Wednesday, 25 January 2012

திருவட்டார் : 80 வயது மூதாட்டியை விரட்டியடித்த போலீசார்

திருவட்டார் காவல் நிலையத்தில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சுமார் 80 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் தனது மகன் மற்றும் மருமகள் கொடுமை படுத்துவதாக தனது மற்றொரு மகனுடன் புகார் கொடுக்க வந் தார். அப்போது அங்கு இருந்த ஏட்டு ஒருவர் இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறி கடின வார்த்தைகளால் பேசி வெளியே அனுப்பினார். அழுது கொண்டே வெளியே வந்த மூதாட்டியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
தனது பெயர் தெரசம்மாள். சொந்த ஊர் திருவட்டார் அடுத்த வியென்னூர். கணவர் சில வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். தனக்கு 4 மகன், 4 மகள் உள்ளனர். இதில் 7 பேருக்கு திருமணம் நடந்து விட்டது. ஒரு மகள் மனநோயாளி. அவர் தன்னுடன் உள்ளார். விலை மதிக்கத்தக்க 80 சென்ட் நிலம் தனக்கு உள்ளது. இதில் மகன்கள் அனைவரும் தனிக்குடித்தனர் நடத்தி வருகிறார்கள். 2வது மகன் மட்டும் தனக்கும் என் மகளுக்கும் உணவு வழங்கி வருகிறான். மற்றவர்கள் விரட்டி அடிக்கிறார்கள். நேற்று ஒரு மகன் என்னை கீழே தள்ளினான். மருமகள் முகத்தில்எச்சி துப்பி னார். நிலத்தில் உள்ள வருவாயை எடுக்க அனுமதிப்பதுஇல்லை. இது பற்றி புகார் கொடுக்க வந்தேன் இங்கு என்னை மிரட்டுகிறார்கள் என்றார்.
கண்ணீருடன் மூதாட்டியை பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் ஏட்டு மூதாட்டியை அழைத்து வந்த அவரது 2வது மகனிடம் மூதாட்டியை அழைத்து செல்... இல்லையானால் பிடித்து உள்ளே வைத்துவிடுவேன் என்று மிரட்டியதால் அவர் தனது தாயை அழைத்து கொண்டு சென்றார். இதைபார்த்த அந்த பகுதியினர் வேதனை அடைந்தனர்.

No comments:

Post a Comment