Monday 21 May 2012

நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடபடுகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 30ம் தேதி வினியோகிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
+2-result-sms-on-mobileதேர்வு முடிவுகளை உங்கள் மொபைலில் மதிப்பெண்களுடன் SMS பெற உங்கள்...


பதிவு எண் :
பெயர் : 
மொபைல் நம்பர் :

பதிவு செய்யவும்
 click here : Get your +2 result SMS to your mobile with marks


பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிந்தன. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5557 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ மாணவிகள் எழுதினர்.
நாளை (22 ம் தேதி) காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளுடன் மதிப்பெண்களையும் இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ள தேர்வுத் துறை வசதிகள் செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல்கள் 30ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தனி தேர்வர்களை பொறுத்தவரை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்தே மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் வேண்டுவோர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டத்தில் உள்ள இணை இயக்குநர்கள் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் விண்ணப்பங்கள் கிடைக்காது.
விடைத்தாள் நகல் பெற கட்டணம்:
* மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றுக்கும் ரூ 550.
* இதர பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ 275.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதற்கான கட்டணங்களை தேசியமயமாக் கப்பட்ட வங்கியில், "இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை-6" என்ற பெயரில் டிடி, எடுத்து நேரடியாக ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment