Friday 9 December 2011

இந்தியா 3வது இடம் : அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதில்

2011ம் நிதியாண்டில் மட்டும் ரூ 23,400 கோடி மதிப்பில் போர் விமானங்கள், கருவிகள் வழங்குதற்கு இந்தியா & அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது
கடந்த 2010 & 11ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்கள், ஆயுதங்கள் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
போர் விமானங்கள், ஆயுதங்கள் உட்பட போர் கருவிகளை ஒப்பந்தப்படி வெளிநாடுகளுக்கு அமெரிக்க நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின் 2010&11ம் நிதியாண்டில் (அக்டோபர்&செப்டம்பர்) விற்பனை செய்த போர் கருவிகள் மதிப்பு, அதிகம் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலை டி.எஸ்.சி.ஏ. அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
அணுகுண்டு சோதனை நடத்தியபின் இந்தியாவுக்கு போர் கருவிகள் வழங்குவதை சில ஆண்டுகள் அமெரிக்கா நிறுத்தியது. அண்மையில், இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட சுமூக தீர்வுக்குப்பின் அமெரிக்கா மீண்டும் ஆயுதங்கள் வழங்குகிறது.
இதையடுத்து கடந்த 2011ம் நிதியாண்டில் மட்டும் ரூ 23,400 கோடி மதிப்பில் போர் விமானங்கள், கருவிகள் வழங்குதற்கு இந்தியா&அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது. இதன் மூலம் அந்த ஆண்டில் அமெரிக்காவில் இருந்து போர் கருவிகள் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்தது.
இதில் ரூ 28,000 கோடியுடன் ஆப்கன் பாதுகாப்பு படை முதலிடத்தையும், ரூ 25,480 கோடியுடன் தைபெய் பொருளாதார மற்றும் கலாச்சார பிரதிநிதி அலுவலகம் 2வது இடத்தையும் பிடித்தன.
ஆஸ்திரேலியா ரூ 20,280 கோடியுடன் 4வது இடத்தையும், அதை தொடர்ந்து சவுதி அரேபியா, ஈராக், யுஏஇ, இஸ்ரேல், ஜப்பான், சுவீடன் அடுத்தடுத்தடுத்த இடங்களை பிடித்தன.  (Dinakaran)

No comments:

Post a Comment