Saturday 19 May 2012

மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
குமரி மாவட்டத்தில் பள்ளி மேல்நிலை தேர்வு 22,884 மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். பள்ளி மேல்நிலை தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வரும் 22ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் பொழுது தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக அவர்கள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப் பித்துள்ளது.
எனவே பள்ளி மேல்நிலை தேர்வு எழுதியுள்ள இதுவரை பள்ளி இறுதி வகுப்பு (எஸ்எஸ்எல்சி) சான்றிதழை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யாதவர்கள், தங்கள் முழு முகவரி, குடும்ப அடையாள அட்டை, சாதி சான்றிதழ் விபரம் ஆகியவற்றுடன் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஏற்கனவே வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டை பெற்றிருப் பவர்கள், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்பொழுது அச்சான்றிதழ்கள், அப்பள்ளிகளிலேயே பதிவு செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அடையாள அட்டை இணையதளம் மூலம் வழங்கப்படும்.
தமிழக அரசு தற்போது ஏற்படுத்தியுள்ள இணையதள வசதியை பயன்படுத்தி மாணவ மாணவியர் தங்கள் கல்வி சான்றிதழை உரிய முறையில் பள்ளிகளிலேயே பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டையை எந்தவித சிரமமும் இன்றி பெற்றுக்கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment