Friday, 9 December 2011

அணு மின் நிலையத்தை மூடக் கோரி 39 கிராமத்தினர் இன்று பைக் ஊர்வலம்

நெல்லை மாவட்டம், கூடங் குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 4 மாதங் களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் அணு மின் நிலையம் திணறி வருகிறது. இதனால் மின் உற்பத்தி தள்ளிப் போவதோடு கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக செலவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 116வது நாளாக இடிந்தகரையில் லூர்து மாதா ஆலய வளாகத்தில் போராட்டக்குழு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந¢தது. போரட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கூடங்குளம் பத்ரகாளியம்மன் கோயில் முன்பிருந்து கூடங்குளம் அணு மின¢ நிலைய பாதிப்புகள் குறித்து 30 கி.மீ., சுற்று வட்டார பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போராட்டக் குழு சார்பில் இரு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் கூடங்குளம், செட்டிகுளம், பெருமணல், கூட்டப்புளி வழியாக சுமார் 30 கி.மீ., சுற்றளவுள்ள பகுதிகளை வலம் வந்தது. இதில் 39 கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கறுப்பு பனியன் அண¤ந்து பங்கேற்றனர். இலங்கை மீனவர்கள் பிடித்துச் சென்றுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் ஊர்வலத்தில் வலியுறுத்தப் பட்டது. இதை முன்னிட்டு கூடங்குளத்தில் முழு கடைய டைப்பு போராட்டமும் நடந்தது.

No comments:

Post a Comment