Saturday 19 May 2012

மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
குமரி மாவட்டத்தில் பள்ளி மேல்நிலை தேர்வு 22,884 மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். பள்ளி மேல்நிலை தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வரும் 22ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் பொழுது தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக அவர்கள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப் பித்துள்ளது.

கோடிமுனை : ரயிலில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி

குளச்சல் கோடிமுனையை சேர்ந்தவர் அல்போன்ஸ். இவரது மகன் ரெமி(38). இவர் கேரளாவில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி எர்ணாகுளத்திலிருந்து நாகர்கோவில் வரும் ரயிலில் பயணித்துள்ளார். கொல்லம் அருகே வந்துகொண்டிருந்த போது ரெமி தவறி கீழே விழுந்துள்ளார்.
kodimunai-kanyakumari-Distஇதில் ரெமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவரது செல்போனில் இருந்த சிம்கார்டு கிடைத்தது. அதை வைத்து நடத்திய விசாரணையில் அவர் குமரி மாவட்டம் கோடிமுனையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.