பேஸ்புக், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலை தளங்களை பயன்படுத்த ராணுவத்தினருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், கூகுள், ஆர்குட் போன்ற சமூக வலை தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் அளிக்க சமூக வலை தளங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. முறைப்படி பதில் அளிக்காவிட்டால் அவற்றுக்கு தடை விதிப்போம் என ஐகோர்ட் எச்சரித்திருந்தது.
இதைத் தொடர்ந்து கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்தன. கருத்துக்களை தணிக்கை செய்வது கடினம் என மனுவில் கூறியிருந்தன. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட ஏற்கனவே ராணுவத்தினருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தில் 36 ஆயிரம் அதிகாரிகளும், 11.3 லட்சம் வீரர்களும் உள்ளனர். இவர்களில் யார், யார் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள், என்னென்ன தகவல்களை பதிவு செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பது சிரமம் என்பதால் தற்போது ஒட்டுமொத்தமாக சமூக வலை தளங்களை பயன்படுத்த ராணுவத்தினருக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தினர் சம்பந்தப்பட்ட தகவல்களை அவர்களது குடும்பத்தினரும் வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் ராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment