Friday, 27 January 2012

குடியரசு தின சோகம் : ‘உயிரை பறித்த சாதனை முயற்சி’

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட குடியரசு தினவிழாவில் ஜிம்னாஸ்டிக் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள் தடுமாறி விழுந்ததில் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவத்தால் ஊட்டியில் உற்சாகமாய் தொடங்கிய குடியரசு தின கொண்டாட்டம் சோகத்துடன் முடிவடைந்தது.

பயணிகளை காப்பாற்றிய டிரைவர் குடும்பத்துக்கு 1.5 லட்சம் வழங்கிய பேராசிரியர்

பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் தன் உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றினார் அரசு பஸ் டிரைவர். அவரது தியாகத்தை போற்றும் வகையில் விபத்தில் காயமடைந்த பேராசிரியர் டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.1.5 லட்சம் வழங்கினார்.

இன்ஸ்பெக்டர் லீலை : தக்கலையில் கையும் களவுமாக சிக்கியதால் பரபரப்பு

குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன் தனியாக இரவு ரோந்து சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணி அளவில் அவர் தனது லிமிட்டை தாண்டி தக்கலை பகுதிக்குள் நுழைந்துள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த திடீர் தடை

பேஸ்புக், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலை தளங்களை பயன்படுத்த ராணுவத்தினருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.