Friday, 27 January 2012

இன்ஸ்பெக்டர் லீலை : தக்கலையில் கையும் களவுமாக சிக்கியதால் பரபரப்பு

குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன் தனியாக இரவு ரோந்து சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணி அளவில் அவர் தனது லிமிட்டை தாண்டி தக்கலை பகுதிக்குள் நுழைந்துள்ளார்.
சுற்றும் முற்றும் பார்த்த அவர் திடீரென ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள வீட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த இளம்பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார். இந்த சமயத்தில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கியை அணைத்து வைத்துள்ளார்.
இதற்கிடையே எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து இன்ஸ்பெக்டரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டுள்ளனர். அவரை பிடிக்க முடியாததால் அவர் பணிபுரியும் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உடனடியாக இன்ஸ்பெக்டரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொள்ளச்செய்யுங்கள் என கட்டளையிட்டனர்.
உஷாரான போலீசார் இன்ஸ்பெக்டரின் தனிப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினர். தொடர்ந்து அவர் இளம்பெண்ணுடன் படுக்கை அறையில் இருந்தவாறு வாக்கிடாக்கியை இயக்கி உயர் அதிகாரிகளிடம் பேசி சமாளித்தார். நள்ளிரவு நேரம் என்பதால் இன்ஸ்பெக்டர் வாக்கிடாக்கியில் பேசும் சத்தமும் எதிர் முனையில் அதிகாரியின் சத்தமும் தெளிவாக வெளியே கேட்டது.
இதை உன்னிப்பாக கேட்ட பக்கத்து வீட்டு பெண் ஒருவர் இன்ஸ்பெக்டரின் லீலைகள் குறித்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டருக்கும் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கும் தகாத உறவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் அந்த பெண், இன்ஸ்பெக்டரை எப்படியும் கையும்களவுமாக பிடித்துவிடவேண்டும் என அந்த பகுதியில் உள்ள சில ஆட்களுடன் இன்ஸ்பெக்டர் சென்ற வீட்டை முற்றுகையிட்டார். அந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர் கதவை திறந்து வெளியே வந்தார்.
வந்தவர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். மீண்டும் அவருக்கு வியர்த்து கொட்ட துவங்கியது. திருதிருவென முழித்த அவர் அங்கிருந்து நகர முடியாமல் தவித்தார். இதற்கிடையே போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி சில போலீசாரும் அங்கு போய் சேர்ந்தனர். அவர்களை கண்டதும் இன்ஸ்பெக்டர் நெளிந்த படி அங்கிருந்து நழுவி சென்றார்.
வந்தவர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். மீண்டும் அவருக்கு வியர்த்து கொட்ட துவங்கியது. திருதிருவென முழித்த அவர் அங்கிருந்து நகர முடியாமல் தவித்தார். இதற்கிடையே போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி சில போலீசாரும் அங்கு போய் சேர்ந்தனர். அவர்களை கண்டதும் இன்ஸ்பெக்டர் நெளிந்த படி அங்கிருந்து நழுவி சென்றார்.
இந்த தகவல்கள் நெல்லை சரக டி.ஐ.ஜி.க்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை அழைத்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. (Dinakaran)

No comments:

Post a Comment