாக போலீசார் மாடிக்கு சென்ற போது, நகைகள் மற்றும் பணத்தை பக்கத்து வீடுகளின் மாடிகளில் வீசியதை கண்டுபிடித்தனர். பின்னர், அவற்றை பறிமுதல் செய்தனர்.

24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி எண்

சென்னையில்  24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கலாம். குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.
வடக்கு மண்டலம் 90031 30104, 
தெற்கு மண்டலம் 90031 30102, 
கிழக்கு மண்டலம் 90031 30101, 
மேற்கு மண்டல மக்கள் 98408 24100 
போக்குவரத்து பிரச்னைகள் 90031 30103
குறுஞ்செய்திகள் 95000 99100 என்ற எண்ணுகளுக்கு அனுப்பலாம்.
சென்னை போலீஸ் தெற்கு, வடக்கு, மத்திய என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்கள் அவசர இலவச அழைப்பான 100ஐ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் தற்போது தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொது மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு செல்போன் எண் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் குறைகளை தெரியபடுத்தவும், அவசர தேவைக்கும் தொடர்பு கொள்ளலாம். குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமும் தகவல் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் தகவல்களை தெரிவிக்கலாம்.  (தினகரன்)